காடு வளர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காடுவளர்ப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இங்கிலாந்தின் லின்கோல்ன்ஷையர், ராண்ட் வூட்டில் ஓர் காடு வளர்ப்பு திட்டம்.

ஒருபோதும் காடாக இருந்திராத நிலத்தில் விதைகளை விதைப்பதோ அல்லது மரங்களை நடுவதோ காடு வளர்ப்பு ஆகும். மீண்டும் காடாக்குதல் என்பது முற்றிலுமாக அழிந்து போன, உதாரணமாக மரங்கள் வெட்டப்பட்ட காட்டை மீண்டும் உருவாக்குவதாகும். நூறாண்டு காலமாக பல்வேறு நாடுகள் காடுகள் அழிக்கப்படுவதை எதிர்கொண்டு வருகின்றன. காடுகளை மீண்டும் உருவாக்கவும் உயிரியற் பல்வகைமை வாழ்வதற்கு உகந்த சூழலை உருவாக்குவதில் உதவவும் அரசாங்கங்களும் அரசு சாரா அமைப்புகளும் காடு வளர்ப்பு திட்டங்களில் நேரடியாகவே ஈடுபட்டு வருகின்றன. (இங்கிலாந்தில் காடு வளர்ப்பு என்பது நிலத்தை சட்ட ரீதியாக அரசு காடாக மாற்றுவதைக் குறிக்கப்படும்.) காடுகளின் வளத்தைப் பெருக்க நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.

  • நேர்மறை வினைகள் - மரம் நடுவது, காடு வளர்ப்பது மற்றும் காட்டின் பயனை விளம்பரம் செய்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது
  • எதிர்மறை வினைகள் - வனப்பாதுகாப்பு சட்டம் போன்றவற்றின் மூலம் காடுகளை அழிப்பதைத் தடுப்பது மற்றும் தண்டிப்பது

இவற்றில் முக்கியமானதும் முதன்மையானதும் காடு வளர்ப்பது என்ற நேர்மறை வினையாகும்.

வளர்வதற்கு தகுதியற்றதாய் தரிசாகி விடுகிறது.  கால்நடைகளால், குறிப்பாக ஆடு, மாடு,குதிரை போன்ற தாவரங்களை உண்ணும் விலங்குகளால் அளவுக்கு அதிகமாய் மேய்ச்சலுக்கு  ஆளாகுதல், காட்டு வளங்களை அளவுக்கு அதிகமாய் சூறையாடல் உள்பட ஏனைய காரணிகள் காரணமாக காடுகள் அளிக்கப்படுவது நடைபெறுகிறது. இவற்றின் காரணமாக பாலைநிலமாதல்

உலக பிராந்தியங்களில் காடு வளர்ப்பு[தொகு]

பிரேசில்[தொகு]

கடந்த சில நுற்றண்டுகளாக அமேசானில் தொடர்ந்து நடைபெற்று வரும்[1] தீவிரமான காடு அழிப்பின் விகிதச்சாரம் சிறிய அளவிலான காடு வளர்ப்பு முயற்சிகளின் விகிதத்தை விட மிகவும் அதிகமாகும். தேச அளவிலான அமேசான் மழை காடுகளை எண்ணிப்பார்க்கையில் இந்த கணக்கு காடு வளர்ப்பு முறையை முக்கியத்துவம் அற்றவையாகிவிடுகின்றன.[2]

சீனா[தொகு]

சீனா வரலாற்று ரீதியாக தான் பெற்று இருந்த காட்டுப்பகுதிகளில் பெரும்பாலனவற்றை முழுவதுமாக அழித்து விட்டிருக்கிறது. சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் தாக்குப்பிடிக்கக் கூடிய அளவுக்கும் அதிகமாக மரம் வெட்டுவது நடைபெறுவதால், மரம் வெட்டுதல் அதன் வரலாற்று மட்டத்திற்கும் மிகக் கீழே வீழுகின்ற கட்டத்தை சீனா அடைந்து விட்டது.[3] அது போக காடுகளை உருவாக்குவதற்கு அதிகாரப்பூர்வமாக சில குறி இலக்குகளை அதாவது 80 ஆண்டுகளை குறி இலக்காக நிர்ணயித்திருந்தாலும் 2008 ம் ஆண்டு வரையில் சொல்லும்படியாக எதையும் சாதித்திருக்கவில்லை. அதற்கு பதிலாக சீனப்பெருஞ்சுவர் போன்று ஒரு செயல்திட்டத்தால் இந்த தோல்வியை செய்துகொள்ள முயற்சிக்கிறது. இத்திட்டம்

  • மகத்தான அளவு மரங்களை நட்டு காடுகளை உருவாக்குவதையும்
  • கோபி பாலைவனம் விரிவடைவதை தடுத்து நிறுத்துவதையும் குறிக்கோளாக கொண்டிருக்கிறது.

1981ல் பிரகடனம் செய்யப்பட்ட சட்டம் பதினோரு வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனும் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு மரம் நடவேண்டும் என்று கோருகிறது. இதன் விளைவாக, 2008-ல் 47000 சதுர கிலோமீட்டர்கள் காட்டை வளர்த்து, காடு வளர்ப்பில் சீனா உலகில் உள்ள எந்த நாட்டையும் அல்லது பிராந்தியத்தையும் விட மிக உயர்ந்த நிலையில் உள்ளது.[4] ஆயினும், தலைவீத காட்டுப் பகுதி சர்வதேச சராசரியை விடவும் மிகவும் பின்தங்கி உள்ளது.[5] சீனாவுக்கான இலட்சிய திட்டங்களாக

ஐரோப்பா[தொகு]

ஐரோப்பாவும் அதன் வரலாற்று ரீதியான காடுகள் பெரும்பாலானவற்றை அழித்திருக்கிறது. 1990 களில் இருந்து ஐரோப்பிய ஒன்றியமானது, விவசாய நிலத்தை மீண்டும் காடுகளாக்க மானியம் வழங்குவது மற்றும் காடுகளை நிர்வகிக்க பண உதவி வழங்குவது என்று விவசாயிகளுக்கு பணம் வழங்கி காடுகள் வளர்ப்பதை ஊக்குவிக்கிறது 1993-க்கும் 1997 க்கும் இடையில் ஐரோப்பிய ஒன்றிய காடு வளர்ப்பு கொள்கைகளானது 5000 சதுர கிலோமீட்டர் நிலத்தில் காடுகளை மீளமைத்தலை சாத்தியமாக்கி இருக்கிறது. 2000 க்கும் 2006 க்கும் இடையில் இயங்கிய இரண்டாவது திட்டம் கூடுதலாக 1000 கிலோமீட்டர் நிலத்தில் (துல்லியமான புள்ளிவிவரம் இன்னும் கிடைக்கவில்லை). அத்தகைய மூன்றாவது திட்டம் 2007 இல் ஆரம்பமானது.

போலந்தில், நாட்டின் மொத்த காடுகளது பரப்பு 20 சதவீதமாக சுருங்கியபொழுது, இரண்டாம் உலகப்போருக்குப்பின் அரசாங்கத்தால் தேசிய காடு வளர்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக போலந்தின் காடுகளாக்கப்பட்ட பகுதி ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வந்ததுடன் 2006 டிசம்பர் 31 அன்று நாட்டின் 29 சதவீதம் பகுதிகளை நிறைத்துள்ளது(பார்க்க:போலந்து காடுகள்). 2050 அளவில் காடுகள் போலந்தின் 33 சதவீத பரப்பை நிறைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

ஈரான்[தொகு]

தற்போது மொத்த நாட்டில் வெறும் சதவீதத்தை மட்டுமே காடுகள் நிறைந்துள்ள ஈரான் உலகின் குறைந்த காடுகள் கொண்ட பகுதியாக கருதப்படுகிறது. ஓக்,வாதுமை மற்றும் பசுத்த மரம் போன்றவற்றைக் கொண்ட ஆறு மில்லியன் ஏக்கர்கள் என மதிப்பிடப்படும் புதிய காடுகளின் அளவைக்குறைத்து வரும் மதிப்பீடாகும் இது. இங்கு நிலவும் மண் சரிவின் காரணமாக மிக வளமான மண்ணும் குறைந்த அளவு பாறை மற்றும் மண் அரிமாணம் கொண்ட பிற வெப்ப மண்டல பகுதிகளுடன் ஒப்பிடுகையில் பெரிய அளவில் காடு வளர்ப்பை செய்தல் கடினமானதாகும். பெரும்பாலான காடு வளர்ப்பானது அந்தந்த நிலத்திற்கு உரிய தாவர இனங்களைக் கொண்டிராததன் [6] காரணமாக, அந்த நிலத்திற்குரிய தாவர மற்றும் உயிரினங்கள் வாழ முடியா நிலைக்கு இட்டுச்செல்வதுடன், உயிரினப்பல்வகைமையின் இழப்பினை விரைவுபடுத்துவதில் முடியும்.[1]

காடு வளர்ப்பின் படிநிலைகள்[தொகு]

  • தரிசு நிலங்களை பயிர் நிலங்களாக மாற்றுதல்
  • சமூக விரோதிகளால் காடுகள் வெட்டப்பட்ட இடங்களில் லட்ச்சக்கணக்கான மரங்களை வளர்க்கலாம்
  • காடுகளில் நிலச்சரிவு ஏற்படாதவாறு மண்ணால் தடுப்புச்சுவர் அமைத்தல்
  • சமூகக் காடுகளை வளர்த்தல்
  • காடுகளில் மேய்ச்சலை தடுத்தல்
  • கோடைகாலங்களில் ஏற்படும் காட்டுத்தீயை தடுக்கவும், அணைக்கவும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தல்
  • வேளாண்மைக்கோ, கட்டடங்கள் கட்டவோ காடுகளை அழிப்பதை தடுத்தல்

போன்றவற்றால் பல புதிய காடுகளை உருவாக்குவது மட்டும் அல்லாமல் காடுகள் அழிவதையும் தடுக்கலாம்.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 இ.ஒ.வில்சன், 2002
  2. அ.கேட்டனியோ , 2002
  3. ஜி.எ. மக் பீத், 2006
  4. http://news.xinhuanet.com/english/2009-01/09/content_10631987.htm
  5. http://english.people.com.cn/90001/90776/90882/6371092.html
  6. J.A.Stanturf, Stanturf, John A. and Palle Madsen (2004) Restoration of Boreal and Temperate Forests, CRC Press, 569 pages ISBN 1-56670-635-1

குறிப்புதவிகள்[தொகு]

  • அண்ட்ரிய கேட்டனியோ (2002) பிரேசிலிய அமேசானில் காடுகள் அழிப்பையும் விவசாய அபிவிருத்தியையும் சமன் செய்தல் , Int Food Policy Res Inst IFPRI, 146 பக்கங்கள் ISBN 0896291308
  • கெரித் டபிள்யு.ஹெயில், பர்ட் முய்ஸ் மற்றும் காரின் ஹான்சென்(2007) வடமேற்கு ஐரோப்பாவில் காடுகள் அழிப்பின் சுற்றுசூழல் பாதிப்பு , Springer, 320 pages ISBN 1402045670
  • ஜெரால்ட் எ. மக் பீத் மற்றும் த்சே-காங் லெங் (2006) சீனாவிலும் தைவானிலும் உயிரினப்பல்வகைமை பாதுகாப்பு நிர்வாகம் , எட்வர்ட் எல்கர் பதிப்பகம், 242 பக்கங்கள் ISBN 1843768100
  • ஹால்டோர்சொன் ஜி., ஓட்ச்டோடிர், இஎஸ் மற்றும் சிகுர்சன் பிடி(2008) ' அப்போர்நோர்ட் சுற்றுச்சூழல், நிலப்பரப்பு மற்றும் கிராம அபிவிருத்தி மீதாக காடு வளர்ப்பின் தாக்கங்கள் , டெமநோர்ட் 2008:562, 120 பக்கங்கள் ISBN 978-92-893-1718-4
  • ஹால்டோர்சொன் ஜி., ஓட்ச்டோடிர், இஎஸ் மற்றும் எக்கேர்த்சொன் (2007) சுற்றுச்சூழல், நிலப்பரப்பு மற்றும் கிராம அபிவிருத்தி மீதாக காடு வளர்ப்பின் தாக்கங்கள். அபோர்நோர்ட் மாநாட்டின் நடவடிக்கைகள் , ரெய்க்கொல்ட், ஐஸ்லாந்து, ஜூன், 2005 , டெமநோர்ட் TemaNord 2007:508, 343பக்கங்கள் ISBN 978-92-893-1443-5
  • ஜோன் எ. ச்டாண்டர்ப் மற்றும் பல்லே மட்சென்(2004) வடபுல நடு வெப்பநிலை காடுகள் மீட்சி , சிஆர்சி அச்சகம், 569 பக்கங்கள் ISBN 1566706351
  • இ.ஒ.வில்சன்(2002) வாழ்வின் எதிர்காலம் , விண்டேஜு ISBN 0-679-76811-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=காடு_வளர்ப்பு&oldid=3850652" இலிருந்து மீள்விக்கப்பட்டது