காஞ்சன் பிரவா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
H.R.H மாதா மகாராணி காஞ்சன் பிரபா தேவி
ஆட்சிக்காலம் பகர ஆளுனர் 1947-1949
முன்னையவர் வீர் விக்ரம் கிசோர் தெபர்மா
வாரிசு கிரித் விக்ரம் கிசோர் மாணிக்யா
பிறப்பு
சமயம் இந்து

மகாராணி காஞ்சன் பிரவா தேவி, பன்னா இராச்சியத்தின் மன்னருடைய மகளும், திரிபுரா மன்னராட்சிப் பகுதியின் மன்னர் வீர் விக்ரம் கிசோர் தெபர்மாவின் மனைவியும் ஆவார். இவரது கணவரின் மறைவுக்குப் பின்னர் பிராயமடையாத அவர்களது மகனுக்காகப் பகர ஆளுனராகவும் 1947-1949 வரை பணியாற்றியுள்ளார்.[1] இவரது ஆட்சிக் காலத்திலேயே திரிபுரா விடுதலையடைந்த இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைந்தது. இந்தியப் பிரிவினையின் போது ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக திரிபுராப் பகுதியில் பாதிக்கப் பட்டவர்களையும், அகதிகளையும் மீள்குடியேற்றம் செய்வதில் இவர் முக்கிய பங்காற்றினார். அகர்தலாவில் உள்ள மகாராஜா வீர் விக்ரம் கல்லூரி இவரால் நிறுவப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சன்_பிரவா_தேவி&oldid=2230146" இருந்து மீள்விக்கப்பட்டது