காஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா
பிறப்பு1947
சிம்லா, இமாச்சலப் பிரதேசம், இந்தியா
இறப்பு26 ஆகத்து 2019
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்தில்லி பல்கலைக்கழகம்
பணிஇந்தியக் காவல் பணி அதிகாரி (1973–2007)
வாழ்க்கைத்
துணை
தேவ் பட்டாச்சார்யா
பிள்ளைகள்2

காஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா (Kanchan Chaudhary Bhattacharya) (1947 - 26 ஆகத்து 2019) இந்தியக் காவல் பணியில் கிரண் பேடிக்கு அடுத்து இரண்டாவது பெண் அதிகாரியாக இருந்தார். 1973 தொகுதி இந்திய காவல் அதிகாரியான இவர், ஒரு மாநில காவல்துறையின் தலைமை இயக்குநராக ஆன முதல் பெண்மணியானார். மேலும், 33 வருட சேவைக்குப் பின்னர் 2007 அக்டோபர் 31 அன்று ஓய்வு பெற்றார். [1] ஓய்வுக்குப் பின்னர் இவர் அரசியலுக்கு திரும்பினார். 2014 இந்தியப் பொதுத் தேர்தலில் உத்தராகண்டம் மாநிலம் அரித்துவார் மக்களவைத் தொகுதியிலிருந்து ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். [2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

இவர், இமாசலப் பிரதேசத்தின் மதன் மோகன் சவுத்ரி என்பவருக்கு முதல் குழந்தையாகப் பிறந்தார். அமிருதசரசிலும், தில்லியிலும் வளர்ந்தார். [3] அமிருதசரசு பெண்கள் மகளிர் கல்லூரியில் பயின்றார். [4] பின்னர், தில்லி பல்கலைக்கழகத்தின் இந்திரபிரஸ்தா கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் தனது முதுகலையை முடித்தார். பின்னர் 1993இல் ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், வல்லன்கொங் பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மையில் பட்டம் பெற்றார். [5] [6]

2014 ஆம் ஆண்டில் ஒரு நேர்காணலில், "தனது தந்தை ஒரு சொத்து விஷயத்தில் சிக்கி தாக்கப்பட்ட பின்னர் தான் ஒரு காவல் அதிகாரியாக ஆக ஊக்கமளித்தார் என்று கூறினார். அந்த நேரத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய காவல் அதிகாரிகள் தயாராக இல்லை. எனவே தான் இந்தியக் குடியியல் பணிகள் தேர்வுகளை முடித்தபோது, நீதிக்கு சேவை செய்வதற்கான பாதையாக தான் இந்திய காவல்துறைப்பணியில் சேருவேன் என்பது தனக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது." எனக் கூறினார் [7] [8]

தொழில்[தொகு]

இந்திய காவல்துறை சேவைகளில் இவரது வாழ்க்கை 33 ஆண்டுகள் நீடித்தது. [9] இவர், இந்தியக் காவல் பணி அதிகாரியாக ஆன இரண்டாவது பெண் (கிரண் பேடிக்குப் பிறகு) ஆவார்.[10] இவரது தொகுப்பில் இவர் மட்டுமே பெண் பயிற்சி பெற்றவர். உத்தரப் பிரதேசத்தில் இந்திய காவல் அதிகாரியாக சேர்ந்த முதல் பெண்ணான இவர் உத்தரப் பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் முதல் பெண் துணை காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் உத்தரப் பிரதேசக் காவல்துறையின் முதல் பெண் காவல்துறை தலைமை இயக்குநராக பதவி உயர்வு பெற்றார். உத்தராகண்டம் மாநிலத்தில் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராக பணியாற்றிய முதல் பெண்மணியும் ஆனார். பின்னர் மாநிலத்தில் காவல்துறை தலைமை இயக்குநராக பதவி உயர்வு பெற்ற முதல் பெண்மணியும் ஆனார்.[11]

1987ஆம் ஆண்டில் ஏழு முறை வெற்றிப் பெற்ற தேசிய பூப்பந்து வீரர் சையத் மோடியின் கொலை வழக்கு, 1989 இல் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் - பாம்பே டையிங் வழக்கு ஆகியவை இவர் தனது வாழ்க்கையில் கையாண்ட வழக்குகளில் அடங்கும். உத்தரபிரதேசத்தின் மாலிகாபாத்தில் உதவி காவல் கண்கானிப்பாளராக இருந்த காலத்தில், ஒரே ஆண்டில் 13 கொள்ளைக்காரர்களைக் கண்டுபிடித்தார். [12] வங்கிகளிலும், பொதுத் துறைகளிலும் நடந்த பல உயர்மட்டக் குற்றங்களையும் இவர் விசாரித்தார். [11]

மெக்சிக்கோவின் காகுனில் 2004 இல் நடந்த சர்வதேச காவல் அதிகாரிகளின் கூட்டத்தில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [13] 2005 சூலை 27, அன்று முசோரியில் 2வது பெண்கள் காவல் மாநாட்டை நடத்தினார். இதில் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். [14] காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் சார்பில் நடைபெற்ற காவல்துறை தலைமை இயக்குநர்களின் வருடாந்திர மாநாட்டில் இந்தியாவில் காவல்துறையில் பெண்களை செய்தல், பயிற்சி அளித்தல், பணியில் தொடர்வது தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி நாடு முழுவதும் உள்ள பயிற்சித் தலைவர்களுக்கு இவர் பயிற்சியளித்தார். [15]

சவுத்ரியின் மற்ற ஆர்வங்கள் கவிதை எழுதுதலிலும் நாடகங்களில் பங்கேற்பதும் ஆகியவை அடங்கும். "உதான்" என்ற தொலைக்காட்சித் தொடரில் ஒரு கௌரவ வேடத்திலும் தோன்றினார். இது இவரது வாழ்க்கை கதையால் ஈர்க்கப்பட்டது. இந்தத் தொடரை இவரது சகோதரி கவிதா சவுத்ரி எழுதி இயக்கியிருந்தார். [10][16]

இறப்பு[தொகு]

ஆறு மாதங்களாக சிகிச்சைப் பெற்று வந்த இவர் 2019 ஆகத்து 26 அன்று, மும்பையிலுள்ள ஒரு மருத்துவமனையில் இறந்தார். இவரது உடல் மும்பையில் உள்ள வோர்லி தகன மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது. [17] இவருக்கு கணவரும், இரண்டு மகள்களும் இருந்தனர். உத்தரகண்டம் காவல்துறை பணிப்பாளர் நாயகம் சட்டம் மற்றும் ஒழுங்குத் தலைவர் அசோக் குமார் [18] இவரது அஞ்சலி செலுத்ய நிகழ்ச்சியில், "இவர் ஒரு எளிய மற்றும் இனிமையான இயல்புடையவர். இவர் காவல்துறை தலைமை இயக்குநராக இருந்தபோது நாங்கள் இவரின் கீழ் பணிபுரிந்தபோது எங்களை சுதந்திரமாகப் பணியாற்ற அனுமதித்தார்" எனக் கூறினார். ஆகத்து 27 ஆம் தேதி திணைக்களத்தின் தலைமையகத்தில் அதிகாரப்பூர்வ அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. [19]

விருதுகள்[தொகு]

  • 1989 இல் நீண்ட மற்றும் சிறப்பான சேவைகளுக்கான குடியரசுத் தலைவர் பதக்கம். [15]
  • 1997 இல் புகழ்பெற்ற சேவைகளுக்கான குடியரசுத் தலைவர் பதக்கம். [20]
  • சிறந்த அனைத்து சுற்று செயல்திறனுக்காகவும், சிறந்த பெண் சாதனையாளராகவும் ராஜீவ் காந்தி விருது, 2004. [21]

மேற்கோள்கள்[தொகு]

  1. Singh, Gajinder (17 June 2006). "Smart salute to lady top cop". Telegraph India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-31.
  2. Singh, Kautilya (12 March 2014). "India's first woman DGP wants AAP ticket from Haridwar". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-08-31.
  3. "First Woman Director General of Police (DGP) of India" இம் மூலத்தில் இருந்து 2017-10-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171028145227/http://www.womenplanet.in/first-woman/director-general-of-police-of-india. 
  4. "A trip down memory lane". http://www.tribuneindia.com/2007/20071013/aplus1.htm. 
  5. "DU has a lot on its ladies special platter". http://indiatoday.intoday.in/story/DU+has+a+lot+on+its+ladies+special+platter/1/44882.html. 
  6. "About Kanchan Chaudhary Bhattacharya". streeshakti.com. Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
  7. Wangchuk, Rinchen Norbu (27 August 2019). "Tribute: Kanchan Chaudhary, the Trailblazing IPS Officer Who was India's 1st Woman DGP". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-04.
  8. Laungani, Jahnavi K. (12 September 2014). "Kanchan Chaudhary: Life Sets No Limits, Only You Do!". Life Beyond Numbers. Archived from the original on 20 July 2016. பார்க்கப்பட்ட நாள் 2019-09-04.
  9. "India's first woman DGP Kanchan Chaudhary Bhattacharya dies at 72". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-08-27. பார்க்கப்பட்ட நாள் 2019-08-31.
  10. 10.0 10.1 Jha, Fiza (1 September 2019). "Udaan — DD series on life of DGP Kanchan Chaudhary inspired an entire generation of women". The Print. https://theprint.in/economy/brandma/udaan-dd-series-on-life-of-dgp-kanchan-chaudhary-inspired-an-entire-generation-of-women/283973/. 
  11. 11.0 11.1 "Let me fly, don't root me". The Tribune - Magazine section - Saturday Extra. 26 June 2004. பார்க்கப்பட்ட நாள் 2017-10-28.
  12. "From corporate warriors to politicians, 30 Indian women who are front-liners of our times". India Today. 4 April 2005. பார்க்கப்பட்ட நாள் 2019-09-05.
  13. "First lady DGP no more". Deccan Herald (in ஆங்கிலம்). 2019-08-27. பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.
  14. Menon, Amarnath K. (17 October 2005). "Women in police force finally make themselves heard, demand professional makeover". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-05.
  15. 15.0 15.1 "Rise of Women in Policing". The Protector (in அமெரிக்க ஆங்கிலம்). 10 November 2018. பார்க்கப்பட்ட நாள் 2019-08-31.
  16. Inamdar, Nikhil (2014-03-25). "Meet first woman DGP turned AAP's Haridwar hopeful". Business Standard India. https://www.business-standard.com/article/elections-2014/meet-first-woman-dgp-turned-aap-s-haridwar-hopeful-114032400135_1.html. 
  17. "India's first woman DGP Kanchan Chaudhary Bhattacharya dies". 27 August 2019. https://timesofindia.indiatimes.com/india/indias-first-woman-dgp-kanchan-chaudhary-bhattacharya-dies/articleshow/70858881.cms. 
  18. "India's first woman DGP Kanchan Chaudhary Bhattacharya dies at 72". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-08-27. பார்க்கப்பட்ட நாள் 2020-01-13.
  19. "India's first woman DGP Kanchan Chaudhary Bhattacharya dies at 72". Hindustan Times (in ஆங்கிலம்). 27 August 2019. பார்க்கப்பட்ட நாள் 27 August 2019.
  20. "Who was Kanchan Chaudhary Bhattacharya? Fearless IPS officer who went on to become country's first woman DGP". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-08-27. பார்க்கப்பட்ட நாள் 2019-08-31.
  21. "India's first woman DGP Kanchan Chaudhary Bhattacharya dies at 72". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-08-27. பார்க்கப்பட்ட நாள் 2019-08-31.