உள்ளடக்கத்துக்குச் செல்

காஞ்சனா மெண்டிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஞ்சனா மெண்டிசு
කාංචනා මෙන්ඩිස්
பிறப்பு24 சூன் 1980 (1980-06-24) (அகவை 46)
நெகம்போ, இலங்கை
பணிநடிகை, மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2000 முதல் தற்போது
வாழ்க்கைத்
துணை
ரோசான் ரணவக்க (ம. 2009)
பிள்ளைகள்3
விருதுகள்சிறந்த நடிகை
மிகவும் பிரபலமான நடிகை

காஞ்சனா மெண்டிசு (Kanchana Mendis) (பிறப்பு சூன் 24, 1980 ) இலங்கைத் திரைப்படத்துறை, மேடை நாடகம் மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவாா். ராசாய சேவை பினிசை, ரோசா வசந்தே மற்றும் தொலைக்காட்சித் தொடர்களான தாமினி மற்றும் சக்மான் மாலுவா ஆகியவற்றில் இவர் நடித்த பாத்திரங்களுக்காக பரவலாக அறியப்படுகிறார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

இவருக்கு இரண்டு வயதாக இருந்தபோது இவருடைய தந்தை இறந்துவிட்டார்.[2] இவர் 2009இல் ரோசன் ரணவகாவை மணந்தார்.[3] இந்தத் தம்பதியருக்கு செனிதா ரியான், நிர்வாணா ரேயான் என்ற இரண்டு மகன்களும், கீசா ரைலீ என்ற ஒரு மகளும் உள்ளனர். இவர் தற்போது தனது குடும்பத்துடன் ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வருகிறார்.[4][5]

தொழில்

[தொகு]

1998இல் சனத் விமலசிறி மற்றும் நிமந்தி பொரகே ஆகியோருடன் இணைந்து 'நிஞ்சா கொசு சுருள்' என்ற தொலைக்காட்சி விளம்பரத்தின் மூலம் இவர் பிரபலமானார். 12 வயதில், தர்மசேன பத்திராஜா இயக்கிய 'சுப அனகதாயக்' என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்துள்ளார்.[6] உதயகாந்த வர்ணசூரிய இயக்கிய 2000ஆம் ஆண்டு சிங்களத் திரைப்படமான 'ராஜய சேவய பிணிசை'யில் "பிரபாசுவரி" என்ற தனிச் செயலாளர் கதாபாத்திரத்தில் நடித்து, இவர் திரைப்படத் துறையில் நுழைந்தார்.[7] சதா மற்றும் சிறீகாந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த 'வர்ணஜாலம்' என்ற தமிழ்த் திரைப்படத்திலும், 'கனகலால் கை ராசி'யிலும் இவர் தோன்றியுள்ளார்.[2] சமன் துஷாராவின் 'தர்ம சங்க்ரமயா'[8] மற்றும் ரிச்சர்ட் மனவாடுவின் 'அனங்க பம்பரு'[9] போன்ற சில மேடை நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sakman Maluwa : An allegorical garden". Sunday Observer. Retrieved 25 August 2019.
  2. 1 2 "Kanchana : A new star is born". Daily News. Retrieved 25 August 2019.
  3. "This life is not easy - Kanchana Mendis". Hiru FM. Retrieved 25 August 2019.
  4. "It was only after three years that I came back to Sri Lanka - Kanchana Mendis". rajagossip. Retrieved 25 August 2019. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. "My name does not appear to be me Kanchana Mendis reveals to university". Sarasaviya. Retrieved 2021-06-22.
  6. "Famous Actresses - Kanchana Mendis". The Island. Retrieved 25 August 2019.
  7. "Kanchana Mendis - කාංචනා මෙන්ඩිස් films". Sinhala Cinema Database. Retrieved 25 August 2019.
  8. "Kanchana Mendis makes stage debut". lankanstuff. Retrieved 28 October 2017.
  9. "Dancer turned actress". infolanka. Retrieved 25 August 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சனா_மெண்டிசு&oldid=4546624" இலிருந்து மீள்விக்கப்பட்டது