உள்ளடக்கத்துக்குச் செல்

காஜாங் பரவல் இணைப்பு விரைவுச்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Expressway 18
காஜாங் பரவல் இணைப்பு விரைவுச்சாலை
(காஜாங் சில்க் நெடுஞ்சாலை)
Kajang Dispersal Link Expressway
வழித்தடத் தகவல்கள்
பராமரிப்பு
காஜாங் நெடுஞ்சாலை-வளைய அமைப்பு
Sistem Lingkaran-Lebuhraya Kajang
(SILK)
நீளம்:37 km (23 mi)
பயன்பாட்டு
காலம்:
2002 –
வரலாறு:நிறைவு: 2004
Component
highways:

E18 (மைன்ஸ்–யுபிஎம் சந்திப்பு)

E18 சுங்கை பாலாக் இணைப்பு

முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:மைன்ஸ் பரிமாற்றச் சாலை
Mines Interchange
 

E9 சுங்கை பீசி விரைவுச்சாலை

3211 பாலக்கோங் சாலை

E7 செராஸ்–காஜாங் விரைவுச்சாலை

E27 காஜாங் புறவழிச்சாலை

E21 காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை

E2 வடக்கு-தெற்கு வழித்தடம்

1 மலேசிய கூட்டரசு சாலை 1

E26 தெற்கு கிள்ளான் பள்ளத்தாக்கு

முடிவு:யுபிஎம் பரிமாற்றச் சாலை
சுங்கை பீசி விரைவுச்சாலை
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
பாலக்கோங், பண்டார் சுங்கை லோங், காஜாங், செமினி, பண்டார் பாரு பாங்கி, புத்ராஜெயா
நெடுஞ்சாலை அமைப்பு

காஜாங் பரவல் இணைப்பு விரைவுச்சாலை அல்லது காஜாங் சில்க் நெடுஞ்சாலை E18 (SILK) (மலாய்; Sistem Lingkaran-Lebuhraya Kajang; ஆங்கிலம்: Kajang Dispersal Link Expressway அல்லது Kajang SILK Highway; சீனம்: 加影外环公路) என்பது மலேசியா, சிலாங்கூர், காஜாங் நகரில் போக்குவரத்துப் பயன்பாட்டை பரவலாக்கி ஒழுங்குபடுத்துவதற்காக கட்டப்பட்ட ஒரு விரைவுச் சாலை ஆகும்.[1]

37 கிமீ (23 மைல்) நீளமுள்ள இந்த விரைவுச் சாலை, காஜாங் நகர மையத்தைத் தவிர்த்துச் செல்ல உதவுகிறது. இந்தச் சாலை காஜாங் நகரின் மிக முக்கிய சுற்றுச் சாலையாகவும் பயன்படுகிறது.[2]

காஜாங் பரவல் இணைப்பு விரைவுச்சாலையின் கிலோமீட்டர் 0, செரி கெம்பாங்கானுக்கு அருகிலுள்ள மைன்ஸ் பரிமாற்றச் சாலையில் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

காஜாங் பரவல் இணைப்பு விரைவுச்சாலை முன்பு காஜாங்-பூச்சோங் சாலை (Jalan Kajang–Puchong) மற்றும் பாலக்கோங் 3211 சாலை என்று அழைக்கப்பட்டது. காஜாங் நகர மையத்தில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டதே இந்த விரைவுச்சாலை கட்டப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. கட்டுமானப் பணிகள் 2002-இல் தொடங்கின. இந்த விரைவுச்சாலை 2003-இல் நிறைவடைந்து 15 சூன் 2004-இல் செயல்படத் தொடங்கியது.[3]

கூறுகள்

[தொகு]

காஜாங் பரவல் இணைப்பு விரைவுச்சாலை இரவில் முழுமையாக ஒளிரும் மற்றும் 11 பல-நிலை பரிமாற்றச் சாலைகளைக் கொண்டுள்ளது. இந்த விரைவுச்சாலை, தொட்டு செல் (Touch 'n Go) அட்டைகள் அல்லது திறன் அட்டைகள் (SmartTAG) எனும் கட்டண முறைகளைப் பயன்படுத்துகிறது.

காஜாங் பரவல் இணைப்பு விரைவுச்சாலையில் கணினிமயமாக்கப்பட்ட போக்குவரத்து தகவல் காட்சி; கண்காணிப்பு அமைப்பு முறைமை பயன்படுத்தப்படுகிறது; மற்றும் 24 மணி நேர நெடுஞ்சாலை காவல் கண்காணிப்புப் பணிகளும் உள்ளன. அத்துடன் இந்த விரைவுச்சாலையில் 24 மணி நேர ஆபத்து அவசர உதவிகளும் வழங்கப்படுகின்றன.

சுங்கக் கட்டணங்கள்

[தொகு]
பிரிவு வாகனங்களின் வகை கட்டணம்
(RM)
0 விசையுந்துகள் இலவசம்
1 2 அச்சுகள் மற்றும் 3 அல்லது 4 சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் (வாடகை உந்து தவிர) RM 1.60
2 2 அச்சுகள் மற்றும் 6 சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் (பேருந்து தவிர RM 3.60
3 3 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகளைக் கொண்ட வாகனங்கள் RM 5.40
4 வாடகை உந்துகள் RM 0.80
5 பேருந்துகள் RM 0.90

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kajang SILK". PROLINTAS (in ஆங்கிலம்). Retrieved 27 September 2025.
  2. "SILK Highway, Kajang Dispersal Link Expressway (E18)". klia2.info. 23 October 2017. Retrieved 27 September 2025.
  3. "E18: Kajang Dispersal Link Expressway (SILK)". Penang Travel Tips (in ஆங்கிலம்). Retrieved 27 September 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]