காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம்
KG34 காஜாங் அரங்கம் | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
காஜாங் அரங்க நிலையம் | ||||||||||||||||
| பொது தகவல்கள் | ||||||||||||||||
| வேறு பெயர்கள் | Stadium Kajang MRT Station Stesen MRT Stadium Kajang சீனம்: 加影体育场 | |||||||||||||||
| அமைவிடம் | காஜாங் நகரம் | |||||||||||||||
| ஆள்கூறுகள் | 2°59′38.4″N 101°47′10.5″E / 2.994000°N 101.786250°E | |||||||||||||||
| உரிமம் | ||||||||||||||||
| இயக்குபவர் | ||||||||||||||||
| தடங்கள் | ||||||||||||||||
| நடைமேடை | 2 பக்க நடைமேடை | |||||||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 தடங்கள் | |||||||||||||||
| கட்டமைப்பு | ||||||||||||||||
| கட்டமைப்பு வகை | உயர்மட்ட நிலையம் | |||||||||||||||
| நடைமேடை அளவுகள் | 3 | |||||||||||||||
| தரிப்பிடம் | ||||||||||||||||
| துவிச்சக்கர வண்டி வசதிகள் | ||||||||||||||||
| மாற்றுத்திறனாளி அணுகல் | ||||||||||||||||
| மற்ற தகவல்கள் | ||||||||||||||||
| நிலையக் குறியீடு | KG34 | |||||||||||||||
| வரலாறு | ||||||||||||||||
| திறக்கப்பட்டது | KG34 17 சூலை 2017 | |||||||||||||||
| சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
| ||||||||||||||||
காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Stadium Kajang MRT Station; மலாய்: Stesen MRT Stadium Kajang) என்பது மலேசியா, சிலாங்கூர், காஜாங், காஜாங் விளையாட்டு அரங்கத்தின் சுற்றுப் பகுதிகளுக்குச் சேவை வழங்கும் ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் நிலையங்களில் ஒன்றாகும்.
இந்த நிலையம் சுங்கை பூலோ காஜாங் வழித்தடத்தில் (Sungai Buloh-Kajang Line) (SBK Line) காஜாங் நோக்கிச் செல்லும் இரண்டாவது முதல் கடைசி நிலையம் ஆகும். லங்காட் ஆற்றின் வலது புறத்தில் அமைந்துள்ள இந்த நிலையம் காஜாங் அரங்கத்திற்கு (Kajang Stadium) அருகிலும் உள்ளது. மேலும்
செமினி கூட்டரசு நெடுஞ்சாலை 1 மற்றும்
B17 ரெக்கோ சாலை ஆகியவற்றுக்கு இடையிலான பரிமாற்றச் சாலை சந்திப்பிற்கு அருகிலும் உள்ளது.
கட்டுமானத்தின் போது, இந்த நிலையத்திற்கு பண்டார் காஜாங் நிலையம் (Bandar Kajang Station) என்று பெயரிடப்பட்டது. அப்போது காஜாங் நகரத்திற்கும்; காஜாங் நிலையத்திற்கும் பண்டார் காஜாங் நிலையம் சேவை செய்தது. அப்போது அந்த நிலையம் நேரடியாக காஜாங் நகர மையத்திற்குச் சேவை செய்யவில்லை. அதன் பின்னர் பெயரில் மாற்றம் செய்யப்பட்டது. காஜாங் நகரத்திற்கு தற்போது சேவை செய்யும் இரண்டு நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும்; மற்றொன்று சுங்கை ஜெர்னே எம்ஆர்டி நிலையம் ஆகும்.
காஜாங் வழித்தடம்
[தொகு]9 காஜாங் வழித்தடம் அல்லது காஜாங் எம்ஆர்டி வழித்தடம் (ஆங்கிலம்: Kajang Line அல்லது MRT Kajang Line அல்லது Kelana Jaya Komuter Line; என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் பெரும் விரைவு தொடருந்து வழித்தடம் (Mass Rapid Transit Line) (MRT) ஆகும்.
5 கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடத்திற்கு (LRT Kelana Jaya Line) (LRT) பிறகு கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உருவாக்கப்பட்ட இரண்டாவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பு ஆகும்.[1]
பொது
[தொகு]9 சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையின் கீழ் மியூசியம் நெகாரா எம்ஆர்டி நிலையம் - காஜாங் தொடருந்து நிலையம் வரையில் கட்டப்பட்ட 19 நிலையங்களில் காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையமும் ஒன்றாகும்; 17 சூலை 2017-ஆம் திகதி திறக்கப்பட்டது.[2] காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம் உயர்த்தப்பட்ட நிலையம் ஆகும். இந்த நிலையம் காஜாங் விளையாட்டு அரங்கத்திற்கும்; காஜாங் புறநகர்ப் பகுதிகளுக்கும் சேவை செய்கிறது.[3]
நிலைய அமைப்பு
[தொகு]இந்த நிலையம், காஜாங் எம்ஆர்டி வழிதடத்தின் பெரும்பாலான உயர்மட்ட நிலையங்களைப் போலவே (முனையம் மற்றும் நிலத்தடி நிலையங்கள் தவிர) அமைப்பையும் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. மேல் தளத்தில் நடைமேடை உள்ளது.
இரட்டை வழித்தடங்களிலும் இரண்டு பக்க நடைமேடைகள் உள்ளன; மற்றும் தரை மட்டத்திற்கும் நடைமேடை மட்டத்திற்கும் இடையில் பயணச்சீட்டு வழங்கும் வசதியுடன் கூடிய ஒற்றை இணைப்புவழி வசதிகளும் உள்ளன. நிலையத்தின் அனைத்து தளநிலைகளும் மின்தூக்கிகள், படிக்கட்டுகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
| L2 | நடைமேடை | பக்க நடைமேடை |
| நடைமேடை 1 9 காஜாங் (→) காஜாங் தொடருந்து KG35 (→) | ||
| நடைமேடை 2 9 காஜாங் (→) குவாசா டாமன்சாரா KG04 (←) | ||
| பக்க நடைமேடை | ||
| L1 | இணைப்புவழி | கட்டண வாயில்கள், பயணச்சீட்டு இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம், நிலையக் கட்டுப்பாடு, கடைகள், பாதசாரி மேம்பாலம் (→) நுழைவாயில் C |
| G | தரை மட்டம் | நுழைவாயில்கள் A, B, C (→) ஊட்டி பேருந்து மையம் (→) தனியார் வாடகை ஊர்திகள் நிறுத்துமிடம் (→) காஜாங் அரங்கம் (→) காஜாங் அரங்க சாலை |
வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்
[தொகு]காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையதில் மூன்று நுழைவாயில்கள் உள்ளன. நிலையத்தின் ஊட்டி பேருந்துகள் மையத்திலிருந்து (Feeder Buses Hub) காஜாங் அரங்க சாலையில் உள்ள நுழைவாயில் A வழியாக ஊட்டி பேருந்துகள் (Feeder Bus) இயக்கப்படுகின்றன.
| காஜாங் வழித்தட நிலையம் | |||
| நுழைவாயில் | இடம் | இலக்கு | தோற்றம் |
|---|---|---|---|
| A | காஜாங் அரங்கம் | ஊட்டி பேருந்து நிறுத்தம் (→) வாகனங்கள் நிறுத்துமிடம் (→) பேருந்து நிறுத்தம் (→) காஜாங் அரங்கம் | |
| B | லோரோங் மெண்டாலிங் | மெண்டாலிங் சாலையின் பின்புற வழிகள். | |
| C | காஜாங் அரங்க சாலை-மெண்டாலிங் குறுக்கு சாலைகள் | மாற்று நுழைவாயில் வ்ழியாக (→) நுழைவாயில் A | |
பேருந்து சேவைகள்
[தொகு]| பேருந்து | தொடக்கம் | இலக்கு | பயணவழி | தோற்றம் |
|---|---|---|---|---|
| KG34 காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம் | மலேசிய தேசிய பல்கலைக்கழகம் (UKM) | ஜாலான் பெசார், காஜாங் KG35 KB06 எம்ஆர்டி/கேடிஎம் காஜாங் (→) ரேக்கோ சாலை (→) ரேக்கோ சென்ட்ரல் (→) கேடிஎம் காஜாங் 2 (→) காஜாங் சுங்கை தாங்காஸ் நிறுத்தம் KB07 கேடிஎம் மலேசிய தேசிய பல்கலைக்கழகம் (UKM) |
||
| KG34 காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம் | பிரிமா சவுஜானா | ஜாலான் சுங்கை காந்தன் (→) தேசா செரி செனாரிசு (→) முத்தியாரா அவென்யூ (→) பெர்சியாரான் ப்ரிமா சவுஜானா | ||
| KG34 காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம் | தாமான் இண்டா | காஜாங் நகராட்சி கட்டிடம் (→) காஜாங் மருத்துவமனை (→) செமினி சாலை | ||
| KG34 காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம் | சாஸ்மின் குடியிருப்பு | தீமோர் சாலை (→) செமினி சாலை (→) சாஸ்மின் குடியிருப்பு | - | |
| KG34 காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம் | காஜாங் தொழில்நுட்ப நகரம் | காஜாங் நகராட்சி கட்டிடம் (→) காஜாங் மருத்துவமனை (→) செமினி சாலை (→) பண்டார் டெக்னாலஜி சாலை | - | |
| KG34 காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம் | சேட் இல்ஸ் குடியிருப்பு | சுங்கை சுவா (→) புக்கிட் அங்காட் | - |
பிற பேருந்து சேவைகள்
[தொகு]காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம் வேறு சில பேருந்து சேவைகளுக்கான அணுகலையும் வழங்குகிறது.
| பேருந்து | இயக்குநர் | தொடக்கம் | இலக்கு | பயணவழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|---|
| ரேபிட் கேஎல் | காஜாங் நிறுத்தம் | காஜாங் நகரம் | பாங்கி தம்பாகான் 4 (→) பாங்கி செக்சன் 7 KG34 காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம் (→) தீமோர் சாலை (→) காஜாங் மருத்துவமனை (→) ஜாலான் பெசார், காஜாங் | காஜாங் மருத்துவமனை (→) | |
| ரேபிட் கேஎல் | காஜாங் நிறுத்தம் | லெபோ புடு நிறுத்தம் | ரெக்கோ சென்ட்ரல் (→) காஜாங் நகரம் KG34 காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம் KG33 சுங்கை ஜெர்னே எம்ஆர்டி நிலையம் KG31 புக்கிட் டுக்குங் எம்ஆர்டி நிலையம்
|
கோலாலம்பூர் | |
| ரேபிட் கேஎல் | KG34 காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம் | பெரானாங் | ஜாலான் பெசார் காஜாங் (→) செமினி (→) பண்டார் ரிஞ்சிங் | வடக்கு முனைய நிலையம் |
காட்சியகம்
[தொகு]காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம் (2023)
மேலும் காண்க
[தொகு]- பிரசரானா மலேசியா
- கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு
- கோலாலம்பூர் சாலைகளின் பட்டியல்
கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து
[தொகு]- எம்ஆர்டி நிறுவனம்
- கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து
- 9 காஜாங் (MRT1)
- 12 புத்ராஜெயா (MRT2)
- 13 சுற்று வழித்தடம் (MRT3)
- கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ruban, A. (Dec 16, 2016). "A quiet start to Malaysia's first MRT, but commuters happy". The Malay Mail Online. http://www.themalaymailonline.com/malaysia/article/a-quiet-start-to-malaysias-first-mrt-but-commuters-happy.
- ↑ "The Launch Of MRT Phase 2 Today Gets M’sians All Excited, How Will Commuters Benefit" (in en-gb). Malaysian Digest இம் மூலத்தில் இருந்து 2017-07-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170729220121/http://www.malaysiandigest.com/frontpage/282-main-tile/686803-the-launch-of-mrt-phase-2-today-gets-m-sians-all-excited-how-will-commuters-benefit.html.
- ↑ "Najib launches Phase 2 of Sungai Buloh-Kajang MRT line" (in en). Thestar.com.my. 2017-07-17. https://www.thestar.com.my/news/nation/2017/07/17/najib-launches-phase-2-of-sungai-buloh-kajang-mrt-line/.
- ↑ "Stadium Kajang MRT Feeder Bus T457 | mrt.com.my". mrt.com.my. Retrieved 31 December 2020.
- ↑ "Stadium Kajang MRT Feeder Bus T458 | mrt.com.my". mrt.com.my. Retrieved 31 December 2020.
- ↑ "Stadium Kajang MRT Feeder Bus T459 | mrt.com.my". mrt.com.my. Retrieved 31 December 2020.
- ↑ "Stadium Kajang MRT Feeder Bus T460 | mrt.com.my". mrt.com.my. Retrieved 31 December 2020.
- ↑ "Line Route KJ01 - Smart Selangor (operated by rapidKL) - Bus Schedules". Moovit (in ஆங்கிலம்). Retrieved 31 December 2020.
- ↑ "Line Route 450 - rapidKL Bus - Bus Schedules". Moovit (in ஆங்கிலம்). Retrieved 31 December 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Stadium Kajang MRT Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
