காசு வன அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காஸ் வன அருங்காட்சியகம்
Gauss museum.jpg
காஸ் அருங்காட்சியங்கத்தின் முன் தோற்றம்
நிறுவப்பட்டது1902
அமைவிடம்வனக் கல்லூரி வளாகம், கோயமுத்தூர்
வகைஇயற்கை வரலாறு அருங்காட்சியகம்
சேகரிப்பு அளவு10,000
வருனர்களின் எண்ணிக்கைஆண்டொன்றுக்கு 25,000
மேற்பார்வையாளர்பி. சந்திரசேகரன்


காசு வன அருங்காட்சியகம் அல்லது காஸ் வன அருங்காட்சியகம் தமிழ்நாடு, கோயமுத்தூர் நகரில் நடுவண் அரசினால் நிருவகிக்கப்படும் ஒரு இயற்கை வரலாறு அருங்காட்சியகம்.

வரலாறு[தொகு]

அருங்காட்சியகத்தில் காஸின் படம்

19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்னை மாகாணத்தின் வனப் பாதுகாப்பு அதிகாரி ஜே. ஏ. காம்பிள் மாகாணத்தில் ஒரு வன அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க முயன்றார். ஆனால் அம்முயற்சி வெற்றி பெறவில்லை. சில ஆண்டுகள் கழித்து காம்பிளுக்குப் பின் வனப் பாதுகாப்பாளராகப் பணியாற்றிய ஹொரேஸ் ஆர்ச்சிபால்ட் காஸ் மீண்டும் முயன்று அதில் வெற்றி கண்டார். ஏப்ரல் 15, 1902 அன்று சென்னை மாகாண ஆளுனர் ஆம்ட்ஹில் பிரபுவால் இவ்வருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. காஸ் அதன் முதல் காப்பாளராகப் பணியாற்றினார். அவர் ஓய்வு பெற்ற பின்னால் அப்பணியை ஏற்ற எஃப். ஏ. லாட்ஜ், அருங்காட்சியகத்துக்கு காசின் பெயரைச் சூட்டினார். 1905 மற்றும் 1912 இல் அருங்காட்சியகம் இருமுறை விரிவு படுத்தப்பட்டது. வனத்துறையாளர்களுக்கு பயிற்சியளிக்க 1912 இல் சென்னை வனக் கல்லூரி (தற்போது தமிழ்நாடு வன அகாதமி) அருங்காட்சியக வளாகத்தில் தோற்றுவிக்கப்பட்டது. 1942-47 காலகட்டத்தில் அருங்காட்சியகம் மூடப்பட்டு, இரண்டாம் உலகப் போர் காரணமாக மால்டா மற்றும் கிரீசிலிருந்து புலம் பெயர்ந்த அகதிகளைக் குடியமர்த்த முகாமாக பயன்படுத்தப்பட்டது. 1947 இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் அருங்காட்சியகம் சென்னை மாநிலம் (தமிழ் நாடு) அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. தற்போது இந்திய வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்புக் கழகத்தால் நிருவகிக்கப்பட்டு வருகிறது. இக்கழகம் அருங்காட்சியக வளாகத்திலேயே அமைந்துள்ளது.

இடம்[தொகு]

இந்த அருங்காட்சியகம் கோயமுத்தூர் கவுளி புரவன் சாலையில் உள்ள வனக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளது. இவ்வளாகத்தில் தமிழ் நாடு வன அகாதமி, இந்திய வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்புக் கழகம், மாநில வனத்துறையின் நடுவண் அகாதமி, பிற வனத்துறை அலுவலகங்கள் ஆகியவையும் இவ்வளாகத்தில் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

ஆள்கூறுகள்: 11°0′49″N 76°56′45″E / 11.01361°N 76.94583°E / 11.01361; 76.94583 (Gass Forest Museum)

வெளியிணைப்புகள்[தொகு]