காசுமீர ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசுமீர ஈப்பிடிப்பான்
குளிர்காலத்தில் ஊட்டியில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பைசெடுலா
இனம்:
பை. சூப்ருப்ரா
இருசொற் பெயரீடு
பைசெடுலா சூப்ருப்ரா
கார்டெருட் & இசுடெயின்பேச்சர், 1934

காசுமீர ஈப்பிடிப்பான் (Kashmir flycatcher)(பைசெடுலா சூப்ருப்ரா) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தின் குருவிச் சிற்றினம் ஆகும். ஒரு காலத்தில் இதனை செம்மார்பு ஈப்பிடிப்பானின் (பைசெடுலா பர்வா) துணையினமாகக் கருதினர்.

இது இந்தியத் துணைக்கண்டத்தின் காஷ்மீர் பகுதியில் வடமேற்கு இமயமலையில் இனப்பெருக்கம் செய்யும் பூச்சி உண்ணும் இனமாகும். இது குளிர்காலத்தில் இலங்கையின் மைய மலைப்பகுதிக்கும் இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் வலசைப்போகின்றது. .

காசுமீர ஈப்பிடிப்பான், ஊட்டி, தமிழ்நாடு, இந்தியா

காசுமீர ஈப்பிடிப்பான் அடர்ந்த அடிமரங்கள் கொண்ட இலையுதிர் காடுகளில் இனப்பெருக்கம் செய்து, மரத்தின் துளையில் கூடு கட்டுகிறது. பெண் பறவை முட்டைகளை அடைகாக்கின்றன. பொதுவாக இவை 3 முதல் 5 முட்டை வரை இடுகிறது. பொதுவாக 750 மீட்டருக்கு உயரத்திற்கு மேல் உள்ள தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள், காடுகளின் விளிம்புகள் மற்றும் வனப்பகுதிகளில் உள்ள திறந்தவெளிப் பகுதிகளில் குளிர்காலத்தில் வலசைப் போகின்றது.

பெரும்பாலான பறவைகள் செப்டம்பரில் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை விட்டு வெளியேறி, அக்டோபரில் இலங்கைக்கு வந்து, மார்ச் மாத இறுதியில் மீண்டும் புறப்பட்டுச் செல்லும். நுவரெலியாவில் உள்ள விக்டோரியா பூங்கா இந்த அரிய வகைகளைப் பார்க்கச் சிறந்த இடங்களில் ஒன்றாகும்.

இந்த இனம் 13 செ. மீ. நீளம் வரை வளரக்கூடியது. இதன் உருவம் சிறிய சிவப்பு-மார்பக ஈப்பிடிப்பானை ஒத்திருக்கிறது. ஆண், சாம்பல்-பழுப்பு நிற முதுகு, ஆரஞ்சு-சிவப்பு தொண்டை, மார்பகம் மற்றும் பக்கவாட்டுகள், தொண்டை மற்றும் மார்பகத்தின் மீது கறுப்பு விளிம்புடன் காணப்படும். பெண் மற்றும் முதல்-குளிர்காலப் பறவைகளின் மேல்பகுதிகள் சற்று பழுப்பு நிறமாக இருக்கும். மேலும் கீழ்ப்பகுதியின் சிவப்பு நிறமானது இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது.

செந்தொண்டை ஈப்பிடிப்பானின் ஆண், பைசெடுலா அல்பிசில்லா, சிவப்பு-ஆரஞ்சு நிறத் தொண்டை மற்றும் மார்பக பகுதியினை, கருப்பு நிற விளிம்பு இல்லாமல் உள்ளது.

இதனுடைய ஓசை குறுகிய மெல்லிசையாக ஸ்வீட்-ஈட் ஸ்வீட்-ஈட்-டிட்-ஹீ, மற்றும் இதனுடைய அழைப்பு கீச்குரலில் சக் என அமைந்துள்ளது.

இதனுடைய எண்ணிக்கை குறைந்து வருவதாலும், இனப்பெருக்க பரம்பல் குறைவாக இருப்பதாலும் இது அபாயத்திற்குரியசிற்றினமாக உள்ளது. வணிக நோக்கில் மரங்கள் வெட்டியெடுக்கப்படுவதால், விவசாயம் மற்றும் கால்நடை மேய்ச்சல் காரணமாக இதனுடைய வாழிடம் துண்டுதுண்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதனுடைய எண்ணிக்கை தற்பொழுது 2,500 முதல் 10,000 வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Ficedula subrubra". IUCN Red List of Threatened Species 2016: e.T22709346A94203872. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22709346A94203872.en. https://www.iucnredlist.org/species/22709346/94203872. பார்த்த நாள்: 12 November 2021. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ficedula subrubra
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசுமீர_ஈப்பிடிப்பான்&oldid=3773569" இலிருந்து மீள்விக்கப்பட்டது