காசுமீர் சாம்பல் மந்தி
காசுமீர் சாம்பல் மந்தி
Kashmir Gray Langur | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டிகள் |
வரிசை: | பிரைமேட்டு |
துணைவரிசை: | ஹாப்லோரினி |
மேல்வரிசை: | சிமிஃபார்மிசு |
குடும்பம்: | செர்கோபித்திசிடே |
பேரினம்: | செமனோபித்திகசு |
சிற்றினம்: | செ. அஜாக்சு
|
இருசொற் பெயரீடு | |
செமனோபிதேகசு அஜாக்சு போக்காக், 1928[2] | |
Kashmir gray langur range |
காசுமீர் சாம்பல் மந்தி (Kashmir Gray Langur)(செம்னோபிதேகசு அஜாக்சு) என்பது பழைய உலக குரங்கு, இது மந்தி இனங்களில் ஒன்றாகும். இது இலை உண்ணும் வகையினைச் சார்ந்த குரங்காகும்.[2]
இது வடமேற்கு இந்தியாவின் சம்மு காசுமீர் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் இது இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா பள்ளத்தாக்கில் மட்டுமே காணப்படுகிறது எனச் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதன் வரையறுக்கப்பட்ட வரம்பு, துண்டு துண்டான மக்கள்தொகை, வேளாண்மையினால் பாதிப்பு உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக இது ஐ.யூ.சி.என் செம்பட்டியலில் அருகிய இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[1] பாகிஸ்தானில் இது மச்சியாரா தேசிய பூங்காவில் காணப்படுகிறது.[3]
இது முன்னர் செம்னோபிதேகசு என்டெல்லசின் ஒரு துணைச் சிற்றினமாகக் கருதப்பட்டது. மேலும் தி இலியாட்டின் கதாபாத்திரங்களுக்குப் பெயரிடப்பட்ட பல செம்னோபிதேகசு இனங்களில் இதுவும் ஒன்றாகும். பிற இனங்கள், செம்னோபிதேகசு ஹெக்டர் மற்றும் செம்னோபிதேகசு பிரியம் ஆகும்.
சூழலியல் மற்றும் நடத்தை
[தொகு]இது மரங்களில் பகலாடி வாழ்க்கை முறையினைக் கொண்டது. மித வெப்பமண்டல ஆல்பைன் காடுகளில் 2,200 மற்றும் 4,000 m (7,200 மற்றும் 13,100 அடி) வரை உயரத்தில் வாழ்கிறது.[1]
காசுமீர் சாம்பல் மந்தியின் இனப்பெருக்க காலம் ஜனவரி முதல் ஜூன் வரை ஆகும். இருப்பினும் பெரும்பாலன மந்திகள் மார்ச் மாதத்தில் குட்டிகளை ஈணுகின்றன. பெரும்பாலான ஆசிய கோலோபின்களை விட அதிக வயதில் குழந்தைகளுக்குப் பாலூட்டப்படுகிறது. பெரும்பாலான ஆசிய கோலோபின்கள் முதல் வருடத்திற்குள் தங்கள் குழந்தைகளைப் பாலூட்டும் போது, காசுமீர் சாம்பல் மந்திகள் தங்கள் குழந்தைகளை 25 மாதங்கள் கவனிக்கிறார்கள். உணவுப் பற்றாக்குறை உள்ள இடங்களில் உள்ள குரங்குகள் வயதான காலத்தில் தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதால், ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்படக் காரணமாக அமைகின்றது. பிரசவ கால இடைவெளி சுமார் 2.4 ஆண்டுகள் ஆகும். 5 மாதங்கள் வரை காசுமீரின் சாம்பல் மந்தி பெற்றோர் பராமரிப்பு மேற்கொள்கிறது. ஆண் மந்திகள் பொதுவாகக் குழந்தைகளைப் பாதுகாக்கின்றன. இருப்பினும் சிசுக்கொலை எப்போதாவது நிகழ்கிறது.
பெரும்பாலான ஆசிய கொலோபைன் குழுக்களில் வயது வந்த ஆண் ஒன்றுடன் பல பெண்களைக் கொண்டிருந்தாலும், பல ஆண்கள் கொண்ட குழுக்களும் செம்னோபிதேகசு இனங்களுக்குள் இருக்கின்றன. காஷ்மீரின் சாம்பல் மந்தியில், பல குழுக்களில் வயது வந்த ஆண்கள் ஐந்து வரையும் இருக்கலாம். பெண் மந்தி ஒரு ஆண் மந்தியுடன் புணர்ச்சியினைத் தொடங்குகிறது. ஆனால் எல்லா வேண்டுகோளினையும் சமாளிப்பதன் விளைவாக இல்லை.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Groves, C. P. & Molur, S. (2008). "Semnopithecus ajax". IUCN Red List of Threatened Species. 2008: e.T39833A10274370. Retrieved 26 April 2018.
- ↑ 2.0 2.1 Groves, C. P. (2005). Wilson, D. E.; Reeder, D. M. (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Baltimore: Johns Hopkins University Press. p. 174. ISBN 0-801-88221-4. OCLC 62265494.
- ↑ Minhas, R. A.; Ahmed, K. B.; Awan, M. S.; Dar, N. I. (2010). "Social organization and reproductive biology of Himalayan grey langur (Semnopithecus entellus ajax) in Machiara National Park, Azad Kashmir (Pakistan)". Pakistan Journal of Zoology 42: 143–156.
- ↑
{{cite book}}
: Empty citation (help)