காசுமீர் இலக்கிய திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காசுமீர் இலக்கிய விழா (Kashmir Literature Festival) என்பது சம்மு மற்றும் காசுமீரின் எழுத்தாளர்களின் திருவிழா ஆகும். இத்திருவிழாவின் மூலம் இலக்கிய உரையாடல்கள், விவாதங்கள் மற்றும் வாசிப்புகள் மூலம் கவிதை மற்றும் கலாச்சார பாரம்பரியம் போன்ற இலக்கியங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.[1] சம்மு காசுமீர் வரலாற்றில் 2011 செப்டம்பரில் சிறீநகரில் உள்ள தில்லி பொதுப் பள்ளியில் இதனை முதன்முதலில் நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால் சில எழுத்தாளர்கள் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அது ரத்து செய்யப்பட்டது.[2]

நிகழ்வுகள்[தொகு]

முதல் நிகழ்வு ஹாருத் (இலையுதிர் காலம்) என்றும், இரண்டாவது நிகழ்வு சவுந்த் (வசந்தம்) என்றும் பெயரிடப்பட்டது. இந்நிகழ்ச்சியினை பிப்ரவரி 2015-ல் தூர்தர்ஷன் மற்றும் ரேடியோ காஷ்மீர் இணைந்து நடத்தத் திட்டமிடப்பட்டது. சம்மு காசுமீர் அரசு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இரண்டாவது நிகழ்வை நடத்தியது. இது கலை, இலக்கியம், ஊடகம் மற்றும் காஷ்மீரி திரைப்படத்துறை போன்றவற்றில் கவனம் செலுத்தியது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bukhari, Shujaat (August 14, 2011). "'Apolitical' literature festival in Kashmir triggers debate" – via www.thehindu.com.
  2. "Kashmir literary festival off over fears of violence". DAWN.COM. August 30, 2011.
  3. "After Harud, now Sounth (spring) literature festival in Kashmir". January 9, 2015. Archived from the original on ஏப்ரல் 30, 2021. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 6, 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)

மேலும் படிக்க[தொகு]

மேலும் பார்க்கவும்[தொகு]