காசுமீரி லால் சாகிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசுமீரி லால் சாகிர்
Kashmiri Lal Zakir
பிறப்புஏப்ரல் 7, 1919(1919-04-07)
இந்தியா
இறப்பு31 ஆகத்து 2016(2016-08-31) (அகவை 97)
பணிஎழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1940s–2016
அறியப்படுவதுகசல் (இசை)
விருதுகள்பத்மசிறீ
பாகிர்-இ-அரியானா
வலைத்தளம்
Official blog
குடியரசுத்ஜ தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மார்ச் 29, 2006 அன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் காசுமீரி லால் சாகிருக்கு பத்மசிறீ விருது வழங்கிய நிகழ்வு.

காசுமீரி லால் சாகிர் (Kashmiri Lal Zakir) கவிஞர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர் என்ற பன்முகங்கள் கொண்ட இந்தியாவைச் சேர்ந்த ஓர் உருது இலக்கியவாதியாவார்.[1] 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி சாகிர் பிறந்தார்.

1940 ஆம் ஆண்டுகளில் லாகூரிலிருந்து வெளியான அதாபி துனியா என்ற பத்திரிகையில் சாகிரின் முதலாவது கசல் கவிதை வெளியிடப்பட்டது. அன்று முதல் இவருடைய இலக்கியப் பயணம் நாவல்கள், நாடகங்கள், சிறுகதைகள் மற்றும் பயணக் குறிப்புகள் என விரிந்தது.[2]

சாகிர் அப்போதைய பிரிட்டிசு இந்தியாவில் பஞ்சாப் கல்வித் துறையில் பணியாற்றினார். அரியானா உருது அகாடமியுடன் அதன் தலைவராக பல ஆண்டுகளாகத் தொடர்பு கொண்டிருந்தார்.[3] இந்தி மற்றும் உருது மொழிகளில் எழுதும் வல்லமை கொண்டிருந்ததால் பல படைப்புகளை உருவாக்கினார்.[4][5] டின் சிகர் ஏக் சாவல், கசல் தொகுப்பு,[6] ஆப் முச்சே சோன் டூ என்ற நாவல்,[7] ஏய் மாவோ பெகனோ பெட்டியோ போன்றவை சில முக்கிய நூல்களாகும்.[8]

அரியானா அரசு வழங்குகின்ற பாகிர்-இ-அரியானா என்ற விருது சாகிருக்கு வழங்கப்பட்டுள்ளது.[1] இந்திய இலக்கியத்திற்கு சாகிர் செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 2006 ஆம் ஆண்டு நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருதை வழங்கி கௌரவித்தது.[9]

காசுமீரி லால் சாகிர் 2016 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 31 அன்று தன்னுடைய 97 ஆவது வயதில் காலமானார்.[10]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காசுமீரி_லால்_சாகிர்&oldid=3725375" இருந்து மீள்விக்கப்பட்டது