உள்ளடக்கத்துக்குச் செல்

காசுகர் குகை

ஆள்கூறுகள்: 43°12′10″N 5°26′57″E / 43.20278°N 5.44917°E / 43.20278; 5.44917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசுகர் குகை
(Cosquer Cave)
காசுகர் குகை
காசுகர் குகையில் உள்ள குதிரைப் பலகை
இருப்பிடம்மர்சேய், புரோவென்சு-ஆல்ப்சு-கோட் டி'அசூர், பிரான்சு
ஆயத்தொலைகள்43°12′10″N 5°26′57″E / 43.20278°N 5.44917°E / 43.20278; 5.44917
வகைகுகை ஓவியங்கள்
வரலாறு
கட்டப்பட்டதுஅண். 27,000 ஆண்டுகளுக்கு முன்பு
பயனற்றுப்போனதுஅண். 19,000 ஆண்டுகளுக்கு முன்பு

காசுகர் குகை (Cosquer Cave), பிரெஞ்சு; ([kɔskɛʁ]) இது; பிரான்சின் மார்சேயில் உள்ள காலன்க்யூ டி மோர்கியோவில், கேப் மோர்கியோவுக்கு அருகில் அமைந்துள்ளது. ஓலோசீன் கடல் மட்ட உயர்வு காரணமாக, குகையின் நுழைவாயில் 37 மீ (121 அடி) நீருக்கடியில் அமைந்துள்ளது, மேலும் இது பல்வேறு வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவிய வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. அதன் நீர்மூழ்கி நுழைவாயில் 1985 ஆம் ஆண்டு ஒரு தொழில்முறை மூழ்காளர் 'என்றி காசுகர்' என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. குகைக்குச் செல்லும் நீருக்கடியின் பாதை 1990 வரை குகை மூழ்காளர்களால் படிப்படியாக ஆராயப்பட்டது, அனால் முன்னதாக நீர் மூழ்காளர்களுக்கு குகையின் தொல்பொருள் தன்மை பற்றி தெரியாது.[1]

வரலாற்றுக்கு முந்தைய ஓவியங்கள் முதலில் நிலத்தடித்தொட்டியின் மறுபக்கத்திலிருந்து வெளிப்படுவதை மூழ்காளர்கள் உடனடியாகக் கண்டுபிடிக்கவில்லை. குகை மூழ்காளர்கள் நீருக்கடியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் கடைசி (1990-91) காலகட்டத்தில், குகையின் நீரில் மூழ்காத பகுதியில் வெளிப்பட்டனர். 1991 ஆம் ஆண்டில் மூன்று மூழ்காளர்கள் குகையில் தொலைந்து இறந்த பிறகு, அதன் இருப்பை பகிரங்கப்படுத்தப்பட்டபோது, ​​ஹென்றி கோஸ்கரின் பெயரிடப்பட்டது.[1]

விளக்கம்

[தொகு]
நுழைவு சுரங்கப்பாதை மற்றும் தற்போதைய கடல் மட்டத்துடன் குறுக்குவெட்டு

காசுகர் குகையை இப்போது 175 மீ (574 அடி) நீளமான சுரங்கப்பாதை வழியாக மூழ்காளர்கள் அணுகலாம்; நுழைவாயில் கடல் மட்டத்திலிருந்து 37 மீ (121 அடி) கீழே அமைந்துள்ளது, இது மக்கள் வாழ்ந்ததிலிருந்து உயர்ந்துள்ளது. பிலிசுடோசினின் பனிப்பாறை காலங்களில், நடுநிலக் கடல் கரையின் தெற்கே பல கிலோமீட்டர் தொலைவிலும், கடல் மட்டம் குகையின் நுழைவாயிலுக்குக் கீழே 100 மீ (330 அடி) வரையிலும் இருந்தது.[2]

கண்டுபிடிப்பு மற்றும் வரலாறு

[தொகு]

1985 ஆம் ஆண்டில், பிரெஞ்சு மூழ்காளர் என்றி கோசுகர் தனது வாழ்நாளில் ஒரு சிறந்த கண்டுபிடிப்பைச் செய்தார்: பிரான்சின் மார்சேய் கடற்கரையில் ஆழமான நீரை ஆராய்ந்தபோது, ​​நூற்றுக்கணக்கான வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் மற்றும் வேலைப்பாடுகளால் நிறைந்த ஒரு நீரடி குகையைக் கண்டார். 137-யார் நீள இயற்கை சுரங்கப்பாதை வழியாக மட்டுமே அணுகக்கூடிய இந்த தனித்துவமான குகை, அதை ஆராய முயன்ற குறைந்தது மூன்று பேர் இறப்பு உட்பட பிற ஆர்வமுள்ள மூழ்காளர்களையும் கவர்ந்தது. [3]

காசுகர் குகையின் நீண்ட மனித ஆக்கிரமிப்பு என்பது, 33,000 ஆண்டுகள் முதல் 19,000 ஆண்டுகள் வரை இருந்துள்ளது, இது மனித ஆக்கிரமிப்பின் இரண்டு முக்கிய, கிட்டத்தட்ட தடையற்ற கட்டங்களைக் கொண்டிருந்தது. 1992 மற்றும் 2012 க்கு இடையில் சேகரிக்கப்பட்ட நாற்பத்தொரு மாதிரிகளில் நடத்தப்பட்ட சுமார் அறுபது கரிமம்-14 திகதியிடல் சோதனைகளிலிருந்து இந்த திகதிகள் பெறப்பட்டுள்ளன.எனவே, இந்தக் குகையின் முதல் மனித ஆக்கிரமிப்பு சூவே குகையின் கடைசி மனித ஆக்கிரமிப்புக்கு சமகாலமானது, அதே நேரத்தில் கடைசி மனித ஆக்கிரமிப்பு, லாசுகாக்சு குகையின் (Lascaux caves) மனித ஆக்கிரமிப்புக்கு சமகாலமானது. 'சமகால' குகைகளின் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளில் ஆர்சி-சுர்-க்யூர் (Arcy-sur-Cure) (28,000 BP - யோன்), குசாக் குகை (29,000 BP - லெ புய்சன்-டி-காடுவின், டோர்டோகன்), பெச்-மெர்லே குகை (29,000 BP - கேப்ரெரெட்ஸ், லாட்), மற்றும் கூக்னாக் குகை (30,000 BP - பேரிக்னாக், லாட்) ஆகியவை அடங்கும்.[4]

சுற்றுலா

[தொகு]

மத்தியதரைக் கடலின் கலைக்கூடம் எனப்படும் இந்த காசுகர் குகையில் வாழ்ந்த ஓமோ சப்பியன்சுகள், விலங்குகளுடன் அவர்கள் கொண்டிருந்த உறவுகள், அவர்கள் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய விதங்கள் மற்றும் கடலில் அவர்களின் செயல்பாடுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. 2,500 (m²) பரப்பளவு கொண்ட ஒரு பகுதியில், ஒரு ஆழமான அனுபவத்தை அனுபவிக்கவும், இது பழங்காலக் கற்காலக் கலை மற்றும் குகை நீரில் மூழ்குவதற்கு வழிவகுத்த கடல் மட்ட உயர்வு ஆகியவற்றைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட உங்களை அனுமதிக்கிறது. நீரடி நிலையத்திலிருந்து புறப்பட்டு, ஆறு பேர் கொண்ட குழுக்களாக, அசல் குகையைப் போன்ற சூழல்நிலையில் உள்ள காசுகர் குகையின் பிரதியைப் பார்வையிடவும், மற்றும் ஆய்வு வாகனங்களில் வசதியாக அமரவும் 1,750 சதுர மீட்டர் குகையை ஆராயவும் . உங்கள் சுற்றுப்பயணத்தின் போது, ​​30,000 ஆண்டுகளுக்கு முன்பு குகையில் வாழ்ந்த ஓமோ சேபியன்களின் இரகசியங்களை அறிந்துக்கொள்ள கேட்பொலி வழிகாட்டி வர்ணனை உதவுதாக கூறப்படுகிறது. மேலும் வேலைப்பாடுகள், ஓவியங்கள், குகைக்கனிமப் படிவுகள், கைரேகைகள் மற்றும் புவியியல் அதிசயங்கள் மற்றும் அறிவியல் பூர்வமாக கடுமையான முறையில் நகலெடுக்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளன.[5]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "The Cave Paintings of the Cosquer Cave - by Jean Clottes, Jean Courtin, Luc Vanrell". www.bradshawfoundation.com (ஆங்கிலம்). 1994. Retrieved 2025-11-09.
  2. "The Paleolithic Mysteries of the Underwater 'Cosquer Cave' in France". www.thearchaeologist.org (ஆங்கிலம்). August 3, 2022. Retrieved 2025-11-10.
  3. "Tour a Submerged Cave Packed With Paleolithic Art—Without Ever Venturing Underwater". www.smithsonianmag.com (ஆங்கிலம்). June 9, 2022. Retrieved 2025-11-11.
  4. "The History of the Cave - Over the ages". www.grotte-cosquer.com (ஆங்கிலம்). 2025. Retrieved 2025-11-12.
  5. "Visit the Cosquer Cave - The Galerie Méditerranée". www.grotte-cosquer.com (ஆங்கிலம்). 2025. Retrieved 2025-11-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசுகர்_குகை&oldid=4404444" இலிருந்து மீள்விக்கப்பட்டது