உள்ளடக்கத்துக்குச் செல்

காசி பீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசி பீர்
சுந்தரவனக் காட்டில் புலியின் மீது காசி பீர் (1800 CE)
சுய தரவுகள்
பிறப்பு
நினைவிடம்குத்தியாரி சாரிப், மேற்கு வங்காளம்
சமயம்இசுலாம்

காசி பீர் (Gazi Pir) என்பவர் காசி பிர், காஜி பிர், பர்கான் காஜி அல்லது காஜி சாகேப் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு வங்காள (முஸ்லீம்) போர்வீரர் துறவி ஆவார். இவர் வங்காளத்தில் இசுலாம் பரவிய காலத்தில் 12 அல்லது 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவார். ஆபத்தான விலங்குகள் மீதான இவரது அதிகாரத்திற்கும் இயற்கை சக்திகளைக் கட்டுப்படுத்துவதற்கும் இவர் பெயர் பெற்றவர். தெற்கு வங்காளத்தின் புதிய உள்ளூர் முஸ்லிம் மக்கள் கங்கை வடிநிலத்தின் அடர்ந்த காடுகளில் குடியேற, இவை முக்கியமான குணங்களாக இருந்தன. இவரது வாழ்க்கை "காசி சுருளில்" காட்டப்பட்டுள்ளது. இது 1800ஆம் ஆண்டு வரையிலான 54 ஓவியங்களைக் கொண்ட ஒரு சுருளாகும், இது தற்போது இங்கிலாந்தின் இலண்டனில் உள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது.

சுந்தரவனக் காடுகளின் கிராமங்களில், புலிகளிடமிருந்து பாதுகாப்பு வேண்டி, போன்பிபி, தக்சின் ராய் ஆகியோருடன் காசி பீரும் வணங்கப்படுகிறார். புராணங்களின்படி, ஜாதி அல்லது மதம் எதுவாக இருந்தாலும், அனைவரும் சமம் என்றும், இவர்கள் இயற்கையுடன் இணக்கமாக வாழ வேண்டும் என்றும் போன்பிபி கற்பித்தார்.[1]

கொல்கத்தா நினைவுச்சின்னம்

[தொகு]
கொல்கத்தாவில் உள்ள பேலூர் மடத்தின் ஆற்றங்கரை வாயிலுக்கு வெளியே உள்ள கோவிலில் உள்ள அறிவிப்பு

1847ஆம் ஆண்டு கொல்கத்தாவில் தட்சிணேசுவர் காளி கோவிலை உருவாக்கிய இராணி ராசமணி, காசி பீரை ஒரு கனவில் கண்டார். இந்தக் கனவில், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்ட பேலூர் மடத்தின் ஆற்றங்கரை வாயிலுக்கு வெளியே அமைந்துள்ள ஓர்அரச மரத்தின் கீழ் தனக்காக ஒரு சன்னதியைக் கட்டும்படி காசி பீர், இராணியை அறிவுறுத்தினார். இந்த நினைவிடத்தில் இராமகிருஷ்ண பரமஹம்சர் "பிரசாதம்" வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டார்.[2]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jalais, Annu (2014). Forest of Tigers: People, Politics and Environment in the Sundarbans. Routledge. ISBN 978-1-136-19869-4.
  2. Chowdhury, Satyam Roy (2016). Sri Ramakrishna For You. Techno India. ISBN 9789384561192.

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசி_பீர்&oldid=4212371" இலிருந்து மீள்விக்கப்பட்டது