காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திரம்.

காசி நாட்டுக் கோட்டை நகரத்தார் சத்திரம் 1813-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இச்சத்திரம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு மிக அருகில் ஒரு நாற்சந்தியில் உள்ள கோதவுலியா (குதிரைகள் நிறுத்துமிடம்) எனும் பகுதியில் சுசீலா திரையரங்கத்திற்குப் பின்னால் காசி நாட்டுக்கோட்டைச் சத்திரம் அமைந்துள்ளது. வாடகை வண்டி ஓட்டிகளிடம் நாட் கோட் சத்தர் என்று கூறினால் இச்சத்திரத்திற்கு கொண்டு சேர்ப்பார்கள்.

நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் ஒரு மடம் போன்ற அமைப்பாகும். இங்கு ஒரு சிவலிங்கம் கோயில் உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து காசிக்குச் செல்பவர்களுக்கு மட்டும் இச்சத்திரத்தில் தங்குமிடம், மூன்றுவேளை உணவு வசதிகளுக்கு சிறு அளவில் கட்டணம் பெறப்படுகிறது. மேலும் கட்டணம் இன்றி தங்கும் பெரிய அறைகளும் உள்ளது. இச்சத்திரம் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூக அமைப்பினரால் பராமரிக்கப்படுகிறது.

சிறப்பு[தொகு]

  • காசி விஸ்வநாதர் கோயிலை பூட்டுவதற்கு முன்னர் நடைபெறும் இராக்கால பூஜையின் போது, அன்றாடம் இந்த சத்திரத்திலிருந்து பூஜைக்கான பால், பழம், பூக்களுடன், மேள தாளத்துடன் சென்றுடன் காசி விஸ்வநாதர் வழிபாடு நடைபெறும்.
  • இச்சத்திரத்திற்கு சொந்தமாக, காசி நகரத்தில் பாயும் கங்கை ஆற்றின் கரையில் சிக்புரா பகுதியில் 62,000 சதுர அடி பரப்பில் நந்தவனம் உள்ளது.[1]

சத்திரத்தின் நிலங்கள்[தொகு]

வட இந்தியாவில் உள்ள பிற நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரங்கள்[தொகு]

வட இந்தியாவில் முக்கிய நகரங்களில் நாட்டுக்கோட்டை நகரத்தார் விடுதிகள் உள்ளது.[2]

  • அலகாபாத்தில் உள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் (தொலைபேசி எண் 0532-2501275) குறைந்த கட்டணத்தில் தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படுகிறது.[3]
  • அயோத்தி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம்
  • கயா நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம்
  • தில்லி
  • கொல்கத்தா
  • நாசிக்

தென்னிந்தியாவில் நகரத்தார் விடுதிகள்[தொகு]

தென்னிந்தியாவில் காரைக்குடி, தேவகோட்டை, மதுரை, சிதம்பரம், திருவண்னாமலை, காஞ்சிபுரம், திருவெற்றியூர் உள்ளிட்ட பல கோயில் நகரங்களில் நாட்டுக்கோட்டை நகரத்தார் விடுதிகள் உள்ளன.[4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]