காசிம்புதுப்பேட்டை
கீரமங்கலம்-காசிம்புதுப்பேட்டை
மாநிலம் = தமிழ்நாடு | |||||
ஆள்கூறு | |||||
நாடு | ![]() | ||||
மாவட்டம் | புதுக்கோட்டை | ||||
வட்டம் | ஆலங்குடி | ||||
பேரூராட்சித்தலைவர் | துரை.தனலெட்சுமி | ||||
மக்களவைத் தொகுதி | கீரமங்கலம்-காசிம்புதுப்பேட்டை
மாநிலம் = தமிழ்நாடு | ||||
மக்கள் தொகை • அடர்த்தி |
9,360 (2011[update]) • 110/km2 (285/sq mi) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
குறியீடுகள்
|
காசிம்புதுப்பேட்டை , புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கீரமங்கலம் பேரூராட்சியில் அமைந்துள்ள சிறிய கிராமம் ஆகும். கீரமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் இந்த ஊர் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 808. இதில் ஆண்கள் 410, பெண்கள் 398 பேர். இக்கிராமத்தில் இசுலாமிய மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.[1] [2][3]
தெருக்கள்
[தொகு]

காசிம்புதுப்பேட்டை கிராமத்தில் மொத்தம் ஐந்து தெருக்கள் உள்ளன.
1.பள்ளிவாசல் தெரு 2.கட்டபொம்மன் தெரு
3.முஸ்லிம் தெரு
4.கித்துவாய் தெரு
5.அருணாச்சல தேவர் தெரு
பள்ளிவாசல்
[தொகு]காசிம்புதுப்பேட்டையில் இசுலாமிய மக்கள் தொழுகை செய்வதற்காக இவ்வூரின் ஜமா-அத்திற்கு சொந்தமான பள்ளிவாசல் ஒன்று உள்ளது.

.
அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள்
[தொகு]காசிம்புதுப்பேட்டையில் ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும், ஒரு அங்கன்வாடி மையமும், ஒரு கிளை அஞ்சலகமும், ஒரு கூட்டுறவு அங்காடியும் செயல்பட்டு வருகின்றன.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
[தொகு]
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று காசிம்புதுப்பேட்டையில் உள்ளது. இப்பள்ளியில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் 165 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
அஞ்சல் நிலையம்
[தொகு]காசிம்புதுப்பேட்டையில் கீரமங்கலம் அஞ்சல் நிலையத்தின் கிளை ஒன்று உள்ளது. இவ்வூர் மக்கள் இந்த அஞ்சலகத்தில் உள்ள விரைவு அஞ்சல், கிராம அஞ்சலக சேமிப்பு, கடித போக்குவரத்து போன்ற வசதிகளை நல்ல முறையில் பயன்படுத்தி வருகின்றனர்.
அங்கன்வாடி மையம்
[தொகு]இம்மையத்தில் காசிம்புதுப்பேட்டை கிராமத்தில் உள்ள ஒன்று முதல் நான்கு வயது குழந்தைகளுக்கு சத்துணவு, சத்து மாவு போன்றவை வழங்கப்படுகின்றன. மேலும் முன் பருவக் கல்வியும் இங்கு கற்றுத்தரப்படுகிறது.
புகைப்படத்தொகுப்புகள்
[தொகு]
