காசா மலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காசா மலைகள் (Khasa Hills) பாக்கித்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சிக்கும் வடமேற்கு கராச்சி பகுதியில் உள்ள ஆரங்கிக்கும் வடக்கு நாசிமாபாத்துக்கும் இடையில் அமைந்துள்ளது. கராச்சியில் உள்ள இம்மலைகள் கிர்தர் மலைத்தொடரின் கிளைகளாகும். மேலும் இவை வடக்கே அதிகபட்சமாக 528மீ உயரத்தில் உள்ளன. காசா மலைகள் வறண்ட மற்றும் தாவரங்கள் அற்றவையாகும். இதன் முகடுகளில் பரந்த இடைப்பட்ட சமவெளிகள், வறண்ட ஆற்றுப் படுகைகள் மற்றும் நீர் வழித்தடங்கள் உள்ளன.[1]

2009 ஆம் ஆண்டில் இரு பகுதிகளையும் இணைக்க மலைகள் வழியாக ஒரு சாலை அமைக்கப்படும் வரை, காசா மலைகள் ஆரங்கி மற்றும் வடக்கு நாசிமாபாத் இடையே ஒரு தடையாக செயல்பட்டன.[2] மத்திய கராச்சிக்கு அருகில் உள்ள மலைப்பகுதிகளில் திட்டமிடப்படாத குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. வடமேற்கு பாக்கித்தானில் இதேபோன்ற புவியியல் சூழ்நிலையில் வாழும் பஃக்தூன் மக்களில் பெரும்பாலும் குடியேற்றங்களில் வசிக்கின்றனர்.[3]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. The case of Karachi, Pakistan
  2. "Kolachi, NOS, The News International". jang.com.pk. பார்க்கப்பட்ட நாள் 2020-04-19.
  3. Kalia, Ravi (2015-08-11) (in en). Pakistan's Political Labyrinths: Military, society and terror. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-317-40544-3. https://books.google.com/books?id=IPBWCgAAQBAJ&dq=Khasa+hills+karachi&pg=PA107. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசா_மலைகள்&oldid=3414344" இலிருந்து மீள்விக்கப்பட்டது