உள்ளடக்கத்துக்குச் செல்

காசர்கோடு சேலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kasaragod Saree
காசர்கோடு சேலை

காசர்கோடு சேலை (Kasaragod Saree) என்பது கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள சாலியர் சமூகத்தைச் சேர்ந்த நெசவாளர்களால் தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய பருத்தி புடவை ஆகும். இவை கையால் நெய்யப்பட்டவை மற்றும் நீடித்து உழைக்கக்கூடியவை. இவை பாரம்பரிய கேரள புடவையிலிருந்து வேறுபட்டவை. இது அண்டைப் பகுதியான கரவாலி பாணியின் தாக்கத்தை வெளிப்படுத்துகின்றன.[1]

வரலாறு

[தொகு]

இந்த நெசவு பாரம்பரியம் 18ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கியதாக இதன் தோற்ற வரலாறு குறிக்கிறது. இது கரவாலியிலிருந்து தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்த சாலியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாலும், மைசூர் இராச்சியத்திலிருந்து இப்பகுதிக்கு இடம்பெயர்ந்து இப்பகுதியில் குடியேற்றங்களை உருவாக்கிய பத்மசாலியாராலும் நெய்யப்படுகிறது.[2]

முக்கியத்துவம்

[தொகு]

கேரளாவில் உள்ள நான்கு நெசவு மரபுகளில் இதுவும் ஒன்று. மற்ற புகழ் வாய்ந்த சேலைகள் பலராமபுரம், குத்தம்புள்ளி, சேந்தமங்கலம் ஆகும்.[3]

இந்த புடவையின் முக்கியப் பகுதி பொதுவாகச் சாயமிடப்பட்ட நூல்களைப் பயன்படுத்தி வெற்று அல்லது கோடிட்ட வடிவத்தில் நெய்யப்படுகிறது. ஜாக்குவார்டு அல்லது பேட்டுப்பொறி நுட்பங்களைப் பயன்படுத்தி கையால் நெய்யப்பட்ட சேலைகள் ஆகும். இவை மிகவும் கவர்ச்சிகரமானவை. இந்த புடவைகள் 60 - 100 இழை எனும் அதிக நூல் எண்ணிக்கையுடன் தயாரிக்கப்படுகின்றன. மேலும் தொட்டிச் சாயத்தைப் பயன்படுத்துவதால் நீண்ட காலம் நீடிக்கும் தன்மையுடையன.[4] அண்மையில் இந்தச் சேலைகள் பட்டு இழை கலந்து தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது.

1938ஆம் ஆண்டு நிறுவப்பட்ட காசர்கோடு நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கம், தற்போது இந்தப் புடவைகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தியும், நெசவு பயிற்சி அளித்தும் இந்தப் பாரம்பரியத்தை உயிர்ப்பித்து வருகிறது.[5] இந்த புடவைகள் தினசரி பயன்பாட்டிற்கும் அணிவதற்கும் ஏற்றதாக இருப்பதால் நிலையான ஆதரவைக் கொண்டுள்ளது.[6]

புவியியல் சார்ந்த குறியீடு

[தொகு]

2009ஆம் ஆண்டு, காசர்கோடு புடவைகளுக்கு புவிசார் குறியீடு கோரி கேரள அரசு விண்ணப்பித்தது. இந்திய அரசாங்கம் 2010ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக புவியியல் சார்ந்த குறியீட்டினை வழங்கியது.[7]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kasaragod: Exploring North Kerala". www.outlookindia.com/outlooktraveller/ (in ஆங்கிலம்). Retrieved 2021-05-30.
  2. "Kasaragod Sarees (Kerala) (GI Regn No. 170) | Textiles Committee". textilescommittee.nic.in. Retrieved 2021-05-30.
  3. "Weaving tradition of Kasaragod Sarees". Kerala Tourism (in ஆங்கிலம்). Retrieved 2021-05-30.
  4. "Kasaragod Cotton". Isha Sadhguru (in ஆங்கிலம்). 2020-08-05. Retrieved 2021-05-30.
  5. P. Sudhakaran (Dec 28, 2013). "Kasargod Saree: Reviving a tradition | Bengaluru News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2021-05-30.
  6. P. Sudhakaran (Dec 28, 2013). "Kasargod Saree: Reviving a tradition | Bengaluru News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2021-05-30.
  7. "Details | Geographical Indications | Intellectual Property India". ipindiaservices.gov.in. Retrieved 2021-05-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசர்கோடு_சேலை&oldid=3649568" இலிருந்து மீள்விக்கப்பட்டது