காசம்பட்டி பல்லுயிர் சூழலியல் பாரம்பரியத் தளம்
காசம்பட்டி பல்லுயிர்த் தளம் என்பது தமிழ்நாட்டின், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டத்தில் உள்ள ரெட்டியாபட்டி வருவாய் கிராமத்தில் அமைந்துள்ளது.[1] திண்டுக்கல் மாவட்ட எல்லையில், அழகர் மலை வனச்சரக காப்புக் காடுகளுக்கு அருகில், காசம்பட்டி பல்லுயிர்த் தளம் 4.97 எக்டேர் பரப்பளவில் உள்ளது.
காசம்பட்டி பல்லுயிர்த் தளத்தில் 48 வகை தாவர இனங்கள், 22 வகை புதர்ச் செடிகள், 21 வகை கொடிகள் மற்றும் 29 வகை மூலிகைகள், 12க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், பாலூட்டி இனங்கள், ஊர்வன என எண்ணற்ற பூச்சி இனங்கள் உள்ளது.[2]
காசம்பட்டி வீரகோவில் வனப்பகுதியை உயிரியல் பன்முகத்தன்மை சட்டம் 2002ன் கீழ் பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவித்ததை 12 மார்ச் 2025 அன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட்து.[3][4] அரிட்டாபட்டி பல்லுயிர் சூழலியல் பாரம்பரியத் தளத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் இரண்டாவதாக காசம்பட்டி பல்லுயிர் சூழலியல் பாரம்பரியத் தளம் உள்ளது.[5]
காசம்பட்டி கிராம மக்கள், வீரணனை தங்கள் தெய்வமாக வழிபடுகின்றனர். சுமார் 2 ஆயிரம் பேர் வாழும் காசம்பட்டி வீரகோவில் வனப்பகுதியில் மாம்பழம், சிறு தானியங்கள், தக்காளி, கரும்பு, கத்தரி விளைச்சல் ஆகியவை முதன்மைத் தொழிலாக உள்ளது.
அமைவிடம்
[தொகு]திண்டுக்கல்லுக்கு தென்கிழக்கே 35 கிலோமீட்டர் தொலைவிலும்; மதுரைக்கு வடகிழக்கே 40.8 கிலோமீட்டர் தொலைவிலும் காசம்பட்டி பல்லுயிர்த் தளம் உள்ளது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ நத்தம் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- ↑ பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட திண்டுக்கல் காசம்பட்டியில் என்ன இருக்கிறது?
- ↑ https://cms.tn.gov.in/cms_migrated/document/GO/envfor_e_ms_52_2025.pdf
- ↑ தமிழகத்தின் 2வது பல்லுயிர் தளமானது காசம்பட்டி வீரகோயில் வனப்பகுதி
- ↑ Kasampatty is TN’s second biodiversity heritage site