காங்ச்சேன்ட்ஸோங்கா தேசிய பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வட சிக்கிம் மாவட்டத்தில் 850 சதுர கிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ள இந்த தேசிய பூங்கா 1977 இல் நிறுவப்பட்டது. அண்மை நகரம் சுங்தாங் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பூங்காவுக்குச் செல்வதற்கான இரயில் நிலையம் 221 கிலோமீட்டர் தூரத்தில் ஜல்பாய் குடியில் உள்ளது. அண்மை விமான நிலையம் மேற்கு வங்கத்திலான பாக்டோக்ரா, 221 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பூங்காவில் உள்ள உயிரினங்கள் முகில் வேங்கை, பனி வேங்கை, சோம்பல் கரடி, புனுகுப்பூனை, இமாலய கருங்கரடி, பச்சை புறா முதலியனவாகும். ஏப்ரல், மே, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் பூங்காவைச் சுற்றிப் பார்க்க ஏற்றவை. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. இந்தியாவின் தேசிய பூங்காக்கள், ஆர். எஸ். பிஷ்ட்-தமிழாக்கம்: ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி, தகவல் ஒலி பரப்பு அமைச்சகம், இந்திய அரசு 2000