உள்ளடக்கத்துக்குச் செல்

காங்க் ஹா-நஐல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காங்கு கா நியூல்
பிறப்புகிம் கா நியூல்
பெப்ரவரி 21, 1990 (1990-02-21) (அகவை 34)
புசான்
தென் கொரியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2006-இன்று வரை

காங்கு கா நியூல் (ஆங்கில மொழி: Kang Ha-neul, 강하늘) (பிறப்பு: பெப்ரவரி 21, 1990) என்பவர் ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் தி ஹெர்ஸ் (2013), மிச்சாங்: இஙகம்ப்லேட் லைப் (2014), மூன் லவ்வேர்ஸ்: ஸ்கேர்லெட் ஹார்ட் ரயீவ் (2016), வென் தி காமெலியா புளூம்சு (2019), இன்சிடெர் (2022) போன்ற தொடர்களிலும், டுவெண்ட்டி (2015), டோங்ஜி: தி போர்ட்ரைட் ஒப் அ பொயட் (2016), நியூ டரியல் (2017), மிட்நைட் ரன்னர்ஸ் (2017), போர்கோட்டேன் (2017), லவ் ரீசெட் (2023) போன்ற திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.

இவர் 2020 ஆம் ஆண்டில், சிறந்த நடிகருக்கான பேக்சாங் கலை விருதைப் பெற்றார் மற்றும் போர்ப்ஸ் கொரியா சிறந்த நட்சத்திர வருடாந்திர பட்டியலில் 23 வது இடத்தைப் பிடித்தார். அத்துடன் 2019 ஆம் ஆண்டின் கேலப் கொரியாவின் தொலைக்காட்சி நடிகருக்கான 2வது இடத்தையும் பெற்றார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

இவர் பெப்ரவரி 21, 1990 ஆம் ஆண்டு தென் கொரியாவில் புசான் நகரில் பிறந்தார்.

தொழில்

[தொகு]

இவர் தனது தொழில் வாழ்க்கையை இசை நாடகத்தில் தொடங்கினார், குறிப்பாக திரில் மீ (2010), பிரின்சு புஸ்சல் (2011),[1] பிளாக் மேரி பாபின்ஸ் (2012) மற்றும் அசாசின்ஸ் (2012). பின்னர் இவர் டு த பியூட்டிஃபுல் யூ (2012),[2] தி ஹீர்ஸ் (2013) மற்றும் மிச்சாங்: இஙகம்ப்லேட் லைப் (2014) போன்ற தொடர்களில் துணை நடிகராக நடித்தார்.[3]

இவர் 2015 இல் மூன்று படங்களில் தோன்றினார்; இசைத் திரைப்படம் சி'ஈஸ்ட் சி போன்,[4] காலப் படமான எம்பயர் ஆப் லஸ்ட்[5] மற்றும் ட்வென்டி. இதற்காக இவர் பல சிறந்த புதிய நடிகருக்கான விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

இவர் தனது கட்டாய இராணுவ சேவையை செப்டம்பர் 11, 2017 அன்று நான்சான் கொரிய இராணுவ பயிற்சி மையத்தில் தொடங்கினார்.[6] பின்னர் இவரது நிறைவு விழா அக்டோபர் 24 அன்று நடந்தது, அதில் இவர் அடிப்படை பயிற்சியின் போது இவரது முன்மாதிரியான செயல்திறனுக்காக அங்கீகரிக்கப்பட்டார்.[7] பின்னர் பெப்ரவரி 22, 2019 அன்று, இராணுவ மனிதவள நிர்வாகத்தின் கெளரவ தூதராக இவர் நியமிக்கப்பட்டார்.[8] இவரது பணி மே 23, 2019 அன்று முடிவடைந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kwon, Mee-yoo (September 9, 2011). "Musical portrays a missing prince at royal palace". The Korea Times. Archived from the original on June 26, 2018. பார்க்கப்பட்ட நாள் July 20, 2013.
  2. Kamarudin, Syahida (June 11, 2012). "Kang Ha-neul joins "To Beautiful You"". Yahoo! Singapore. Archived from the original on January 23, 2019. பார்க்கப்பட்ட நாள் January 22, 2019.
  3. Bae, Sun-young (July 26, 2013). "INTERVIEW: Actor Kang Ha neul". TenAsia. Archived from the original on August 23, 2013.
  4. Ha, Soo-jung (June 28, 2014). "Interview: Kang Ha Neul Speaks Up on His Lack of Greed for Lead Roles". enewsWorld. Archived from the original on March 4, 2016. பார்க்கப்பட்ட நாள் June 29, 2014.
  5. Ha, Soo-jung (June 29, 2014). "Interview: Kang Ha Neul Talks Dating Style, Celeb Friends and More". enewsWorld. Archived from the original on March 4, 2016. பார்க்கப்பட்ட நாள் July 1, 2014.
  6. "Kang Ha-neul confirms enlistment date". Kpop Herald. July 19, 2017. Archived from the original on July 10, 2018. பார்க்கப்பட்ட நாள் July 10, 2018.
  7. "Kang Ha-neul Promoted to "Private First Class"". Hancinema. Dec 31, 2017. Archived from the original on June 7, 2019. பார்க்கப்பட்ட நாள் June 7, 2019.
  8. Michelle (February 22, 2019). "[Kang Ha-neul Becomes Honorary Ambassador for the Military Manpower Administration". hancinema. Archived from the original on October 4, 2022. பார்க்கப்பட்ட நாள் June 7, 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காங்க்_ஹா-நஐல்&oldid=3865844" இலிருந்து மீள்விக்கப்பட்டது