காங்கேயன் பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவில்

ஆள்கூறுகள்: 11°16′27″N 77°48′02″E / 11.2741784°N 77.8005477°E / 11.2741784; 77.8005477
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நட்டாற்றீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:ஈரோடு
அமைவு:காங்கேயன் பாளையம், கரூர் சாலை, ஈரோடு
ஆள்கூறுகள்:11°16′27″N 77°48′02″E / 11.2741784°N 77.8005477°E / 11.2741784; 77.8005477
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

நட்டாற்றீஸ்வரர் கோவில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் காங்கேயன் பாளையம் எனும் ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும்.[1][2]

தொன்மம்[தொகு]

சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இமய மலையில் திருமணம் நடைபெற்ற இருந்தது. அத்திருமணத்தை காண தேவர்கள், மக்கள், கணங்கள் அனைவரும் ஓரிடத்தில் கூடுவதால் சமநிலை இழக்கும். அதனைத் தடுக்க சிவபெருமான் அகத்திய முனிவரை அழைத்து பொதிகை மலை சென்று உலகை சமப்படுத்தக் கட்டளையிட்டார்.

அகத்தியர் தென்னகம் நோக்கி வரும் போது வாதாபி - வில்வலன் எனும் இரு அரக்கர்களை அழித்தார். அதனால் அசுரஹத்தி தோஷம் பிடித்து. அதனை நீக்க காவிரி ஆற்றின் நடுவில் இருந்த குன்றில் மணலில் லிங்கம் செய்து பூஜை செய்தார். காட்டில் விளைந்திருந்த கம்பை எடுத்து கையால் திரித்து மாவாக்கி, நீர் விட்டுக் காய்ச்சிப் படைத்தார் என்று தலபுராணம் கூறுகிறது.

சன்னதிகள்[தொகு]

  • அகத்தீஸ்வரர் என்கிற நட்டாற்றீஸ்வரர்
  • நல்லநாயகி என்கிற அன்னபூரணி
  • தகப்பன் சாமி என்ற முருகன்
  • காவிரி கண்ட விநாயகர்


சிறப்பு நாட்கள்[தொகு]

[3]

சிறப்பு வழிபாடு[தொகு]

தமிழ் புத்தாண்டு அன்று அதிகளவில் பக்தர்கள் கோவிலுக்கு வருகிறார்கள்.[4][5] சித்திரை முதல் நாள் அன்று மூலவர் அகத்தீஸ்வரருக்கு தயிர் கலந்த கம்பங்கூழ் நைவேத்யமாகப் படைக்கப்படுகிறது. [3]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]