காக்ரேன் எம்ஆர்டி நிலையம்
KG21 காக்ரேன் | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
காக்ரேன் நிலையம் | ||||||||||||||||
| பொது தகவல்கள் | ||||||||||||||||
| வேறு பெயர்கள் | Cochrane MRT station Stesen Cochrane MRT 葛京 | |||||||||||||||
| அமைவிடம் | காக்ரேன் சாலை, | |||||||||||||||
| ஆள்கூறுகள் | 3°12′23″N 101°34′49″E / 3.20639°N 101.58028°E | |||||||||||||||
| உரிமம் | ||||||||||||||||
| இயக்குபவர் | ||||||||||||||||
| தடங்கள் | 9 காஜாங் | |||||||||||||||
| நடைமேடை | 1 தீவு மேடை | |||||||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 தடங்கள் | |||||||||||||||
| இணைப்புக்கள் | ||||||||||||||||
| கட்டமைப்பு | ||||||||||||||||
| கட்டமைப்பு வகை | நிலத்தடி நிலையம் | |||||||||||||||
| நடைமேடை அளவுகள் | 3 | |||||||||||||||
| தரிப்பிடம் | ||||||||||||||||
| துவிச்சக்கர வண்டி வசதிகள் | ||||||||||||||||
| மாற்றுத்திறனாளி அணுகல் | ||||||||||||||||
| மற்ற தகவல்கள் | ||||||||||||||||
| நிலையக் குறியீடு | KG21 | |||||||||||||||
| வரலாறு | ||||||||||||||||
| திறக்கப்பட்டது | KG21 17 சூலை 2017 | |||||||||||||||
| சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
| ||||||||||||||||
காக்ரேன் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Cochrane MRT Station; மலாய்: Stesen MRT Cochrane) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நிலத்தடி விரைவுப் போக்குவரத்து (MRT) நிலையம் ஆகும். கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் நிலையங்களில் ஒன்றாகும்.
இந்த நிலையம் தற்போது கோலாலம்பூர், காக்ரேன் பகுதியில் காக்ரேன் சாலை, பீல் சாலை (Peel Road), செல்லி சாலை (Shelley Road) பகுதிகளுக்குச் சேவை செய்கிறது.
பொது
[தொகு]இரண்டு பெரிய கடைவல வளாகங்களான மைடவுன் சாப்பிங் சென்டர் (MyTown Shopping Centre); மற்றும் சன்வே வேலாசிட்டி மால் (Sunway Velocity Mall) ஆகியவை காக்ரேன் நிலையத்திற்கு அருகில் உள்ள வணிக வளாகங்கள் ஆகும். மைடவுன் சாப்பிங் சென்டர் ஒரு நிலத்தடி பாதசாரி இணைப்புப் பாதை வழியாக நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் வேலாசிட்டி மால் ஓர் உயர்ந்த பாதசாரி பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது.
சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையின் கீழ் காக்ரேன் எம்ஆர்டி நிலையம் 2017 சூலை 17-ஆம் திகதி திறக்கப்பட்டது.[1]
காக்ரேன் நிலையம்; செராஸ் பகுதியின் கோக்ரேன் சாலை, பீல் சாலை மற்றும் செல்லி சாலைகளில் அமைந்துள்ளது. தற்போது காக்ரேன் நிலையம் அமைந்துள்ள இடம் முன்னர் அரசு ஊழியர்களின் குடியிருப்பு பகுதியாக இருந்தது.
நிலைய அமைப்பு
[தொகு]| G | தெருநிலை | நுழைவாயில் A நுழைவாயில் B (→) பேருந்து நிறுத்தம் (→) தனியார் வாடகை ஊர்திகள் நிறுத்துமிடம் (→) மைடவுன் சாப்பிங் சென்டர் (→) இக்கியா செராஸ் (→) பாதசாரி மேம்பாலம் (→) சன்வே வேலாசிட்டி மால் |
| B1 | எம்ஆர்டி மேல் இணைப்புவழி | நிலத்தடி பாதசாரி இணைப்புவழி (→) மைடவுன் சாப்பிங் சென்டர் |
| B3 | எம்ஆர்டி கீழ் இணைப்புவழி | எம்ஆர்டி நிலையக் கட்டுப்பாடு (→) எம்ஆர்டி வாடிக்கையாளர் சேவை அலுவலகம் (→) பயணச்சீட்டு இயந்திரங்கள் (→) கட்டண வாயில்கள் (→) நுழைவாயில் C |
| B4 | எம்ஆர்டி நடைமேடை நிலை | நடைமேடை 1: 9 காஜாங் (→) KG35 காஜாங் தொடருந்து (→) |
| தீவு நடைமேடை (கதவுகள் வலதுபுறம் திறக்கும்) | ||
| நடைமேடை 2: 9 காஜாங் (→) KG04 குவாசா டாமன்சாரா (←) |
வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்
[தொகு]| காஜாங் வழித்தட நிலையம் | |||
| நுழைவாயில் | இடம் | இலக்கு | தோற்றம் |
|---|---|---|---|
| A | காக்ரேன் சாலை | பேருந்து நிறுத்தம், தனியார் வாடகை ஊர்திகள் நிறுத்துமிடம், காக்ரேன் சாலை, மைடவுன் சாப்பிங் சென்டர் | |
| B | செல்லி சாலை | பீல் சாலை, சன்வே வேலாசிட்டி மால் (பாதசாரி பாலம் வழியாக), மலேசிய புனித ஜான் தலைமையகம், புனித இருதய தேவாலயம். | |
| மைடவுன் சுற்று வழி | கீழ் காக்ரேன் சாலை | மைடவுன் கடைவல மையம் (B1 தளம்), இக்கியா செராஸ் | |
| சன்வே வேலாசிட்டி சுற்று வழி | செல்லி சாலை; பீல் சாலை | சன்வே வேலாசிட்டி வணிக வளாகம் (முதல் தளம்); (நுழைவாயில் B வழியாக அணுகலாம்) | |
பேருந்து சேவைகள்
[தொகு]| பேருந்து | தொடக்கம் | இலக்கு | பயணவழி |
|---|---|---|---|
| சாமலின் பெர்காசா பூங்கா | KG21 காக்ரேன் எம்ஆர்டி நிலையம் | பெர்டானா உத்தாமா சாலை; பான்டான் பெர்டானா;இன்டா சாலை; தாமான் செராஸ் இன்டா; சுங்கை பீசி விரைவுச்சாலை; AG14 பான்டான் ஜெயா எல்ஆர்டி; பிஜிஆர்எம் கட்டிடம்; KG22 AG13 எம்ஆர்டி/எல்ஆர்டி மாலூரி; செல்லி சாலை; காக்ரேன் சாலை; சர்க்குலர் சாலை (துன் ரசாக் சாலை) | |
| KG21 காக்ரேன் எம்ஆர்டி நிலையம் | துன் ரசாக் நகரம் | சர்க்குலர் சாலை (துன் ரசாக் சாலை) | |
| KG21 காக்ரேன் எம்ஆர்டி நிலையம் | பண்டார் செரி பரமேசுவரி | சர்க்குலர் சாலை (துன் ரசாக் சாலை); SP12 எல்ஆர்டி செராஸ்; செல்லி சாலை |
காட்சியகம்
[தொகு]காக்ரேன் எம்ஆர்டி நிலையம் (2022)
மேலும் காண்க
[தொகு]- செராஸ்
- ரேபிட் ரெயில்
- ரேபிட் கேஎல்
- எம்ஆர்டி நிறுவனம்
- காஜாங் வழித்தடம்
- காஜாங் தொடருந்து நிலையம்
- விரைவுப் போக்குவரத்து
- கோலாலம்பூர் சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Launch Of MRT Phase 2 Today Gets M’sians All Excited, How Will Commuters Benefit" (in en-gb). Malaysian Digest இம் மூலத்தில் இருந்து 2017-07-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170729220121/http://www.malaysiandigest.com/frontpage/282-main-tile/686803-the-launch-of-mrt-phase-2-today-gets-m-sians-all-excited-how-will-commuters-benefit.html.
- ↑ "Maluri MRT Feeder Bus T352 | mrt.com.my". mrt.com.my. Retrieved 20 January 2021.
- ↑ "Cochrane MRT Feeder Bus T400 | mrt.com.my". mrt.com.my. Retrieved 20 January 2021.
- ↑ "Cochrane MRT Feeder Bus T401 | mrt.com.my". mrt.com.my. Retrieved 20 January 2021.
