உள்ளடக்கத்துக்குச் செல்

காக்சின் மாடக்கடிகாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காக்சின் இடைவிடாது ஓடும் கடிகார வரைபடம்
காக்சின் மாடக்கடிகாரச் சுருள் சுற்று இயக்கி

காக்சின் மாடக்கடிகாரம் (Cox's timepiece) என்பது 17660 ல் சேம்சு காக்சு (James Cox) உருவாக்கிய கடிகாரமாகும். சான் சோசப் மெர்லின் (John Joseph Merlin) உடன் இணைந்து இதனை உருவாக்கினார். இவர்கள் இருவரும் இணைந்து இயந்திர மனிதனை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். காக்சு இடைவிடாது ஓடக் கூடியக் கருவியை வடிவமைத்தார். பாதரச காற்றழுத்தமானியைக் கொண்டு வளிமண்டல அழுத்த மாறுபாட்டைப் பயன்படுத்தி இக்கருவியை இயக்கினார். லண்டன் நகரிலுள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் இன்றளவும் இயங்காத நிலையில் இக் கடிகாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.[1]

வடிவமைப்பு மற்றும் வரலாறு

[தொகு]

இக்கடிகாரம்,மற்ற இயக்கமுறை கடிகாரங்களைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. புவி வளிமண்டல அழுத்தத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டு ஆற்றலை உருவாக்கி அதன் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உருளை வடிவ கொள்கலனுன் முதன்மைக்கம்பிச் சுருள் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. இக்கடிகாரம் இடைவிடாது இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டாலும், இதன் இயங்கு சுருள் தேவைக்கு மேல் சுற்றப்படாமலிருக்க தேவையான பாதுகாப்பு அமைப்புகளையும் கொண்டுள்ளது. ஃபோர்டின் பாதரச காற்றழுத்தமானியே இக் ககாரத்தின் முதன்மை இயக்கியாகும். இந்தக் காற்றழுத்தமானி 68 கிலோகிராம் எடையும் 5 லிட்டர் பாதரசத்தையும் கொண்டுள்ளது.[2]

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ord-Hume, Arthur W. J. G. (1977). Perpetual Motion: The History of an Obsession. New York: St. Martin's Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-60131-X., p. 118 (online copy, p. 118, கூகுள் புத்தகங்களில்)
  2. Bruton, Eric (1979). The History of Clocks and Watches. New York: Rizzoli International Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8478-0261-2.

வெளியிணைப்புகள்

[தொகு]

இதழ்கள்

[தொகு]
  • William Nicholson, "Concerning those perpetual motions which are produced in machines by the rise and fall of the barometer or thermometrical variations in the dimensions of bodies". Philosophical Journal.
  • William Nicholson, Philosophical Journal, vol I, 1799, p375

புத்தகங்கள்

[தொகு]

வானொலி

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்சின்_மாடக்கடிகாரம்&oldid=3583517" இலிருந்து மீள்விக்கப்பட்டது