உள்ளடக்கத்துக்குச் செல்

காக்காயன் தோப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காக்காயன் தோப்பு
Kakkayanthope
புற வளர்ச்சி
நாடு இந்தியா
மாநிலம்புதுச்சேரி
மாவட்டம்பாண்டிச்சேரி
வட்டம் (தாலுகா)புதுச்சேரி
ஒன்றியம்அரியாங்குப்பம்
மொழிகள்
 • அலுவல்பூர்வம்பிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அ.கு.எண் -->
605 007
தொலைபேசிக் குறியீடு0413
வாகனப் பதிவுPY-01
பாலின விகிதம்50% /
அரியாங்குப்பம் ஒன்றியத்தில் காக்காயன் தோப்பு கிராமம்
காக்காயன் தோப்பு கிராமம்

காக்காயன் தோப்பு (Kakkayanthope) என்பது இந்தியாவின் புதுச்சேரி பிரதேசத்தில் அமைந்துள்ள அரியாங்குப்பம் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்[1].

புவியியல்

[தொகு]

வடக்கில் அரியாங்குப்பம் ஆறும், கிழக்கில் வீராம்பட்டிணம் என்ற பெரிய கடற்கரை கிராமமும், தெற்கில் மனவெளி என்ற கணக்கெடுப்பில் உள்ள ஊரும் மேற்கில் அரியாங்குப்பமும் காக்காயன் தோப்புக்கு எல்லைகளாக அமைந்துள்ளன.

மக்கள் தொகையியல்

[தொகு]

காக்காயன் தோப்பு கிராமத்தின் படிப்பறிவு சராசரி 81.49% ஆகும். இதில் ஆண்களின் படிப்பறிவு சதவீதம் 88.89% ஆகவும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 74.13% ஆகவும் இருக்கிறது.மக்கள் தொகையில் 10% எண்ணிக்கையினர் 6 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

போக்குவரத்து

[தொகு]

அரியாங்குப்பம் – வீராம்பட்டிணம் சாலையில் அரியாங்குப்பத்திலிருந்து 1.5 கி.மீ தொலைவில் காக்காயன் தோப்பு அமைந்துள்ளது. பாண்டிச்சேரியிலிருந்து வீராம்பட்டிணம் செல்லும் உள்ளூர் பேருந்துகள் எல்லாவற்றிலும் காக்காயன் தோப்பு கிராமத்தைச் சென்று அடையலாம்.

சாலை இணைப்புகள்

[தொகு]

அரியாங்குப்பம் – வீராம்பட்டிணம் சாலை வழியாக காக்காயன் தோப்பு பாண்டிச்சேரியுடன் இணைகிறது.

சுற்றுலா

[தொகு]

அரிக்கமேடு

[தொகு]

அரிக்கமேடு என்ற தொல்லியல் தளம் புதுவையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவிலும் அரியாங்குப்பத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. 1940 ஆம் ஆண்டுகளில் இங்குதான் மார்ட்டின் வீலர் தன்னுடைய புகழ்பெற்ற அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டார். இவரது கூற்றுப்படி அரிக்கமேடு பண்டைத் தமிழர்களின் ஒரு மீன்பிடி கிராமமாக இருந்துள்ளது. முற்காலத்தில் அரிக்கமேடு ஒரு முக்கிய துறைமுகமாக செயல்பட்டு வந்ததாக அறியப்படுகிறது. வேலைப்பாடு மிகுந்த மணிகள் தயாரித்து இத்துறைமுகத்தின் வழியாக ரோமானியர்களுடன் வர்த்தகம் புரிந்த வரலாறு தெளிவாகிறது. ரோமானியர்கள் இவ்வூரை விட்டு வெளியேறும் காலம் வரை இக்கிராமம் செழிப்புடன் விளங்கியுள்ளது.

வீராம்பட்டிணம் கோவில்

[தொகு]

செங்கழுநீர் அம்மன் கோவில், வீராம்பட்டிணத்தில் உள்ள ஒரு புகழ்மிக்க அம்மன் கோவிலாகும். பழமையான இக்கோவில் அரியாங்குப்பத்திலிருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலுள்ள ஏழு தெய்வங்கள் வடக்கு நோக்கி இருக்கையில் செங்கழுநீர் அம்மன் மட்டும் கருவறையிலிருந்து கடலை நோக்கியிருப்பது இக்கோவிலின் சிறப்பாகும். சிவன், கணபதி, முருகன் ஆகிய தெய்வங்களுக்கும் இக்கோவிலில் இடமுண்டு.

மகத்தானதொரு திருவிழா ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடியில் தொடங்கி தொடர்ச்சியாக ஆறு வெள்ளிக்கிழமைகளும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆறு வெள்ளிக்கிழமைகளில் ஐந்தாவது வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு மிக்க நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரி அரசு இந்நாளை பொது விடுமுறை நாளாக அறிவித்து சிறப்பு சேர்க்கிறது. ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் இப்பண்டிகையை கொண்டாட இங்கு வருகை தருகின்றனர்.

பிரஞ்சுக் காலம் முதலாகவே இங்கு நடைபெறும் தேரோட்டத்தினை கயிறு இழுத்து தொடங்கி வைக்க புதுச்சேரி கவர்னர் அழைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அரசியல்

[தொகு]

காக்காயன் தோப்பு அரியாங்குப்பம் சட்டப்பேரவைத் தொகுதியிலும் பாண்டிச்சேரி மக்களவைத் தொகுதியிலும் இடம்பெறும் ஊராக விளங்குகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2016-02-22.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்காயன்_தோப்பு&oldid=3548775" இலிருந்து மீள்விக்கப்பட்டது