காகித முறை வாக்கு
Appearance
காகித முறை வாக்கு (Paper Ballot Method) அல்லது வாக்குச் சீட்டு முறை என்பது உலக நாடுகள் முழுவதும் ஆரம்பகாலத்தில் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கப் பயன்படுத்தபட்ட வாக்குச் சீட்டு முறையே காகித முறை வாக்கு எனப்படுகிறது. ஆரம்பகாலங்களில் வாக்களிக்கும் சிறிய காகித பிரசுரத் துண்டு அல்லது சிறிய வாக்கு பந்து கொண்டு வாக்களிக்கப் பயன்படுத்தப்பட்டது.[1]
காகித வாக்களிப்பு முறை
[தொகு]- மேலும் இதன் முறையானது தேர்தல் அரசியல் முறைமையில் வாக்களிக்க வரும் வாக்காளர்கள் கையில் தேர்தலில் போட்டியிடும் பல வேட்பாளர்களின் கட்சிகளின் சின்னம் அச்சிடப்பட்ட ஒரு காகிதப் பிரசுரம் வழங்கப்படுகிறது.
- அந்த காகிதப் பிரசுரத்தில் உள்ள ஏதேனும் நாம் விரும்பும் ஒரு வேட்பாளரின் சின்னத்திற்கு நேராக முத்திரையிடும் நீல மையை (Rubber Stamp Ink) தொட்டு சுவசுத்திக்கா (卐) அச்சின் வடிவில் முத்திரையிட்டு வாக்கைப் பதிவு செய்த பிறகு அப்பிரசுர காகிதத்தை நான்காக மடித்து அருகில் வைக்கப்பட்டிருக்கும் வாக்குச் சீட்டுச் சேகரிப்பு பெட்டியின் உள்ளே செலுத்துவதே காகித முறை வாக்கு செலுத்தும் முறை எனப்படுகிறது.
- மேலும் இந்தக் காகித முறை வாக்கில் வாக்களிக்க வரும் வாக்காளர்கள் தனக்கு தரப்படும் காகித பிரசுரத்தில் ஒருவர் தான் விரும்பும் வேட்பாளரின் சின்னத்திற்கு நேராக முத்திரை நீல மையைத் தொட்டு முத்திரையிடும் போது அந்தப் பிரசுர காகிதத்தில் உள்ள நாம் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளரின் சின்னத்திற்கு மேலும் கீழுமாக உள்ள வேறு கட்சியின் வேட்பாளர் சின்னத்தில் முத்திரை சின்னமான சுவசுத்திக்கா (卐) அச்சு ஒரு மயிரிழை அளவு மாறிப் பதிந்தாலும் அது செல்லாத வாக்காக பிரிக்கப்பட்டு நீக்கப்படுகின்றது.
பயன்பாடுகள்
[தொகு]- இவை ஆரம்பகாலத்தில் உலக நாடுகள் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் சனநாயக முறைப்படி தேர்தல் மூலம் மக்களால் தனது வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் ஆணையத்தின் மூலம் அதிகாரப் பூர்வமாக அங்கிகரிக்கப்பட்டு பயன்படுத்தபட்டதே காகித முறை வாக்கு செலுத்தும் முறையாகும்.
- இவை 1980களுக்கு பின்னணியில் பல உலக நாடுகள் பொருளாதார முன்னேற்றத்தால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் நவீன முறையில் வாக்கு செலுத்தும் முறை வந்த பிறகு காகித முறை வாக்கு தவிர்க்கபட்டு வந்தது.
- மேலும் காகித முறை வாக்கு செலுத்தும் முறையில் எளிமையாக பல கள்ள வாக்குகள் செலுத்துதல் மற்றும் பதிவான வாக்குகளைப் பாதுகாக்கும் வாக்குப் பெட்டியை மாற்றுதல் போன்ற முறைகேடான விடயங்களால் முற்றிலுமாக காகித முறை வாக்கு செலுத்தும் முறையை கைவிட்டு அனைத்து நாடுகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முறையை பயன்படுத்தி வந்தனர்.
- ஆனால் தற்போது பெரும்பாலான முன்னேறிய பெரிய நாடுகளில் கூட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் செலுத்துபடும் வாக்குகளில் பல நவீன முறையிலான முறைகேடுகள், தவறுகள் நடைபெறுவதால் அது அங்கு வாக்களிக்கும் வாக்காளர்களின் சனநாயக நம்பிக்கைக்கு எதிரான நிலையில் உள்ளதை கருத்தில் கொண்டு அந்நாட்டு அரசாங்கம் அதை தற்போது முழுமையாக தவிர்த்து விட்டு மீண்டும் பழைய காகித முறை வாக்கு செலுத்தும் முறையை கையாண்டு வருகின்றனர்.
- மேலும் தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிக்கும் முறையானது கணிசமாக குறைந்து ஒரு சில நாடுகளில் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.