உள்ளடக்கத்துக்குச் செல்

காகித மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காகித மரம்
குயின்சுலாந்து, குக்டவுன், கீட்டிங்சு கடற்காயலில் M. leucadendra
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
ஆஞ்சியோஸ்பெர்ம்
தரப்படுத்தப்படாத:
Eudicots
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Myrtales
குடும்பம்:
Myrtaceae
பேரினம்:
Melaleuca
இனம்:
M. leucadendra
இருசொற் பெயரீடு
Melaleuca leucadendra
லி.
வேறு பெயர்கள் [1]
மெலலியுக்கா லியுகாடென்ரான்- மரம்
காகிதப் பட்டை
மெலலியுக்கா லியுகாடென்ரான் மலர்கள்

மெலலியுக்கா லியுகாடென்ரான் (melaleuca leucadendra) என்பது பொதுவாக காகித மரம் (weeping paperbark, long-leaved paperbark அல்லது white paperbark) என்று அழைக்கப்படுகிறது. வடக்கு ஆத்திரேலியாவில் பரவிக் காணப்படுகிறது.[2]

இதர பெயர்கள்

[தொகு]
  • காகித பட்டை (Paper bark)
  • சதுப்பு தேயிலை மரம் (Swamp tea tree)

மரத்தின் அமைவு

[தொகு]

இம்மரம் 35 அடி உரம் வளரக்கூடியது. இதனுடைய பூக்கள் புட்டியைக் கழுவ பயன்படுத்தும் குஞ்சம் போல் இருக்கும். இது வெளுத்தும், சில சமயங்களில் மஞ்சள், இளம் சிவப்பு நிறத்திலும் இருக்கும். இம்மரம் சதுப்புகளிலும், உப்பு நீரிலும், வறண்டப் பகுதியிலும் நன்கு வளர்கிறது. இதன் இலையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மருந்தாகவும், டானிக்காகவும் பயன்படுகிறது. இம்மரத்தின் பட்டை காகிதம் போன்று வெளுப்பாக இருக்கும். இப்பட்டை நார் நிறைந்தும், மிருதுவாகவும், உரிக்கக் கூடியதாகவும் உள்ளது. இப்பட்டை பல மெல்லிய அடுக்குகளால் ஆனது. இதை தனித்தனியாக உரித்து எடுக்கலாம். இது பார்ப்பதற்கு பேப்பர் போல உள்ளது. இவை நன்கு உழைக்கக் கூடியவை. இதைக்கொண்டு பழங்களை கட்டுவதற்கும், வீட்டின் மேற்கூரை மேய்வதற்கும், படகு கட்டுவதற்கும் பயன்படுத்துகிறார்கள். பேப்பர் போல எழுதவும் பயன்படுத்தலாம். இம்மரம் மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் வளர்கிறது. இவற்றில் 100 இன மரங்கள் உள்ளன.[1][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Brophy, Joseph J.; Craven, Lyndley A.; Doran, John C. (2013). Melaleucas : their botany, essential oils and uses. Canberra: Australian Centre for International Agricultural Research. pp. 224–225. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-922137-51-7.
  2. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. {{cite book}}: Unknown parameter |Year= ignored (|year= suggested) (help)
  3. Holliday, Ivan (2004). Melaleucas : a field and garden guide (2nd ed.). Frenchs Forest, N.S.W.: Reed New Holland Publishers. pp. 170–171. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-876334-98-3.
  4. "Melaleuca leucadendra". James Cook University. பார்க்கப்பட்ட நாள் 25 January 2018.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
காகித மரம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காகித_மரம்&oldid=3628842" இலிருந்து மீள்விக்கப்பட்டது