காகித துளை கருவி



காகித துளை கருவி எனப்படுவது கோவைகளில் ஆவணப் பிரதிகளைக் கட்டி வைப்பதற்காக அவற்றைத் துளையிடப் பயன்படும் பொதுவான அலுவலகக் கருவி ஆகும்.
இக்கருவியை முதன்முதலில் கண்டறிந்தமை பற்றி இருவேறு புலமைரிமைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. செருமனி ஆரம்பமுதலே காகித துளை கருவியை பயன்படுத்திவருகின்றது.[1] இதில் பிரேடிச்சு சொயேனெக்கின் (Friedrich Soennecken) தனது கண்டுபிடிப்பான Papierlocher (Locher) க்கு காப்புரிமையை நவம்பர் 14, 1886, பதிவுசெய்தார்.[2]