காகர்
காகர் (Kakar) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பனஸ்கந்தா மாவட்டத்தின் காங்க்ரெஜ் தாலுகாவில் உள்ளது.
வரலாறு
[தொகு]காகர் காங்க்ரெஜ் பகுதியின் பழமையான தலைநகரமாக இருந்தது.[1] இந்த நகரம் கங்காவதி என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது பம்பாய் மாகாணம் பாலன்பூர் நிர்வாகத்தின் கீழ் இருந்தது.[2] இது 1925இல் பனஸ்கந்தா நிர்வாகத்திற்கு மாறியது. 1947இல் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, பாம்பே மாநிலமாக மறுசீரமைக்கப்பட்டது. 1960இல் குசராத்து மாநிலம் பம்பாய் மாகாணத்திலிருந்து உருவாக்கப்பட்டபோது, குசராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தின் கீழ் வந்தது.
முக்கிய இடங்கள்
[தொகு]காகர் கிராமத்தில் ஒரு சைன கோயில் உள்ளது. இங்குள்ள பளிங்குகல் சிற்பங்கள் கிரேக்கக் கலைக்கான தடங்களை காட்டுகின்றன என்று கூறப்படுகிறது. முழுமையான கோயில்கள் காணப்படும் இடங்களில், கட்டிடக்கலை சாளுக்கிய மற்றும் ஜைன பாணிகளுடன் ஒத்துள்ளது. இந்த சிற்பங்கள் தனித்துவமான உயிர்த்துடிப்புடன் உள்ளது, சித்பூர், பட்டன் மற்றும் மோதேறா ஆகிய இடங்களில் உள்ள கலைச் சின்னங்களுக்கு சமமானவை. ஆண் மற்றும் பெண் உருவங்கள் தனித்துவமான தலை அலங்காரத்தை கொண்டுள்ளன. மேலும் ஆண்கள் பொதுவாக ஹெசியன்ஸ் என்று அழைக்கப்படுவது போன்ற விசித்திரமான காலணிகளை அணிந்துள்ளனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Gazetteer of the Bombay Presidency: Cutch, Palanpur and Mahi Kantha 1880, p. 342.
- ↑ Chisholm 1911, p. 785.
நூற்குறிப்பு
[தொகு]- Gazetteer of the Bombay Presidency: Cutch, Palanpur, and Mahi Kantha. Government Central Press. 1880.
"Radhanpur". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 22. (1911). Cambridge University Press.
This article incorporates text from a publication now in the public domain: Gazetteer of the Bombay Presidency: Cutch, Palanpur, and Mahi Kantha. Government Central Press. 1880. p. 342.