உள்ளடக்கத்துக்குச் செல்

காகரிசி நாடகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காகரிசி நாடகம் (Kakkarissi Natakam) என்பது கேரளா மாநிலத்தின் ஒரு நாட்டுப்புற கலை வடிவமாகும். இது தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்குச் சென்ற ஒரு கலையாகும்.[1] இந்த கலை வடிவம் கேரளாவின் தெற்குப் பகுதிகளில் மிகவும் பிரபலமாக உள்ளது. அதன் ஒரு இசை நாடக நாடகமாகும். இதை தமிழ், மலையாளம் கலந்த மொழியில் நிகழ்த்துகின்றனர. சுந்தர காக்கன், காக்காத்திகள், வேதான் போன்றவர்கள் இந்த கலை வடிவத்தில் முக்கிய பாத்திரங்களாக உள்ளனர்.[1] இந்த நடனம் அடவுகள் மற்றும் பாடல்களுடன் நிகழ்த்தப்படுகிறது. மிருதங்கம், ஆர்மோனியம், கஞ்சிரா மற்றும் கைமணி ஆகியவை முக்கிய இசைக்கருவிகளாக இருக்கின்றன.[2][3] இந்த கதை சிவன் தனது மனைவியான பார்வதி தேவியுடன் காக்கலன் மற்றும் காக்கத்தி என்ற நாடோடி இனமான நாடோடிகளாக பூமிக்கு வந்ததைச் சுற்றி அமைந்துள்ளது.[1]

படக்காட்சியகம்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Bringing Kakkarissi to life". The New Indian Express.
  2. "Kakkarissi Natakam - a folk theatrical art form". www.keralaculture.org.
  3. "Kakkarissi Natakam - a satirical dance-drama, Performing art". Kerala Tourism.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காகரிசி_நாடகம்&oldid=3889953" இலிருந்து மீள்விக்கப்பட்டது