காகம் பதிப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காகம் பதிப்பகம் இலங்கையின் வாழைச்சேனையைத் தளமாகக் கொண்டு இயங்கும் புத்தகப் பதிப்பு நிறுவனமாகும். எழுத்தாளர் ஏ. பி. எம். இத்ரீஸ், தனது சகோதரர்களின் உதவியுடன் 1998 ஆம் ஆண்டு இதனைத் தொடங்கினார். ஏபிஎம் மீடியா எனும் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இப்பதிப்பகம் செயற்பட்டு வருகிறது.

தோற்றமும் வளர்ச்சியும்[தொகு]

தொடக்க நிலையில் யாத்ரா என்ற பெயரைக் கொண்டு இயங்கியது. இதன் மூலம் கவிஞர் ஏ. ஜி. எம். ஸதக்காவின் போர்க்காலப் பாடல் அடக்கம் மூன்று நூல்கள் வெளிவந்தன. 1999 ஆம் ஆண்டு முதல் உயிர்ப்பைத் தேடும் வேர்கள் என பெயரை மாற்றிக் கொண்டு எழுத்தாளர் வை. அஹ்மத்தின் முக்காடு சிறுகதைத் தொகுதியை வெளியிட்டது. 2009 ஆம் ஆண்டுவரை சுமார் 20 நூல்கள் இப்பதிப்பகத்தின் மூலம் வெளிவந்தன. மாறிவரும் இலங்கைப் பதிப்புச் சூழலுக்கு ஏற்ப புதிய திட்டங்களுடன் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் காகம் பதிப்பகம் எனும் பெயரில் ஏ. பி. எம். இத்ரீஸ் அவர்கள் எழுதிய பத்து நூல்களை வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக மறைந்த எழுத்தாளர்களின் முழுத்தொகுப்பு நூல்களை செம்பதிப்பாகவும் புதிய எழுத்தாளர்களின் இலக்கியம், சமயம், பண்பாடு, வரலாறு மற்றும் ஆய்வு நூல்களையும் சிறுவர் மற்றும் திறன்விருத்தி நூல்களையும் வெளியிடுகிறது.

வெளியீடுகள்[தொகு]

2013[தொகு]

2012[தொகு]

2011[தொகு]

2006[தொகு]

2005[தொகு]

2004[தொகு]

2002[தொகு]

  • நவீனத்துவத்தின் தோல்வி – ரவூப் ஸெய்ன்

2000[தொகு]

1999[தொகு]

  • காணாமல் போனவர்கள் – அஷ்ரஃப் சிஹாப்தீன்

1998[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காகம்_பதிப்பகம்&oldid=3239059" இலிருந்து மீள்விக்கப்பட்டது