காகபுசண்டர் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காகபுசண்டர் ஏரி (Kagbhusandi Lake அல்லது Sacred Emerald Green Lake) என்பது இமயமலையில் அமைந்துள்ள ஒரு ஏரி ஆகும்.

காகபுசண்டர் ஏரி இந்தியாவின், உத்தராகண்ட மாநிலம், சமோலி மாவட்டத்தில், கன்குல் கணவாய் (5,230 மீ) அருகே 5,230 மீட்டர் உயரத்தில் கிட்டத்தட்ட ஒரு கிமீ நீளத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மரகத பச்சை நிற ஏரியாகும். இது நந்தா தேவி தேசியப் பூங்காவில் அமைந்துள்ளது. இந்த ஏரி அத்தி பர்வத சிகரத்துக்கு இடையே அமைந்துள்ளது. மேலும் இந்த ஏரியானது விஷ்ணுபிரயாகை கூடுதுறையில் இருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மலையேற்றத்தின் போது நீலகண்டம், சௌகம்பா, தைல்ய சாகர், பிருகுபந்த், நர் நாராயண் சிகரங்களின் அழகை இரசிக்கக்கூடிய இயற்கை ஆர்வலர்களுக்கு இது ஏற்ற இடமாகும்.[1]

தொன்மம்[தொகு]

இந்து தொன்ம நூல்களின்படி காகபுசண்டர் தன் குருவான ரோமச மகரிசியிடம் ஏற்பட்ட வாதத்தின் முடிவில் காகமாக மாற சாபம் பெற்றது இந்த இடத்தில்தான் எனப்படுகிறது. இந்த இடத்தில் காகபுசண்டர் காக்கை வடிவில் இன்னும் உலாவருகிறார் என்ற நம்பிக்கை உள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "Kagbhusandi Tal Trek Guide - Kagbhushandi Lake Trekking Tips, Route Map". www.euttaranchal.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காகபுசண்டர்_ஏரி&oldid=3387455" இலிருந்து மீள்விக்கப்பட்டது