காகபுசண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காகபுஜண்டர்

காகபுசண்டர் அல்லது காகபுருடர் அல்லது காகபுஜண்டர் என்பவர் சித்தர்களில் ஒருவர். இவர் ரோமச முனிவரின் தந்தை. இவர் மாயூரத்தில் (மயிலாடுதுறை) பிறந்தார். மயூரநாதனின் அருளால் சாகா வரம் பெற்று காகமாக பல ஆண்டுகள் வாழ அருள் பெற்றதால் காகபுசுண்டர் என்ற பெயர் பெற்றார். காகபுசுண்டர் நூல்கள் பல உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன. இவர் காக்கை வடிவில் இருந்துகொண்டு பாடல்களைப் பாடியதாக இவரே தம் பாடல்களில் குறிப்பிடுகிறார்.[1] இவர் தன்னைப் புசுண்டர் என்றும்[2] புசுண்டமுனி என்றும்[3]

தொன்மம்[தொகு]

சிவசத்தியின் பேரண்ட எண்பேராற்றல்களை அட்டமா சத்திகள் என்பர். ஒரு காலத்தில் யானை, யாடு, ஒட்டகம், கரடி முதலியவற்றின் முகங்களைப் கொண்ட சிவசத்தியின் ஊர்திகள் சிவகணங்களோடு சேர்ந்து கள்ளுண்ட களிப்போடு ஆடிக்கொண்டிருந்தன. பிரம சத்தியின் வாகனங்கள் பெண் அன்னங்கள். அவை சண்டன் வாயசப் பறவையைக் கூடிக் கருவுற்றன. அப்போது பிரம சத்தியைச் சுமக்கும் வலிமையை இழந்துவிட்டன. பிரமசத்தி அந்தத் தனது ஊர்தி அன்னங்களை விருப்பம்போல் செல்லும்படி அனுப்பிவிட்டுத் தவம் மேற்கொண்டாள். அன்னங்கள் கருப்பம் முதிர்ந்து முட்டையிட்டன. அந்த முட்டைகளிலிருந்து புஜண்டன் முதலான 21 பேர் பிறந்தனர். அவர்கள் தம் தாய்மாருடன் சேர்ந்து ‘பிராமி’யை வேண்டித் தவம் செய்தனர். பிரமி தவம் கலைந்து வந்து அவர்களை அங்கிருந்த கற்பக மரத்தில் வாழுமாறு அருள் வழங்கினாள். அவர்களில் புஜண்டன் தவிர மற்றையோர் மேலும் தவம் இயற்றித் தம் உடலை அந்த மரத்தடியில் விட்டுவிட்டு வீடுபேறு அடைந்தனர். புஜண்டன் அந்த உடல்களைக் காக்கை உருக் கொண்டு காவல் புரிந்துவந்தார். வசிட்டர் தன் எட்டாம் பிறப்பில் அங்கு வந்து புஜண்டனுக்கு ஞானம் வழங்கினார். அந்த ஞானத்தால் பாடிய பாடல்களே காகபுருடர் நூல்கள்.[4]

நூல்கள்[தொகு]

கருவிநூல்[தொகு]

 • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், 2005
 • சித்தர் பாடல்கள், பிரேமா பிரசுரம், 1959, ஆறாம் பதிப்பு 1987

அடிக்குறிப்பு[தொகு]

 1. வாளப்பா காகமென்ற ரூபம் ஆனேன்
  வடவரையின் கூடு தொத்தி இருந்தேன் பாரே – காகபுருடர் ஞானகாவியம் 49
 2. காணாத காட்சியெலாம் கண்ணில் கண்டு
  காகமடா புசுண்டர் எனும் பேரும் பெற்றேன். - காகபுருடர் ஞானகாவியம் 19
 3. செப்புகின்ற புசுண்டமுனி முகத்தை நோக்கி
  சிவன்மகிழ்ந்தே ஏதுமொழி செப்பு வார்,கேள் – காகபுருடர் காவியம் 16
 4. செய்தி, ஞானவாசிட்டம் என்னும் வடமொழி நூல்.

உசாத்துணை[தொகு]

 • சித்தர்கள் வாழ்க்கை வரலாறு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காகபுசண்டர்&oldid=2461584" இருந்து மீள்விக்கப்பட்டது