உள்ளடக்கத்துக்குச் செல்

கவைமுள் கொம்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Antilocapra|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
கவைமுள் கொம்பன்
Pronghorn
புதைப்படிவ காலம்:2.5–0 Ma
Early பிலிசுடோசின் – Recent
ஓரிகனில் வயது வந்த கிடாய்
வயோமிங்கில் வயது வந்த பெட்டை
CITES Appendix I (CITES)[3][note 1]
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Antilocapra
இனம்:
இருசொற் பெயரீடு
Antilocapra americana[1]
(Ord, 1815)
Subspecies

A. a. americana
A. a. mexicana
A. a. oregona
A. a. peninsularis
A. a. sonoriensis

Range of the pronghorn

கவைமுள்கொம்பன் (Pronghorn) என்பது இரட்டைப்படைக் குளம்பி வரிசையைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இது மேற்கு மற்றும் மத்திய வட அமெரிக்காவின் உட்புறத்தை தாயகமாக கொண்டது. இது ஒரு மறிமான் இல்லையென்றாலும், இது வட அமெரிக்காவில் அமெரிக்கன் மறிமான், பிராங் பக், பிராங்ஹார்ன் மறிமான், பிரேரி மறிமான் என்று அழைக்கபடுகிறது.[4] ஏனெனில் இது பழைய உலகின் மறிமான்களை ஒத்திருக்கிறது.[5] ஆன்டிலோகாப்ரிடே குடும்பத்தில் எஞ்சியிருக்கும் ஒரே உறுப்பினர் இதுவாகும்.[6]

பிலிசுடோசின் சகாப்தத்தில், வட அமெரிக்காவில் சுமார் 11 ஆன்டிலோகாபிரிட் இனங்கள் இருந்தன.[7] மனிதர்கள் வட அமெரிக்காவிற்குள் நுழைந்தபோது பிற மூன்று இனங்கள் ( Capromeryx,[8][9] Stockoceros, [10][11] Tetrameryx [12] ) இருந்தன, ஆனால் அவை இப்போது அற்றுவிட்டன .

ஜிராஃபோய்டியா என்ற பெருங்குடும்பத்தின் உறுப்பினராக, கவைமுள் கொம்பனின் நெருங்கிய உறவு விலங்காக ஒட்டகச்சிவிங்கி மற்றும் ஓக்காப்பி உள்ளன.[13] ஜிராஃபோய்டியாகள் கொம்புள்ள கால்நடை வரிசையில் உறுப்பினர்களாக உள்ளன. மேலும் அவை செர்விடே ( மான் ) மற்றும் மாட்டுக் குடும்பம் ( மாடுகள், ஆடுகள், செம்மறியாடுகள், மறிமான்கள், வனப்புமிக்க சிறுமான் ) ஆகியவற்றின் தொலைதூர உறவினர்களாக உள்ளன.

கவைமுள் கொம்பன் என்பது மேற்கு அரைக்கோளத்தில் உள்ள அதிவேக நில பாலூட்டியாகும். இது மணிக்கு 88.5 கிமீ (55 மைல்) வேகத்தில் ஓடக்கூடியது. இது அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் மம்மலஜிஸ்ட்டின் சின்னமாகும்.[14]

கண்டுபிடிப்பு மற்றும் வகைபிரித்தல்

[தொகு]

அமெரிக்காவுக்கு ஐரோப்பியர் வருகைக்கு முன்னர், கவைமுள் கொம்பன்கள் குறிப்பாக சமவெளிப் பழங்குடிகள் மற்றும் வடமேற்கு பீடபூமியின் பழங்குடி மக்களின் பிராந்தியத்தில் ஏராளமாக இருந்தது. மேலும் இது உள்ளூர் பழங்குடியினரின் முக்கிய உணவு ஆதாரமாக வேட்டையாடப்பட்டது.[15] பூர்வீக அமெரிக்கத் தொன்மங்கள் மற்றும் வாய்வழி வரலாற்றிலும் கவைமுள் கொம்பன்கள் முக்கியமாக இடம்பெற்றுள்ளன.[16]

கவைமுள் கொம்பனின் அறிவியல் பெயர் ஆன்டிலோகாப்ரா அமெரிக்கானா என்பதாகும். 16 ஆம் நூற்றாண்டில் எசுபானிய ஆய்வாளர்களால் முதன்முதலில் காணப்பட்டு விவரிக்கப்பட்டாலும் , 1804-06 இல் கேப்டன் மெரிவெதர் லூயிஸ் மற்றும் இரண்டாவது லெப்டினன்ட் வில்லியம் கிளார்க் ஆகியோர் பயணம் செய்யும் வரை இந்த இனங்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை அல்லது ஆய்வு செய்யப்படவில்லை.[17] கூர் வால் காட்டுக்கோழிகளின் சில துணையினங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, லூயிஸ் மற்றும் கிளார்க் இன்றைய நெப்ராஸ்காவில் உள்ள நியோப்ராரா ஆற்றின் முகப்புக்கு அருகில் கவைமுள் கொம்பனைக் கண்டனர். கவைமுள் கொம்பனைக் கொன்ற அனுபவத்தை வெளியிட்ட முதல் யூரோ-அமெரிக்கர்களில் கிளார்க்கும் ஒருவர்.[18]

1815 ஆம் ஆண்டில் அமெரிக்க பறவையியலாளர் ஜார்ஜ் ஆர்டால் முதன்முதலில் [19] இது அதிகாரப்பூர்வமாக விவரிக்கப்பட்டது .

விளக்கம்

[தொகு]

கவைமுள் கொம்பன்கள் உடலின் முதுகில் கருஞ்சாம்பல் நிறத்தில் உரோமங்கள் வளர்ந்துள்ளன. வயிறும், பின்புறமும், வெள்ளை நிறத்தில் இருக்கும். கழுத்தில் மூன்று வெண் பட்டைகள் உண்டு. கண்கள் பெரியன. காது மடலின் முனை கூர்மையானது. கழுத்தின் துவக்கத்தில் கருமையான உரோமங்கள் திட்டுபோல வளர்ந்திருக்கும். வயது வந்த கிடாக்களின் மூக்கிலிருந்து வால் வரை 1.3–1.5 மீ (4 அடி 3 அங்குலம் – 4 அடி 11 அங்குலம்) நீளமும், நிற்கும்போது தோள் வரை 81–104 செமீ (2 அடி 8 அங்குலம் – 3 அடி 5 அங்குலம்) உயரமும், சுமார் 40–65 கிலோ (88–143 பவுண்ட்) எடையும் இருக்கும். பெட்டைகளின் உயரம் கிடாக்களைப் போலவே இருக்கும், ஆனால் எடை 34-48 கிலோ (75-106 பவுண்டுகள்) வரை இருக்கும். கால்களில் இரண்டு குளம்புகள் உள்ளன, பனிநகங்கள் இல்லை. இவற்றின் உடல் வெப்பநிலை 38  °C (100 °F) ஆகும்.[7][20][21][22] குளிர் காலத்தில் இதன் உடலில் உள்ள உரோமங்கள் அப்படியே உடலோடு சேர்ந்து நெருக்கமாகக் காணப்படுகின்றன. கோடை வந்ததும் இந்த உரோமங்கள் சிலிர்த்துக் காணப்படுகின்றன. குளிரையும் வெப்பத்தையும் தாங்குவதற்கே இந்த மாற்றம் உண்டாகிறது.

வயது வந்த ஆணின் தலை

இவற்றின் முக்கியத்துவம் வாய்ந்த கண்குழிகள் மண்டை ஓட்டின் மேல் அமைந்துள்ளன. அவற்றின் பற்கள் உயர்பற்கள் மற்றும் அவற்றின் பல்லின் வகையடுக்கு ஆகும்.

வயது வந்த ஆணின் உடல் தோற்றம்

கவைமுள் கொம்பன்களில் இரு பாலினத்தவைக்கும் கொம்புகள் உண்டு. கொம்புகள் பின்னோக்கி வளர்ந்திருக்கும். கொம்பினைச் சுற்றி சிறுய மயிர்களையுடைய தோல் மூடி இருக்கும்.[23] இதன் கொம்புகள் நகமிய உறையைக் கொண்டவை. இவை ஆண்டுதோறும் உதிர்ந்து மீண்டும் வளரும். ஆண் மான்களுக்கு 12.5–43 செமீ (5–17 அங்குலம்) (சராசரியாக 25 செமீ அல்லது 10 அங்குலம்) நீளமுள்ள கொம்பு உள்ளது. பெண் மான்களுக்கு 3–15 செமீ (1–6 அங்குலம்) (சராசரியாக 12 செமீ அல்லது 4+1⁄2 அங்குலம்) வரையிலான சிறிய கொம்புகள் இருக்கும்.[21] கவைமுள் கொம்பன்கள் ஒரு தனித்துவமான, கஸ்தூரி மணம் கொண்டவை.[7] இவை 320° பார்வை பார்க்கதக்க மிகப் பெரிய கண்களையும் கொண்டுள்ளன. மான்களைப் போலன்றி, கவைமுள் கொம்பன்கள் பித்தப்பையைக் கொண்டுள்ளன.

கவைமுள் கொம்பன் என்பது மேற்கு அரைக்கோளத்தில் அதிவிரைவாக ஓடும் நில பாலூட்டியாகும். இதன் அதிவிரைவாக ஓடும் ஆற்றல் வேட்டையாடிகளிடம் தப்பிக்க ஏதுவாக உள்ளது. இதன் அதிகபட்ச வேகம் இதன் ஓடும் தொலைவுக்கு ஏற்ப உள்ளது. இது 6.5 கி.மீட்டர் (35 மைல்) தொலைவு ஓடும்போது 56 km/h (35 mph) வரையும், 1.5 கிலோமீட்டர் (1மைல்) ஓடும்போது 68 km/h (42 mph) வேகமாகவும், 800 m (12 mi) ஓடும்போது 88.5 km/h (55 mph) வேகம் வரை எட்டும்.[20] இது பெரும்பாலும் உலகின் இரண்டாவது-வேகமான நில விலங்கு என்று குறிப்பிடப்பட்டாலும், ஆப்பிரிக்க சிவிங்கிப்புலி க்கு அடுத்தபடியாகவும்,[24] இது சிவிங்கிப்புலிகளை விட அதிக வேகத்தை எட்டும்.[6] கவைமுள் கொம்பனானது தற்போது அழிந்து வரும் அமெரிக்க சிறுத்தை போன்ற வேட்டையாடிகளிடமிருந்து தப்பிக்க அதன் இயங்கும் திறனை பரிணாமத்தில் பெற்றிருக்கலாம், ஏனெனில் இதன் வேகம் தற்போதுள்ள வட அமெரிக்க வேட்டையாடிகளை விட அதிகமாக உள்ளது.[6] :318அதன் உடல் அளவோடு ஒப்பிடும்போது, கவைமுள் கொம்பன் பெரிய மூச்சுக்குழாய், இதயம், நுரையீரல்கள் போன்றவற்றைக் கொண்டுளது. இதனால் இது ஓடும் போது அதிக அளவு காற்றை உள்ளிழுக்க ஏற்றதாக உள்ளது. கூடுதலாக, கவைமுள் கொம்பனின் குளம்புகள் இரண்டு நீண்ட, மெத்தென்ற, கூர்மையான கால்விரல்களைக் கொண்டுள்ளன, அவை அதிக வேகத்தில் ஓடும் போது அதிர்ச்சியை குறைக்க உதவுகின்றன.[25] அவை மிகவும் இலேசான எலும்பு அமைப்பு மற்றும் உள்ளீடற்ற முடி ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

கவைமுள் கொம்பன்கள்களின் உடலமைப்பு விரைந்து ஓட ஏற்றதாக உள்ள அதே நேரத்தில், தாவி குதிப்பதற்கு ஏற்றதாக இல்லை.[26]

சமூக நடத்தை மற்றும் இனப்பெருக்கம்

[தொகு]

கவைமுள் கொம்பன்கள் கூட்டமாக காணப்பட்டபோதிலும் வயதான விலங்குகள் கூட்டத்தில் சேராமல் தனியே வாழ்கின்றன. கோடைக் காலத்தில் சிறு சிறு கூட்டங்களாக வாழ்ந்தவை குளிர் காலத்தில் ஒன்று சேர்ந்து பெரிய கூட்டமாகிவிடுகிறது. கோடை முடிவில் இனப்பெருக்கத்துக்கு இவை தயாராகின்றன. ஒரு ஆண் கொம்பன் பல பெண் விலங்குகளைச் சேர்த்து வைத்துக் கொள்ளும். சுமார் மூன்று வாரங்கள் ஆண் கவைமுள் கொம்பன் பெண் பாலின விலங்குகளுடன் சேர்ந்து வாழும்.

கவைமுள் கொம்பன்கள்களின் கர்ப்ப காலம் 7-8 மாதங்கள் ஆகும். இவை செப்டம்பரின் நடுப்பகுதியில் இனப்பெருக்கம் செய்கின்றன, மேலும் மே மாத இறுதி வரை தன் கருவை சுமக்கிறது. கருவுற்றிருக்கும் காலம் வர்ச்சீனிய தூவல் மானை விட ஆறு வாரங்கள் கூடுதல்.[20] இரட்டைக் குட்டிகள் பொதுவாக பிறக்கும்.[25] புதிதாகப் பிறந்த கவைமுள் கொம்பன்கள்கள் 2–4 கிலோ (4–9 பவுண்டுகள்), பொதுவாக 3 கிலோ (7 பவுண்டுகள்) எடையுள்ளதாக இருக்கும். முதல் 21-26 நாட்கள் வரை, குட்டிகள் தாவரங்களில் ஒளிந்துகொண்டு மறைவாக இருக்கின்றன.[27] ஒரு நாளைக்கு 20-25 நிமிடங்கள் வரை குட்டிகளுடன் தாய் நேரத்தை செலவிடுகிறது.[27] தாய் பொதுவாக ஒரு நாளைக்கு மூன்று முறை குட்டிகளுக்கு பாலூட்டும்.[20] பெண் கவைமுள் கொம்பன்களை விட ஆண் கவைமுள் கொம்பன்கள் 2-3 வாரங்கள் முன்னதாகவே பால்குடி மறந்துவிடும்.[27] இந்த விலங்கு 15 முதல் 16 மாதங்களில் பாலியல் முதிர்ச்சி அடைகின்றன. இருப்பினும் ஆண் கவைமுள் கொம்பன்கள் மூன்று வயது வரை இனப்பெருக்கம் செய்வது அரிதான நிகழ்வு. இவற்றின் ஆயுட்காலம் பொதுவாக 10 ஆண்டுகள் வரை, அரிதாக 15 ஆண்டுகள் வரை வாழக்கூடும்.[20][21][22]

குறிப்புகள்

[தொகு]
  1. Grubb, P. (2005). "Order Artiodactyla". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 671–2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மைய எண் 62265494. {{cite book}}: Invalid |ref=harv (help)
  2. IUCN SSC Antelope Specialist Group (2017). "Antilocapra americana". IUCN Red List of Threatened Species 2016: e.T1677A115056938. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T1677A50181848.en. https://www.iucnredlist.org/species/1677/115056938. பார்த்த நாள்: 31 August 2020. 
  3. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  4. Caton, J. D. (1876). "The American Antelope, or Prong Buck". The American Naturalist 10 (4): 193–205. doi:10.1086/271628. https://zenodo.org/record/1431315. 
  5. Farb, Peter (1970).
  6. 6.0 6.1 6.2 Hawes, Alex (November 2001). "Pronghorns - Survivors of the American Savanna". Zoogoer (Smithsonian). http://nationalzoo.si.edu/publications/zoogoer/2001/6/pronghornssavanna.cfm. பார்த்த நாள்: 2015-11-21. 
  7. 7.0 7.1 7.2 Smithsonian Institution.
  8. "Capromeryx furcifer Matthew 1902". Paleobiology Database. பார்க்கப்பட்ட நாள் 2015-11-21.
  9. "Capromeryx minor Taylor 1911". Paleobiology Database. பார்க்கப்பட்ட நாள் 2015-11-21.
  10. "Stockoceros conklingi Stock 1930". Paleobiology Database. பார்க்கப்பட்ட நாள் 2015-11-21.
  11. "Stockoceros onusrosagris Roosevelt and Burden 1934". Paleobiology Database. பார்க்கப்பட்ட நாள் 2015-11-23.
  12. "Tetrameryx shuleri Lull 1921". Paleobiology Database. பார்க்கப்பட்ட நாள் 2015-11-21.
  13. Upham, N.S.; Esselstyn, J.A.; Jetz, W. (2019). "Inferring the mammal tree: Species-level sets of phylogenies for questions in ecology, evolution, and conservation". PLOS Biology 17 (12): e3000494. doi:10.1371/journal.pbio.3000494. பப்மெட்:31800571. 
  14. "About ASM | American Society of Mammalogists". www.mammalsociety.org (in ஆங்கிலம்). 2011-03-16. பார்க்கப்பட்ட நாள் 2019-10-31.
  15. Brunton BB: Kootenai.
  16. Bruchac, Joseph. (1992).
  17. Woodger, E.; Toporov, B. (2004). Encyclopedia of the Lewis and Clark Expedition. New York, USA: Facts On File. pp. 31–2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4381-1023-3.
  18. Cutright, P.R. (2003). Lewis and Clark: Pioneering Naturalists. Nebraska, USA: University of Nebraska Press. pp. 81–2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8032-6434-2.
  19. Guthrie, W.; Ferguson, J. (1815). A New Geographical, Historical, and Commercial Grammar and Present State of the Several Kingdoms of the World. Philadelphia, USA: Johnson & Warner.
  20. 20.0 20.1 20.2 20.3 20.4 Mammals of Texas: Pronghorn பரணிடப்பட்டது 2010-06-22 at the வந்தவழி இயந்திரம் Last retrieved 24 October 2013
  21. 21.0 21.1 21.2 Antilocapra americana.
  22. 22.0 22.1 AnAge: Antilocapra americana
  23. Nasoori, Alireza (2020). "Formation, structure, and function of extra-skeletal bones in mammals". Biological Reviews 95 (4): 986–1019. doi:10.1111/brv.12597. பப்மெட்:32338826. https://archive.org/details/formation-structure-and-function-of-extra-skeletal-bones-in-mammals. 
  24. Klesius, M. (2007). "Losing Ground". National Geographic 211 (1): 22. 
  25. 25.0 25.1 "Pronghorn | San Diego Zoo Animals & Plants". animals.sandiegozoo.org.
  26. Dickens, Glen (December 2012). "Malpai Cooperative Fence Project - Pronghorn 4th Quarter 2012" (PDF). azantelope.org. p. 5. Archived from the original (PDF) on 2013-12-24. பார்க்கப்பட்ட நாள் 2013-12-23.
  27. 27.0 27.1 27.2 "Pronghorn" in The Encyclopedia of Mammals David MacDonald (ed.

விளக்கக் குறிப்புகள்

[தொகு]
  1. Only populations of Mexico.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவைமுள்_கொம்பன்&oldid=3928720" இலிருந்து மீள்விக்கப்பட்டது