கவுலூன்-குவாங்சோவ் தொடருந்துச் சேவை
Appearance
கவுலூன்-குவாங்சோவ் தொடருந்துச் சேவை Kowloon-Canton Railway (KCR) | |
---|---|
தகவல் | |
அமைவிடம் | ஹொங்கொங் |
போக்குவரத்து வகை | |
மொத்தப் பாதைகள் | 4 (3 தொடருந்து பாதைகள், 1 இலகு தொடருந்து சேவை) |
நிலையங்களின் எண்ணிக்கை | 33 தொடருந்து நிலையங்கள், 68 இலகு தொடருந்து நிலையங்கள் |
பயணியர் (ஒரு நாளைக்கு) | அண்ணளவாக 1.49 மில்லியன் (2006) |
இயக்கம் | |
பயன்பாடு தொடங்கியது | அக்டோபர் 10 1911 - டிசம்பர் 2 2007 (MTRCL இனால் பொறுப்பேற்கப்பட்டது) |
இயக்குனர்(கள்) | எம்டிஆர் கோர்ப்பரேஷன் |
நுட்பத் தகவல் | |
அமைப்பின் நீளம் | 120.5 கிமீ (75 மை) |
இருப்புபாதை அகலம் | 1,435 மிமீ (4 அடி 8 1⁄2 அங்) (standard gauge) |
கவுலூன்-குவாங்சோவ் தொடருந்துச் சேவை அல்லது கவுலூன்-கான்டன் தொடருந்துச் சேவை (Kowloon-Canton Railway, KCR; சீன மொழி: 九廣鐵路) ஹொங்கொங்கில் உள்ள ஒரு தொடருந்துச் சேவையைக் குறிக்கும்[1]. 1911ம் ஆண்டில் இது ஆரம்பிக்கப்பட்டது.
இதுவே ஹொங்கொங்கில் முதன்முதல் ஆரம்பிக்கப்பட்டத் தொடருந்து சேவையாகும்.
இதனை 2007 டிசம்பர் 2 ஆம் எம்.டி.ஆர் தொடருந்து கூட்டுத்தாபனம் தமது சேவையுடன் இணைத்துக்கொண்டது. அத்துடன் கே.சி.ஆர் எனும் பெயர் எம்.டி.ஆர் என்றாகிவிட்டது. அத்துடன் "கவுலூன்-குவாங்சோவ் தொடருந்துச் சேவை" உடன் இருந்த புதிய குடியிருப்பு நிர்வாகப் பகுதிகளில் சேவையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த இலகுரக தொடருந்து சேவையினையும், கே.எம்.பி பேருந்து சேவையும் தற்போது எம்.டி.ஆர் கூட்டுத்தாபனம் தமதாக்கிக்கொண்டது.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Legislative Council information paper CB(1)357/07-08(01), THB(T) CR 8/986/00
வெளி இணைப்புகள்
[தொகு]இது ஹொங்கொங்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |