கவுரியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவுரியர் என்னும் சொல் பாண்டியரைக் குறிக்கும்.

கவவு என்னும் உரிச்சொல்லுக்கு அகத்திடுதல் என்பது பொருள்.[1] கவவு என்னும் சொல் 'வளைத்துத் தன்னகத்தே வைத்துக்கொள்ளும்' பொருளையும் உணர்த்தும்.[2]

இராமன் இலங்கை வெற்றிக்குப் பின் ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டு மறை ஓதி வழிபட்ட கோடி [3] [4] கவுரியர் எனப் பெயர் பூண்ட பாண்டியரின் தலைமை இடமாகும்.[5]

கவுரியர் நன்னாடு என்பது பாண்டியநாடு. அந்நாட்டிலுள்ளது அருவி கொட்டும் மலைப்பிளவு. [6] அப்பகுதி அரசன் தென்னன்.[7]

கவுரியர் மதி போன்ற வெண்கொற்றக் குடையின் நிழலில் நிலப்பரப்பை யெல்லாம் காப்பேன் என முரசு முழக்கிக்கொண்டு தன் ஆணைச் சக்கரத்தை உருட்டுகையில் ஈகைப் பாங்கைத் தவிராது கடைப்பிடித்து வந்தார்களாம். இவர்களின் மரபு வழியில் வந்தவனாம் பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி.[8]

அடிக்குறிப்பு[தொகு]

  1. http://tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=1&auth_pub_id=8&pno=126
  2. சென்னைப்பல்கலைக்கழகம் (1924-1936). Tamil Lexicon. சென்னை: சென்னைப்பல்கலைக்கழகம். பக். 791. http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/contextualize.pl?p.2.tamillex.2005242.2005542. 
  3. கோடி (தனுஷ்கோடி) - சு. வையாபுரிப் பிள்ளை அறிஞர் கழகம் ஆராய்ந்து வழங்கியது. சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்). சென்னை - 1: பாரி நிலையம், (முதல் பதிப்பு 1940) இரண்டாம் பதிப்பு 1967.  சிறப்புப்பெயர் அகராதி, பக்கம் 1387
  4. கோடி என்பது தனுஷ்கோடி. தனுஷ் என்பது வில். இங்குள்ள கடற்கரை வில் போல் வளைவாக உள்ளது. கோடி என்னும் என்னும் சொல்லே வளைவைக் குறிக்கும். இது அப் பகுதிக்குச் சங்ககாலத்தில் வழங்கப்பட்ட பெயர். வளைவைத் தெளிவாக்க வில் போன்ற வளைவு என்றனர். 'வில்' என்னும் சொல்லைத் 'தனுஷ்: என்னும் வடசொல்லாக்கித் 'தனுஷ்கோடி' என்னும் பெயர்-வழக்கை உருவாக்கியுள்ளனர்.
  5. வெல்போர்க் கவுரியர் தொன்முது கோடி … வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த பல்வீழ் ஆலம் - அகநானூறு 70
  6. இருப்பிட அமைதி நோக்கி இதனைக் குற்றாலம் சார்ந்த பகுதி எனலாம்
  7. அகநானூறு 342
  8. இரும்பிடர்த்தலையார் பாட்டு புறநானூறு 3
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவுரியர்&oldid=1537716" இலிருந்து மீள்விக்கப்பட்டது