உள்ளடக்கத்துக்குச் செல்

கவுரவ் கோகோயி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவுரவ் கோகோயி
2024-ஆம் ஆண்டில் கோகோயி
மக்களவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
14 சூலை 2024
Leader of Oppositionஇராகுல் காந்தி
முன்னையவர்கோபிநாத் முண்டே (2014)
அசாம் பிராந்திய காங்கிரசு கமிட்டி தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
26 மே 2025
முன்னையவர்புபேன் குமார் போரா
மக்களவை உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்தோபன் குமார் கோகோயி
தொகுதிஜோர்ஹாட், அசாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 செப்டம்பர் 1982 (1982-09-04) (அகவை 43)
தில்லி, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்
எலிசபெத் கோல்பர்ன் கோகோயி (தி. 2013)
[1]
பிள்ளைகள்2
வாழிடம்
முன்னாள் மாணவர்குரு கோவிந்த் சிங் இந்திரபிரசுதா பல்கலைக்கழகம்
நியூயார்க் பல்கலைக்கழகம் (பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம்)
பணி

கவுரவ் கோகோயி (Gaurav Gogoi) (பிறப்பு:செப்டம்பர் 4,1982) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் அசாமில் இருந்து பணியாற்றும் இந்திய தேசிய காங்கிரசின் சமூக சேவகர் ஆவார். இவர் 2024 முதல் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றி வருகிறார். தற்போது 2024 முதல் 18 வது மக்களவையில் ஜோர்ஹாட் மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 2020 முதல் 2024 வரை, ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கீழ் இந்திய தேசிய காங்கிரசு நாடாளுமன்றக் கட்சியின் துணைத் தலைவராகப் பணியாற்றினார். இவர் முன்னதாக, 2014 முதல் 2024 வரை 16 வது மக்களவை மற்றும் 17 ஆவது மக்களவை களியாபோர் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றினார், அதன் பிறகு களியாபோர் தொகுதி மறுசீரமைப்பில் இரத்து செய்யப்பட்டது. இவர் அசாமின் முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாயின் மகன் ஆவார். ஏர்டெல் நிறுவனத்தில் இருந்த வேலையை விட்டுவிட்டு, 2005 ஆம் ஆண்டில் டெல்லியைத் தளமாகக் கொண்ட பிரவா என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் சேர்ந்தார்.[2]

தொடக்க கால வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

கவுரவ் கோகோய் 1982 செப்டம்பர் 4 அன்று தில்லியில் பிறந்தார். இவரின் தந்தை தருண் கோகய் 2001 முதல் 2016 வரை அசாமின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.

கோகோய் தில்லியின் செயின்ட் கொலம்பாஸ் பள்ளியில் படித்தார். பின்னர் இவர் 2004 ஆம் ஆண்டில் தில்லியில் உள்ள குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் பொறியியல் பட்டம் பெற்றார், பின்னர் ஏர்டெல் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் குழுவில் சேர்ந்தார். பின்னர், கோகாய் பொது நிர்வாகத்தைப் படிக்க அமெரிக்கா சென்றார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். நடனத்திலும் நடன அமைப்பிலும் ஆர்வத்தோடு ஈடுபடுகிறார்.

2013 ஆம் ஆண்டில், கோகோய் இங்கிலாந்தில் பிறந்த எலிசபெத் கோல்போர்னை மணந்தார். 2014-ஆம் ஆண்டில், இவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். களியாபோர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.[3][4][5] கோகாய் எலிசபெத் தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[6]

கோகோயுடன் தொடர்புடைய பிற பிரபலங்கள் கவிஞர் கணேஷ் கோகோய் (தாத்தா) திரைப்படத் தயாரிப்பாளர் பரன் பார்பரூவா (தாத்தா, திரைப்பட இயக்குனர் பிரேரானா பார்பரூயா) மற்றும் அரசியல்வாதி திப் கோகோய் (மாமா) ஆவர்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

இவர் திரும்பி வந்ததும், அரசியலில் நுழைந்தார், கட்சி என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறதோ அதைச் செய்வதாகக் கூறினார்.[7] மார்ச் 2014 இல், காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளராக களியாபோர் (மக்களவைத் தொகுதி) தொகுதியில் இருந்து கோகோயை அறிவித்தது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, கோகோய் 19 மார்ச் 2014 அன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இவர் தனது முதல் தேர்தலில் வாக்கெடுப்பின் போது மொத்தம் 4,43,315 வாக்குகள் பெற்று தனது நெருங்கிய போட்டியாளரான பாரதிய ஜனதா கட்சியின் மிருணாள் குமார் சைக்கியாவை 93,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[8]

ஆகத்து 8,2023 அன்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு கோகோய் தலைமை தாங்கினார். மோடி அரசிடம் மூன்று கேள்விகளைக் கேட்டார்.[9]

அக்கேள்விகள் பின்வருமாறு, பிரதமர் மோடி ஏன் இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை? மணிப்பூர் பற்றி பேச கிட்டத்தட்ட 80 நாட்கள் எடுத்துக் கொண்டது ஏன்? அதிலும் பேசியபோது அது வெறும் 30 வினாடிகள் மட்டுமே பேசியதேன்? மணிப்பூர் முதலமைச்சர் ஏன் இதுவரை பதவி நீக்கம் செய்யப்படவில்லை?[10]

மணிப்பூர் பிரச்சினையில் பிரதமர் மோடி அமைதியாக இருக்க விரும்புவதால், இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணியின் கீழ் உள்ள எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டியிருந்தது என்று கோகோய் குறிப்பிட்டார். இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் உரையாற்ற வேண்டும் என்று விரும்பியது. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களிடமிருந்து போதுமான ஆதரவைப் பெறாததால் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெறவில்லை.

2025 ஆம் ஆண்டில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான்-இந்தியா மோதலின் போது, மக்களவை உறுப்பினரான கவுரவ் கோகாயின் மனைவிக்கு பாகிஸ்தானின் உளவு நிறுவனமான சேவைகளிடை உளவுத்துறை (ஐ.எஸ்.ஐ) அமைப்புடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன, இது கவுரவ் கோகோயால் மறுக்கப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெறும் மாநிலத் தேர்தலில் தோல்வியடைவார் என்று அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா அஞ்சுவதாகக் கூறி கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிக்கிறார் என்று கௌரவ் கோகோய் குற்றம் சாட்டினார். பாகிஸ்தான் திட்டக் குழுவின் முன்னாள் ஆலோசகர் தௌகீர் ஷேக்கின் கீழ் இஸ்லாமாபாத்தில் பணிபுரிந்தபோது, கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பர்னுக்கு ஐஎஸ்ஐ உடன் தொடர்பு இருந்ததாக பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியபோது இந்த சர்ச்சை வெடித்தது.

2025 மே 26 அன்று இவர் அசாம் காங்கிரஸ் தலைவராக ஆனார். 2026 அசாம் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு கட்சி அவருக்கு இந்தப் பொறுப்பை வழங்கியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assam CM's son Gaurav Gogoi files nomination for LS polls". Jagran.com. 19 March 2014. Retrieved 20 March 2014.
  2. Kaushik Deka. "Sonrise in the East". indiatoday.in. Retrieved 20 March 2014.
  3. "Meet the bride".
  4. "LS polls 2014: UK-born wife learning Assamese to campaign for Gaurav Gogoi". Archived from the original on 15 April 2016.
  5. "Who's who in the Congress's infamous 25". Retrieved 19 July 2016.
  6. sentinelassamdesk, Sentinel Digital (24 August 2020). "Assam MP Gaurav Gogoi and wife blessed with baby girl - Sentinelassam". www.sentinelassam.com (in ஆங்கிலம்). Retrieved 14 August 2021.
  7. Simantic Dowerah (12 March 2013). "Open to any role in Congress, says tarun gogoi's son gaurav". Firstpost.com. Retrieved 20 March 2014.
  8. "NDTV.com - Election 2014, Election Result, Lok Sabha Election News, Live News". Retrieved 19 July 2016.
  9. "Lok Sabha takes up no-confidence motion; Congress leader Gaurav Gogoi initiates debate". The Times of India. 8 August 2023. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/india/no-confidence-motion-lok-sabha-manipur-violence-rahul-gandhi-pm-modi/articleshow/102525692.cms?from=mdr. 
  10. Livemint (8 August 2023). "Gaurav Gogoi throws three questions to PM Modi, says 'Manipur wants justice...'". mint (in ஆங்கிலம்). Retrieved 8 August 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவுரவ்_கோகோயி&oldid=4444479" இலிருந்து மீள்விக்கப்பட்டது