கவுன்டர் ஸ்ட்ரைக்
கவுன்டர் ஸ்ட்ரைக் | |
---|---|
ஆக்குனர் | வால்வ் கார்ப்ரேசன் |
வெளியீட்டாளர் | வால்வ் கார்ப்ரேசன் சியாரா ஸ்டுடியோஸ் (முன்னால்) மைக்ரோசாப்ட் கேம் ஸ்டுடியோஸ் (எக்ஸ்பாக்ஸ்) |
வினியோகஸ்தர் | ஸ்டீம் (ஆன்லைன்) |
வடிவமைப்பாளர் | மின்ஃ "கூஸ்மேன்" லீ ஜெஸ் கிளிஃப் |
ஆட்டப் பொறி | கோல்ட் எஸ ஆர் சி, ஹால்ஃப்-லைஃப் |
பதிப்பு | 1.6 (செப்டம்பர் 15, 2003)[1] |
கணிமை தளங்கள் | மைக்ரோசாப்ட் விண்டோஸ், எக்ஸ்பாக்ஸ் |
வெளியான தேதி | June 12, 1999 November 8, 2000 (Retail) March 25, 2004 (Xbox) | (Mod)
பாணி | முதல் நபர் சுடுதல் |
வகை | பல ஆட்டக்காரர்கள், ஒரு ஆட்டக்காரர் |
ஊடகம் | குறுந்தகடு எண்ணிமத் தரவிரக்கம் |
கணினி தேவைகள்
|
கவுன்டர் ஸ்ட்ரைக் (Counter-Strike) ஒரு உத்தி அடிப்படை முதல் நபர் சுடும் நிகழ்பட விளையாட்டு ஆகும். இது வால்வ் கார்ப்ரேசனால் உருவாக்கப்பட்டது. இந்த தொடரின் தொடர்ச்சியான வெளியீடுகளாவன கவுன்டர் ஸ்ட்ரைக்:கன்டிஷன் ஜீரோ, கவுன்டர் ஸ்ட்ரைக்:சோர்ஸ், கவுன்டர் ஸ்ட்ரைக்:குளோபல் அஃபென்சிவ் ஆகியவை ஆகும். இதில் விளையாடுபவர் தீவிரவாதி அல்லது எதிர் தீவிரவாதி என இருவிதங்களாக விளையாடலாம். இது பல சுற்றுகளாக விளையாடப்படும் விளையாட்டு. ஒவ்வொரு சுற்றும் கொடுக்கப்பட்ட குறிக்கோளை முடிப்பதன் மூலமாகவோ அல்லது எதிர் அணியினரை அழிப்பதன் மூலமாகவோ முடிவுக்கு வரும்.
விளையாடுதல்
[தொகு]கவுன்டர் ஸ்ட்ரைக்கில் ஆட்டக்கார்கள் தீவிரவாதிகள் அணியிலோ அல்லது எதிர் தீவிரவாதிகள் அணியிலோ சேரலாம்.ஒரு ஆட்டதின் நேரம் அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள். ஆட்டம் ஒரு வரைப்படதில் நடைபெறும். ஆட்டதின் இலக்குகள் வரைப்படதைப் பொறுத்திருக்கும். சில இலக்குகள் பின்வருபவை:-
- வெடிகுண்டு வைத்தல்: தீவிரவாதிகள் வெடிகுண்டை வரைபடத்தில் உள்ள இரண்டு இடத்திலிருந்து ஏதாவது ஒன்றில் வைக்கவேண்டும். வைத்தபின் அந்த குண்டை எதிர் தீவிரவாதிகள் செயலிழக்கமுடியாமல் செய்யவேண்டும். அப்படி செய்தால் தீவிரவாதிகள் வெற்றி பெருவார்கள். குண்டை செயலிழக்க வைத்தாலோ அல்லது குண்டை வைக்கும்முன் எல்லா தீவிரவாதிகளையும் கொன்றாலோ எதிர் தீவிரவாதிகள் வெற்றி பெருவார்கள்.
- பணையக்கைதிகளைக் காப்பற்றுதல் : தீவிரவாதிகளிடம் அகப்படுள்ள பணையக்கைதிகளை எதிர் தீவிரவாதிகள் மீட்க வேண்டும். அப்படி செய்தாலோ அல்லது எல்லா தீவிரவாதிகளையும் கொன்றாலோ வெற்றி பெருவார்கள். அல்லது தீவிரவாதிகள் வெற்றி பெருவார்கள்.
ஆட்டக்காரர்களுக்கு ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன் சில விநாடிகள் துப்பாக்கிகளும் மற்ற உபகரணங்களும் வாங்குவதற்கும் ஒதுக்கப்படும். ஆட்டதில் முடிவில் உயிருடன் இருப்பவர்கள் அடுத்த ஆட்டத்தில் ஆதே உபகரணங்களுடன் விளையாடுவார்கள். மற்றவர்கள் எல்லவற்றையும் இழந்து முதலில் தரப்படும் உபகரணங்களுடன் ஆரம்பிப்பார்கள். <
ஆட்டக்கரர்கள் செய்யும் வீரதீர சாகசங்களுக்கு தகுந்த சண்மானம் வழங்கப்படும்.
இறந்துபோன ஆட்டக்காரர்கள் ஆட்டம் நடக்கும் மீதி நேரத்திற்கு பார்வையாளர்களாவார்கள். ஆட்டத்தை வெவ்வேறு கோணங்களிலிருந்து அவர்களால் பார்க்க முடியும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ CSNation.net : Counter-Strike version history.