கவுந்தப்பாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவுந்தப்பாடி
கிராமம்
அடைபெயர்(கள்): கவுந்தி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு
தாலுகாபவானி
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்638 455
தொலைபேசி குறியிடு04256
வாகனப் பதிவுTN-36
அருகமைந்த நகரங்கள்ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, அந்தியூர், ஈரோடு,
இணையதளம்http://www.kavunthi.com

கவுந்தப்பாடி (Kavindapadi) தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தில் உள்ள கவுந்தப்பாடி குறுவட்டத்தில் அமைந்த ஒரு வருவாய் கிராமம் ஆகும். [1]ஈரோடு - சத்தியமங்கலம் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்த கவுந்தப்பாடியில் கரும்பு மற்றும் வாழை அதிகம் பயிரிடப்படுகிறது. கவுந்தப்பாடி கைத்தறி நெசவிற்கு புகழ்பெற்றது. சுதந்திரம் அடைந்த காலத்தில் கவுந்தப்பாடி சுதேசி ஜவுளி வர்த்தக சங்கம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கவுந்தப்பாடியில் சனிக்கிழமையன்று நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் வணிகத்திற்கு வாரந்திர சந்தை நடைபெறுகிறது. புதன் கிழமை நடைபெறும் வாராந்திர சந்தை மிகவும் பிரபலம்.

இங்கு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.

இந்த பகுதியில் இயங்கி வரும் E.I.T பாலிடெக்னிக் கல்லூரி டெக்ஸ்டைல் டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளுக்கு பெயர்பெற்றது.

இதனருகே அமைந்த கிராமங்கள் சலங்கப்பாளையம், செந்தம்பாளையம், ஆலத்தூர், வேலம்பாளையம், நல்லிகவுண்டனூர், பூமான்டகவுண்டனூர், அய்யம்பாளையம், பெருந்தலையூர், பி. மேட்டுப்பாளையம், கே. புதூர், பாண்டிப்பாளையம், கொல்லத்துப்பாளையம், வெள்ளாங்கோவில் மற்றும் குச்சரமடை ஆகும்.

கவுந்தப்பாடி கைத்தறி நெசவு[தொகு]

ஈரோடு மாவட்டத்தின் பவானி வட்டத்தில் கவுந்தப்பாடியில் அன்னை இந்திரா கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட், காஞ்சித்தலைவன் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிமிடெட் மற்றும் மாரியம்மன் மகளிர் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் ஆகிய கைத்தறி அமைப்புகளின் மூலம் கைத்தறியில் கால் மிதிகள் நெய்து விற்பனை செய்து வருகின்றனர்[2].[3]

கவுந்தப்பாடி கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் மற்றும் சக்தி தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் மூலமாக கைத்தறித் துண்டுகள் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

கவுந்தப்பாடி கைத்தறித் துணிகள் - Kavindapadi Handloom Clothes

பவானி வட்டத்திற்கு உட்பட்ட கீழ்வானி பகுதியில் வாழ்கின்ற நெசவாளர் கீழ்வானி கைத்தறி உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின் மூலமாக உற்பத்தி மற்றும் விற்பனை நடவடிக்கைகளில் பங்கு கொள்கின்றனர். இப்பகுதியில் கைத்தறியில் கால்மிதிகள் (Handloom door mates) உற்பத்தி செய்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தில் கவுந்தப்பாடி வருவாய் கிராமம்
  2. "தமிழகத்தில் கூட்டுறவு அமைப்பு மூலம் சேமிப்பு". Dinamalar. 2011-11-20. 2022-01-23 அன்று பார்க்கப்பட்டது.
  3. 100010509524078 (2017-10-16). "கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.17 லட்சம் போனஸ்: அமைச்சர் கருப்பணன் வழங்கினார் || Handloom weaver Bonus Minister presented". Maalaimalar (English). 2022-01-23 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவுந்தப்பாடி&oldid=3721092" இருந்து மீள்விக்கப்பட்டது