கவி தாத்
தாதுதன் பிரதாப்தன் காதவி (Dadudan Pratapdan Gadhvi) (11 செப்டம்பர் 1940 - 26 ஏப்ரல் 2021) இந்தியாவின் குசராத்தி மொழிக் கவிஞர் மற்றும் நாட்டுப்புற இசைப்பாடகர் ஆவார். கவி தாது என்றும் அழைக்கப்படுகிறார். 2021ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம சிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1]
வாழ்க்கைச் சுருக்கம்
[தொகு]காத்வி 1940ஆம் ஆண்டில் குஜராத்தின் வீரவல் தாலுகாவைச் சேர்ந்த ஐஸ்வர்ய நகரில் பிறந்தார்.[2] இவருடைய தந்தை ப்ராப்தன் காத்வி ஆவார். அவர் கவிஞராகவும் ஜன்னாக் நவாபின் ஆலோசகராகவும் இருந்தவர். அதனால் அவருக்கு சப்பர் மற்றும் ஐஸ்வர்ய நகர் நவாபால் வழங்கப்பட்டிருந்தது.[3] காத்வியின் அம்மாவின் பெயர் கர்னிபா காத்வி என்பதாகும். காத்வி நான்காம் வகுப்புவரை படித்துள்ளார். காத்வி 15 குஜராத்தி திரைப்பாடல்களை எழுதியுள்ளார். [4] இவருடைய முழுமையான படைப்புகள் தேர்வா (2015) மற்றும் லச்சனயன்(2015) என்னும் பெயரில் வெளியிடப்பட்டன. [5][4] இவருடைய மற்ற படைப்புகள் தேர்வா (4 தொகுதிகள்), சிட்டஹார்னு கீத், ஸ்ரீ கிருஷ்ண சந்தாவளி, ராம்நாம் பரக்ஷாரி ஆகியவை ஆகும்.[5] கலாஜா கேரோ கட்கா மாரோ காந்த்தி சுட்டி காயோ, கைலாஷ் கே நிவாஸ் , தாகோர்ஜி நதி தவு காந்த்வியா மாரே மற்றும் ஹிரன் கால்கலி ஆகியவை இவருடைய பிரபலமடைந்த பாடல்களாகும்.
மேலும் இவர் வங்காள பவனி என்னும் நூலையும் எழுதியுள்ளார். வங்கப் பிரிவினையின் போது எழுதப்பட்ட இந்த நூலின் விற்பனைத் தொகையை வங்க அகதிகள் நிதியாக வழங்கினார்.[4][5]
குஜராத்தின் முன்னாள் முதலமைச்சர் கேசுபாய் பட்டேல் இவரது கவிதையான கல்ஜா கேரோ கட்கோ என்னும் கவிதையின் தாக்கத்தால் மணமகளின் பெற்றோருக்கு நிதியுதவி அளிக்கும் குன்வார்பாய் நு மமேரு என்னும் திட்டத்தைத் தொடங்கினார்.[1]
பாபு காந்தி தாமரே பரானே பெத்தோ, அட்லு ஆஜ் து படாவ், ஆ தேஷ் மா கேடி ஹவ் ராம் ராஜ் ஆவே, தாத் கே ஆசாதி ஃபேரே உகாதி, அனே ஷர்மே முக்தா சூபாவே, ஜஜா தானி நி தானியானி நே பிரபு து லுக்தா பேரவே என்னும் இவரது கவிதை இந்தியாவில் அவசர நிலைப் பிரனடக் காலத்தில் வாசிக்கவும் பாடவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.[2]
சுவாமி ஆனந்தர் அவரது "கத்வையா மாரே தாகோர்ஜி நத்தி தாவு" என்ற கவிதையைக் கேட்டு, அவர் ஒரு இடைக்காலத்தில் வாழ்ந்த துறவி என்று நினைத்தார். பின்னர் அவர் நவீன காலக் கவிஞர் என்பதை அறிந்தார். கவி தாத்தி்ற்கு "புனித கவிஞர் கவி தாத் பாபு" என்று பெயர் சூட்டப்பட்டது.[3]
இறப்பு
[தொகு]கவி தாத் 26 ஏப்ரல் 2021 அன்று இறந்தார்.[6] அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் தெரிவித்துள்ளார்.[7]
அங்கீகாரம்
[தொகு]காத்விக்கு குஜராத்தின் உயரிய விருதான ஜவேர்சந்த் மேக்னி விருது வழங்கப்பட்டது. [4] அவரது இலக்கியப் பங்களிப்புக்காக பத்ம ஸ்ரீ விருது 2021ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.[8][9] 2004ஆம் ஆண்டு கவி கக் விருதினையும் பெற்றுள்ளார்.[6]
குஜராத் ராஜகோட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Keshubhai Patel among five Padma awardees from Gujarat | Ahmedabad News - Times of India" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/keshubhai-patel-among-five-padma-awardees-from-gujarat/articleshow/80454820.cms.
- ↑ Hindi, TV9 (2021-04-27). "गुजराती भाषा के कवि दादू दान गढ़वी का 81 साल की उम्र में निधन, पीएम मोदी ने जताया शोक". TV9 Hindi (in hindi). Retrieved 2021-06-27.
{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link) CS1 maint: unrecognized language (link) - ↑ "'કવિ દાદ'થી ઓળખાતા 'કાળજાના કટકા' દાદુદાન ગઢવીનું અવસાન". BBC News ગુજરાતી (in குஜராத்தி). 2021-04-27. Retrieved 2024-02-05.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "દાદુદાન પ્રતાપદાન ગઢવી કવિ દાદના ઉપનામથી જાણીતાઃ માત્ર ચાર ચોપડી ભણ્યાં હોવા છતાં ગુજરાતી સાહિત્ય ક્ષેત્રે કવિ દાદનું મોટું યોગદાન". Akila News (in குஜராத்தி). 2021-01-26. Archived from the original on 2021-02-03. Retrieved 2021-01-28.
- ↑ 5.0 5.1 5.2 "કવિ દાદુદાન ગઢવીના સમગ્ર કાવ્યસંગ્રહનું કાલે વિમોચન". Divya Bhaskar (in குஜராத்தி). 2016-10-13. Retrieved 2021-01-28.
- ↑ 6.0 6.1 "પદ્મ શ્રી એવોર્ડથી સન્માનિત કવિ દાદ બાપુનું 82 વર્ષની ઉંમરે નિધન". Zee News Gujarati (in குஜராத்தி). 26 April 2021. Retrieved 26 April 2021.
- ↑ "PM Narendra Modi condoles demise of Gujarati poet Dadudan Gadhvi". India Education | Latest Education News | Global Educational News | Recent Educational News (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-04-27. Retrieved 2024-02-05.
- ↑ Shastri, Parth (2021-01-25). "Keshubhai Patel among five Padma awardees from Gujarat". The Times of India (in ஆங்கிலம்). Archived from the original on 2021-01-25. Retrieved 2021-01-28.
- ↑ "જેના પર થાય છે પીએચડી, એવા કવિ દાદ માત્ર 4 ધોરણ પાસ, રચનાની આ છે વિશેષતા". gujarati.abplive.com (in குஜராத்தி). 2021-01-26. Archived from the original on 2021-02-08. Retrieved 2021-01-28.
- ↑ "Kavi Shree Daad Government Arts & Commerce College, Paddhari". gaccpaddhari.ac.in. Retrieved 2024-02-05.