செகவீரபாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கவிராச பண்டிதர் செகவீரபாண்டியன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

கவிராசபண்டிதர் செகவீரபாண்டியனார் (1886 - 1967) இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டபிடாரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். கட்டபொம்மன் வழிவந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். முத்துக்கவிராயர் என்பவரிடம் முறையாக இலக்கண, இலக்கியங்களைக் கற்றவர். சிறந்த புராண சொற்பொழிவாளராகத் திகழ்ந்தவர். கவிதை, உரைநடை, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு வடிவங்களில் நூல் எழுதியவர்.[1] தமிழறிஞர்.

மதுரை மேலமாசி வீதியில் வாழ்ந்து மறைந்தவர்.

படைப்புகள்[தொகு]

செகவீரபாண்டியனாரின் படைப்புகள் 2010-11 ஆம் ஆண்டில் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. தமிழ்நாடு அரசு இதற்கானப் பரிவுத் தொகையாக 6 இலகரம் (இலட்சம்) இந்திய ரூபாய்களை நல்கியது. இவரது படைப்புகளின் பட்டியல் வருமாறு:

வ.எண் ஆண்டு நூலின் பெயர் பதிப்பாளர் குறிப்பு(கள்)
01 1927 திருக்குறள் குமரேச வெண்பா[2] 8 தொகுப்புகள்
02 கம்பன் கவிநிலை உரைநடை 15 தொகுதிகள்
03 அகத்திய முனிவர்[1]
04 வீரபாண்டியம் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான கட்டபொம்மனைப் பற்றி வழங்கிவந்த வாய்மொழி இலக்கியங்களை எல்லாம் தொகுத்து எழுதப்பட்ட காவியம்
05 பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாறு (இரு பாகங்கள்)
06 1945 தமிழர் வீரம்[3]
07 மாசிலாமணி மாலை[1]
08 அணி அறுபது[1]
09 தருமதீபிகை[1] 7 தொகுப்புகள்
10 இந்தியத் தாய்நிலை[1]
11 வீரகாவியம்[1]
12 கவிகளின் காட்சி தொகுதி-1[1]
13 கல்வி நிலை[1]

சான்றடைவு[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 தினமணி செம்மொழிக்கோவை: உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 சிறப்பு மலர், பக்.285
  2. கந்தையா பிள்ளை ந. சி.; தமிழ் இலக்கிய அகராதி : இலக்கிய அகர வரிசை; ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், 53-56 பவழக்காரத் தெரு, சென்னை -1; 1952; பக்.77
  3. கந்தையா பிள்ளை ந. சி.; தமிழ் இலக்கிய அகராதி : இலக்கிய அகர வரிசை; ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், 53-56 பவழக்காரத் தெரு, சென்னை -1; 1952; பக்.70

இக்கட்டுரைகளையும் காணவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செகவீரபாண்டியன்&oldid=2775664" இருந்து மீள்விக்கப்பட்டது