கவிமுகில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவிமுகில் (பிறப்பு: சூன் 16, 1968) எனும் சக்திவேல் ஒரு தமிழக எழுத்தாளர். இவர் தஞ்சாவூர் சோழ மன்னர்களுக்கு ஆத்திமாலை தயாரித்துக் கொடுக்கும் மரபு வழியினர். இவர் கவிமுகில் கவிதைகள், சூரியன் துளிகள், சின்ன உளிகள் என பல கவிதை நூல்களை எழுதியுள்ளார். சில திரைப்படப் பாடல்களையும் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய "பூட்டாங்கயிறு" எனும் புதுக்கவிதை நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிமுகில்&oldid=3438531" இருந்து மீள்விக்கப்பட்டது