கவிதை (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவிதை
kavithaiithazhapr1995.jpg
இதழாசிரியர் அ. யேசுராசா
துறை
வெளியீட்டு சுழற்சி இருமாதம்
மொழி தமிழ்
முதல் இதழ் மார்ச், 1994
இறுதி இதழ் மே, 1995
இதழ்கள் தொகை இதுவரை 9
வெளியீட்டு நிறுவனம்
நாடு யாழ்ப்பாணம், இலங்கை
வலைப்பக்கம் []

கவிதை இளங்கவிஞர்களுக்கான இருமாத இதழ் என்ற அறிவிப்புடன் வெளியான ஒரு சஞ்சிகை. இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான இச்சஞ்சிகையின் ஆசிரியர் அ. யேசுராசா. இது இளங்கவிஞர்களின் கவிதைகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்ததுடன் அவர்களது நேர்காணல்களையும் வெளியிட்டது. மொழிபெயர்ப்புக் கவிதைகள், கவிதை நுட்பங்கள், கவிதை நூல் அறிமுகங்கள், விமர்சனங்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கி இச்சஞ்சிகை வெளிவந்தது. 1994 - 1995 காலப்பகுதியில் வெளியானது. 800 பிரதிகள் அச்சிடப்பட்டு, ஆண்டுச் சிறப்பிதழ் உட்பட ஒன்பது இதழ்கள் வெளிவந்தன. 1995 மாபெரும் இடப்பெயர்வுக்குப் பின் இச் சஞ்சிகை வெளிவரவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதை_(இதழ்)&oldid=3081931" இலிருந்து மீள்விக்கப்பட்டது