கவிதா பதிதார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவிதா பதிதார்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2022
தொகுதிமத்தியப்பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 அக்டோபர் 1975
இந்தூர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)இந்தூர், மத்தியப்பிரதேசம்

கவிதா பதிதார் (Kavita Patidar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். இவர் மத்தியப்பிரதேசம் டாக்டர். அம்பேத்கர் நகர் மாவட்டம் ஆனந்த் நகரில் வசிப்பவர். பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த பதிதார், மத்தியப்பிரதேசத்திலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவை உறுப்பினராக 2022ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவராகவும் உள்ளார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rajya Sabha Polls 2022: Full list of candidates elected unopposed to Upper House". Times Now. 3 June 2022. பார்க்கப்பட்ட நாள் 3 June 2022.
  2. "BJP's Rajya Sabha candidates from Madhya Pradesh file nominations". India Today. 31 May 2022. பார்க்கப்பட்ட நாள் 1 June 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதா_பதிதார்&oldid=3621709" இலிருந்து மீள்விக்கப்பட்டது