உள்ளடக்கத்துக்குச் செல்

கவிதா தேவி (மல்யுத்தம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவிதா தேவி
ஏப்ரல் 2018-இல் நடந்த ஒரு போட்டியின் தொடக்க விழாவில் கவிதா)
இயற்பெயர்கவிதா தலால்
பிறப்பு20 செப்டம்பர் 1986 (1986-09-20) (அகவை 39)
மால்வி, ஜிந்து மாவட்டம், அரியானா, இந்தியா
தொழில்முறை மல்யுத்த வாழ்க்கை
Billed height5 அடி 9 அங் (1.75 m)[1]
Billed fromஅரியானா[1]
பயிற்சியாளர்தி கிரேட் காளீ[1]
உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம்[2]
சாரா டெல் ரே
முதல் போட்டி2016[3]

கவிதா தலால் (Kavita Dalal) (பிறப்பு 20 செப்டம்பர் 1986) ஒரு இந்திய தொழில்முறை மல்யுத்த வீரர் ஆவார். இவர் 2017 மற்றும் 2021 க்கு இடையில் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் கவிதா தேவி என்ற பெயரில் தோன்றினார். இவர் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் மற்போரில் ஈடுப்பட்டதற்காக மிகவும் பிரபலமானவர். மேலும் அதில் மல்யுத்தம் செய்த இந்தியாவைச் சேர்ந்த முதல் பெண் தொழில்முறை மல்யுத்த வீரரரும் ஆவார்.[4] முன்பு கவிதா தேவி மற்றும் ஹார்ட் கேடி என்ற பெயர்களில் சுயாதீன சுற்றில் மல்யுத்தம் செய்தார். குறிப்பாக இந்தியாவில் கண்டம் தொடர்புடைய மல்யுத்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக இவர் மல்யுத்தம் செய்துள்ளார்.[2]

சொந்த வாழ்க்கை

[தொகு]

ஐந்து உடன்பிறப்புகளில் ஒருவரான கவிதா தேவி தலால், இந்தியாவின் அரியானா மாநிலத்தின் ஜிந்து மாவட்டத்தின் ஜுலானா வட்டத்தில் மால்வி என்ற கிராமத்தில் பிறந்தார்.[5] 2009 இல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2010 இல் ஒரு குழந்தை பிறந்தது. அதன் பிறகு மல்யுத்த விளையாட்டை தொடர விரும்பவில்லை. ஆனால் தனது கணவரின் வற்புறுத்தலால் தொடர்ந்து விளையாடினார்.[5]

பளுதூக்குதல் தொழில்

[தொகு]

தேவி, சர்வதேச போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 75 கிலோ பிரிவில் தங்கம் வென்றார்.[1][6]

தொழில்முறை மல்யுத்த வாழ்க்கை

[தொகு]

24 பிப்ரவரி 2016 அன்று, கவிதா தலால் ஒரு தொழில்முறை மல்யுத்த வீரராக தனது பயிற்சியைத் தொடங்க, தி கிரேட் காளியின் கண்டங்களுக்கான மல்யுத்த பொழுதுபோக்கு என்ற விளம்பர நிக்ழச்சியில் நுழைந்தார். தேவி ஜூன் 2016 இல் கவிதா என்ற பெயரில் விளம்பரத்திற்காக அறிமுகமானார். பி. பி. புல் புல் என்பவருடன் மோதினார். ஜூன் 25 அன்று, ஹார்ட் கேடி என்ற புதிய பெயருடன் தோன்றினார், பி. பி. புல் புல் மற்றும் சூப்பர் கல்சா ஆகியோருக்கு எதிரான முதல் கலப்புப் போட்டியில் சாஹில் சாங்வானுடன் இணைந்து விளையாடினார். ஒரு தொழில்முறை மல்யுத்த வீரராக மாற தனது முக்கிய உத்வேகமாக தனது பயிற்சியாளர் தி கிரேட் காளியை கவிதா மேற்கோள் காட்டுகிறார்.

ஜூலை 13 அன்று, அமெரிக்க தொழில்முறை மல்யுத்த ஊக்குவிப்பு நிறுவனமான உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தால் ஊக்குவிக்கப்பட்ட மே யங் கிளாசிக் போட்டியின் பங்கேற்பாளர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டார்.[7] ஆகஸ்ட் 28 அன்று, கவிதா முதல் சுற்றில் நியூசிலாந்தின் தகோடா கை என்பவரால் வெளியேற்றப்பட்டார்.[8]

அக்டோபர் 15,2017 அன்று, தேவி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் அறிவித்தது.[9] 8 ஏப்ரல் 2018 அன்று, தேவி நிறுவனம் நடத்தும் ஒரு போட்டியில் தோன்றினார். அதே நேரத்தில் நிறுவனத்தின் தொழில்முறை மல்யுத்த நிகழ்விலும் அறிமுகமானார். தொடக்கப் போட்டியில் இவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சாரா லோகனால் வெளியேற்றப்பட்டார்.[10] ஏப்ரல் 19 அன்று, தேவி என்எக்ஸ்டி என்ற நேரடி நிகழ்வில் அறிமுகமானார். தகோடா கை மற்றும் எசுடெஃபானி நெவெல் ஆகியோருக்கு எதிராக கனடாவின் அலியாவுடன் இணைந்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் மே யங் கிளாசிக் 2018 போட்டியில் பங்கேற்றார். ஆனால் முதல் சுற்றிலேயே அமெரிக்காவின் கெய்ட்லினுக்கு எதிராக தோல்வியடைந்தார்.[11] 19 மே 2021 அன்று, தேவி உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[12]

வணிக முயற்சிகள்

[தொகு]

ஜனவரி 2019 இல், இந்தியாவில் ஒரு உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் போட்டியைத் தொடங்க வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சோதனைகளைத் தொடங்கினார்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Kavita Devi MYC Biography". உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம். Archived from the original on 13 August 2017. Retrieved 15 October 2017.
  2. 2.0 2.1 "Kavita Devi Cagematch profile". Cagematch. Retrieved 15 October 2017.
  3. "Kavita Devi Wrestlingdata profile". Wrestlingdata. Archived from the original on 16 October 2017. Retrieved 15 October 2017.
  4. "Kavita set to become 1st Indian woman to appear in WWE". tribuneindia.com. 23 June 2017. Archived from the original on 27 August 2017. Retrieved 27 August 2017.
  5. 5.0 5.1 "WWE में कविता दलाल की तरह अब और भारतीय छोरियां भी दिखाएंगी दमखम" (in hi). Dainik Jagran. 16 January 2019. https://www.jagran.com/haryana/hisar-wwe-superstar-kavita-dalal-will-launch-wwe-super-league-in-india-18859832.html. 
  6. "South Asian Games 2016: Gold rush continues for India on 4th day". catchnews.com. 14 February 2017. Archived from the original on 14 May 2016. Retrieved 27 August 2017.
  7. "Mae Young Classic competitors announced at Parade of Champions". WWE. 13 July 2017. Archived from the original on 17 July 2017. Retrieved 15 October 2017.
  8. Richard, Trionfo (28 August 2017). "Mae Young Classic Episode Three Report: Garrett Versus Niven, Belair Versus Beckett, Kai Versus Devi, And Storm Versus Raymond". PWInsider. Archived from the original on 16 October 2017. Retrieved 15 October 2017.
  9. "WWE signs first female talent from India and the Middle East to developmental contracts". உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம். 15 October 2017. Archived from the original on 23 September 2018. Retrieved 15 October 2017.
  10. Stuart, Carapola (8 April 2018). "Complete Wrestlemania 34 Kickoff Show Coverage". PWInsider. Archived from the original on 13 June 2018. Retrieved 9 April 2018.
  11. Williams, JJ (20 April 2018). "Nxt Sanford, Fl, Live Results: Kacy Catanzaro Makes Her Debut". F4WOnline. Archived from the original on 21 April 2018. Retrieved 22 April 2018.
  12. "Eight NXT on-air talent released by WWE". WON/F4W. 19 May 2021. https://www.f4wonline.com/news/nxt/eight-nxt-air-talent-released-wwe-341836. 

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கவிதா தலால்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதா_தேவி_(மல்யுத்தம்)&oldid=4381105" இலிருந்து மீள்விக்கப்பட்டது