உள்ளடக்கத்துக்குச் செல்

கவிதா தெலிகேபள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவிதா தெலிகேபள்ளி (Kavitha Telikepalli)(born 1974) என்பவர் இந்திய கணின் அறிவியலாளர். இவர் வரைபட அல்காரிதம் மற்றும் ஒருங்கிணைந்த தேர்வுமுறை, பொருத்தம், சுழற்சி அடிப்படை, வரைபட ஸ்பேனர் ஆகிய பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டவர். தெலிகேபள்ளி டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் கணினி தொழில்நுட்ப பள்ளியில் பேராசிரியராக உள்ளார்.[1]:{{{3}}}

கல்வி மற்றும் தொழில்

[தொகு]

தெலிகேபள்ளி சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் 1995-இல் கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். இவர் 2002-இல் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[1]:{{{3}}}

2002 முதல் 2004 வரை செருமனியின் சார்ப்ரூக்கனில் உள்ள மேக்ஸ் பிளாங்க் தகவல்நுட்ப நிறுவனத்தில் நிறுவனத்தில் கர்ட் மெல்கார்னுடன் முதுநிலை ஆராய்ச்சிக்குப் பிறகு, 2005-இல் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணியில் சேர இந்தியா திரும்பினார். இவர் 2010-இல் இந்திய அறிவியல் கழகத்திலிருந்து விலகி டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினார். 2011-இல் இணைப் பேராசிரியரானார், மேலும் 2021-இல் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.[1]:{{{3}}}

அங்கீகாரம்

[தொகு]

2007-இல் இந்திய அறிவியல் கழகத்தின் இணை உறுப்பினராக தெலிகேபள்ளி நியமிக்கப்பட்டார்.[2]:{{{3}}} இளம் விஞ்ஞானிகளுக்கான 2008 இந்திய தேசிய அறிவியல் கழக பதக்கம் வென்றவர்களில் இவரும் ஒருவர்.[3]:{{{3}}}[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Curriculum vitae, retrieved 2022-02-06
  2. "Dr Kavitha Telikepalli", Fellows' portal, Indian Academy of Sciences, retrieved 2022-02-06
  3. Recipients of INSA Medal for Young Scientists 1974–2022, Indian National Science Academy, archived from the original on 2022-01-12, retrieved 2022-02-06
  4. "Kavitha Telikepalli". CSA - IISc Bangalore (in ஆங்கிலம்). Retrieved 2023-11-08.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதா_தெலிகேபள்ளி&oldid=3884275" இலிருந்து மீள்விக்கப்பட்டது