உள்ளடக்கத்துக்குச் செல்

கவிதா சேத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவிதா சேத்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு14 செப்டம்பர் 1970 (1970-09-14) (அகவை 54)
பரேலி, பரேலி மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
இசை வடிவங்கள்சூஃபி, பின்னணிப்பாடகி
தொழில்(கள்)கசல் பாடகி, சுஃபி இசை
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு
இணையதளம்www.kavitaseth.com

கவிதா சேத் (Kavita Seth)(பிறப்பு: செப்டம்பர் 14, 1970) ஓர் இந்தியப் பாடகியும், இந்தி திரைத்துறையில் பின்னணிப் பாடகியாகவும், கசல்கள், சூஃபி இசையை நிகழ்த்துபவரும் என்று அறியப்படுகிறார். மேலும் கர்வான் குழு என்ற சூஃபி இசைக் குழுவை வழிநடத்துகிறார். இவர் தற்போது இந்தியாவின் மும்பையில் வசிக்கிறார்.

சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருதை இரண்டு முறை கவிதா சேத் வென்றுள்ளார்: 2010-இல் வேக் அப் சித் (2009) திரைப்படத்தில் "இக்தரா" பாடலைப் பாடியதற்காகவும், 2023-இல் ஜக்ஜக் ஜீயோ (2022) திரைப்படத்தில் "ரங்கிசாரி " பாடலுக்காகவும். 2009-ஆம் ஆண்டில் மிகப்பெரிய தரவரிசைப் பாடல்களில் ஒன்றான முந்தைய பாடலுக்காகச் சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான நட்சத்திரத் திரை (ஸ்டார் ஸ்கிரீன்) விருதையும் இவர் வென்றார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

சேத், உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் ஒரு வங்கி அதிகாரியின் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார்.

தொழில்

[தொகு]
ஜக்ஜித் சிங்கின் ஆண்டு விழாவில் சேத்

கவிதா சூஃபி பாணி பாடலில் நிபுணத்துவம் பெற்றவர். இருப்பினும் இவர் கீத், கஜல், நாட்டுப்புறப் பாடல்களையும் பாடிவருகிறார். பல ஆண்டுகளாக இவர் இலண்டன், பர்மிங்காம், இசுக்காட்லாந்து, பெர்லின், ஒஸ்லோ, ஸ்டாக்ஹோம் மற்றும் இந்தியா முழுவதும் நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். தில்லியில் நடந்த முசாபர் அலியின் சர்வதேசச் சூஃபி விழா இசை நிகழ்ச்சியில் இவரது நிகழ்ச்சியில்தான் இயக்குநர் சதீஷ் கௌசிக் இவரது பாடலைக் கேட்டு, அமிஷா படேல் நடித்த வாடா (2005) திரைப்படத்தில் " ஜிந்தகி கோ மௌலா " என்ற பாடலைப் பாட வாய்ப்பளித்தார். இது பின்னணிப் பாடகியாக இவரது அறிமுகத்தைக் குறிக்கிறது. இதைத் தொடர்ந்து, இவர் மும்பைக்குக் குடிபெயர்ந்தார். இதன் பின்னர் அனுராக் பாசுவின் கேங்ஸ்டார் (2006) படத்தினைத் தொடர்ந்து "முஜே மத் ரோகோ" படத்திற்காக இவருக்குப் பாராட்டுகள் கிடைத்தன.

பாடுவதைத் தவிர, இவர் இசையமைக்கவும் செய்கிறார். அவர் என். சந்திராவின் "யே மேரா இந்தியா " (2009) படத்தில் மூன்று பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் வோ ஏக் லம்ஹா, தில்-இ-நதன் ஆகிய இரண்டு சூஃபி கசல் இசைத் தொகுப்புகளையும் இதைத் தொடர்ந்து சூஃபி இசைத் தொகுப்புகளான சூஃபியானா (2008) மற்றும் அசுரத் ஆகியவற்றையும் வெளியிட்டுள்ளார். சூஃபி கவிஞர்-மந்திரவாதி ரூமியின் இருவரிகளைக் கொண்ட இவரது 2008 இசைத்தொகுப்பான சூஃபியானா, இலக்னோவில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான காமன் பிர் கா தர்காவில் வெளியிடப்பட்டது.[1]

2020ஆம் ஆண்டில், கவிதா பிபிசி தொலைக்காட்சி தொடரான எ சூட்டபிள் பாய்-வின் ஒலிப்பதிவை இயற்றினார். இதே நிகழ்ச்சியில் தபுவின் கதாபாத்திரத்தின் பாடல்களுக்கும் குரல் கொடுத்தார்.[2]

2023-ஆம் ஆண்டில், சர்மிளா தாகூர் நடித்த குல்மோகர் திரைப்படத்தின் இசைத்தொகுப்பிற்கும் கவிதா பங்களித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

கவிதா சேத்திற்கு, கவிசு சேத், கனிஷ்க் சேத் என இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் இவருடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.[3] இவரது கணவர் கே. கே. சேத், 48 வயதில், திசம்பர் 15, 2011 அன்று கணைய அழற்சியால் இறந்தார்.[4]

இசைத்தொகுப்பு

[தொகு]
  • சூஃபியானா (2007)
  • கபீரானா சூஃபியானா (2010)
  • புல்லே ஷா (2010)
  • குதா வோஹி ஹை (2011)
  • ஏக் தின் (2012)
  • குஸ்ரோவுடன் டிரான்ஸ் (2014)
  • லகான் லாகீ ரே (2021)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Recreating Rumi's poetry". DNA. 3 November 2009. http://www.dnaindia.com/entertainment/report_recreating-rumi-s-poetry_1306751. 
  2. Service, Tribune News. "Kavita Seth is still on cloud nine after composing music for Mira Nair's web series A Suitable Boy". Tribuneindia News Service (in ஆங்கிலம்). Retrieved 2021-11-29.
  3. "Juhi at a musical do!". 25 March 2010. http://timesofindia.indiatimes.com/entertainment/filmi-parties/bollywood/Juhi-at-a-musical-do/articleshow/5719023.cms. 
  4. "Singer Kavita Seth's husband dies". http://movies.ndtv.com/movie_story.aspx?ID=ENTEN20110190329&keyword=music&subcatg=MUSICINDIA&nid=158688. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதா_சேத்&oldid=4221999" இலிருந்து மீள்விக்கப்பட்டது