கவிதா சாகல்
| புள்ளிவிபரம் | |
|---|---|
| பிரிவு | 81 கிகி |
| உயரம் | 1.75 m (5 அடி 9 அங்) |
| தேசியம் | இந்தியர் |
| பிறப்பு | 8 ஏப்ரல் 1985[1] |
| பிறந்த இடம் | நிம்ரி, அரியானா, இந்தியா |
| விளையாட்டு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| விளையாட்டு | குத்துச்சண்டை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பயிற்றுவித்தது | ஜெகதீஷ் சிங் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கவிதா சாகல் (பிறப்பு: 8 ஏப்ரல் 1985) என்பவர் 5 அடி 9 அங்குல உயரமுள்ள இந்தியப் பெண் குத்துச்சண்டை வீரர் ஆவார். இவர் 2012 முதல் 2014 வரை உலகின் மிக உயர்ந்த தரவரிசை 2-ஐப் பெற்றவர் (2016 இல் சர்வதேச குத்துச்சண்டைச் சங்கம் தரவரிசை - 11[2]). இவர் அரியானா மாநிலத்தின் பிவானி மாவட்டத்தில் உள்ள நிம்ரி கிராமத்தைச் சேர்ந்தவர்.[3] இவரது சாதனைகளைப் பாராட்டி, இந்திய அரசு 2013-ல் இவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது.[4] அர்ஜுனா விருது பெற்ற அரியானாவின் முதல் பெண் குத்துச்சண்டை வீரரும் இவரேயாவார்.
சாகல் தொடர்ந்து இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்றவர் மற்றும் உலகக் காவல்துறை விளையாட்டுகளில் 3 முறை தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார். மேலும் இவர் 4 முறை ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் ஆசியக் கோப்பை பதக்கங்களையும் வென்றுள்ளார். 9 தங்கப் பதக்கங்களுடன் பெண்களுக்கான தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் சாதனை படைத்தவர். இவர் கூட்டமைப்புக் கோப்பையில் 5 முறையும், 2012 முதல் 2018 வரை அகில இந்தியக் காவல்துறை விளையாட்டுகளில் 7 முறையும் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடதக்கது. மண்டலங்களுக்கு இடையேயான சூப்பர் கோப்பை சாம்பியன்ஷிப்பில் இவர் 3 முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]கவிதா, 1985 ஏப்ரல் 8 அன்று இந்தியாவின் அரியானா மாநிலத்திலுள்ள பிவானி மாவட்டத்தின் நிம்ரி கிராமத்திலுள்ள திரு பூப் சிங் மற்றும் ரமேஷ் தேவி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். பிவானி மாவட்டம் தேசிய அளவிலான குத்துச்சண்டை விளையாட்டில் இது ஒரு புகழ்பெற்ற ஒரு இடமாகும்; மேலும் இது தொழில்முறை குத்துச்சண்டை வீரரான விஜேந்தர் சிங் பிறந்த இடமாகவும் அறியப்படுகிறது.
குத்துச்சண்டை வீரரான இவரது தந்தை திரு பூப் சிங்கிடமே கவிதா தனது ஆரம்பக்கால பயிற்சியைப் பெற்றார். தனது திறமையை வளர்த்துக் கொண்ட பிறகு, பிவானி குத்துச்சண்டை கழகத்தில் புகழ்பெற்ற இந்திய ஆண் குத்துச்சண்டை வீரர்களுக்குப் பயிற்சியளிக்கும் பயிற்சியாளர் ஜெகதீஷ் சிங்கிடம் இணைந்து உயர் பயிற்சியைப் பெற்றார்.
தனது மாநிலத்திற்காகவும் இந்தியாவிற்காகவும் பல பதக்கங்களையும் பாராட்டுகளையும் வென்ற இவர், 2013-ஆம் ஆண்டில் அரியானா மாநிலத்திலிருந்து அர்ஜுனா விருது பெற்ற முதல் பெண் குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
சர்வதேசப் போட்டிகள்
[தொகு]| வ. எண் | போட்டி | ஆண்டு / காலம் | இடம் | முடிவு / பதக்கம் |
|---|---|---|---|---|
| 1 | உலக மகளிர் குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2014 நவம்பர் 16–24 | ஜேஜூ நகரம், கொரியா | 5-ஆம் இடம் |
| 2 | 3-வது நேஷன்ஸ் கோப்பை | 2014 சனவரி 12 | செர்பியா | வெண்கலம் |
| 3 | உலகக் காவல் துறை விளையாட்டுப் போட்டிகள் | 2013 ஆகத்து 1–10 | அயர்லாந்து | தங்கம் |
| 4 | 7-வது உலக மகளிர் குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2012 மே 9–20 | சீனா | வெண்கலம் |
| 5 | 6-வது ஆசிய மகளிர் குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2012 மார்ச் 16–26 | மங்கோலியா | வெண்கலம் |
| 6 | 1-வது ஆசியக் கோப்பை மகளிர் குத்துச்சண்டை தொடர் | 2011 மே 7–8 | ஹைய்கோ, சீனா | வெண்கலம் |
| 7 | 6-வது உலக மகளிர் குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2010 செப்டம்பர் 7–19 | பார்படோஸ், மேற்கிந்தியத் தீவுகள் | வெண்கலம் |
| 8 | 5-வது ஆசிய மகளிர் குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2010 மே 23–31 | அஸ்தானா, கசக்கஸ்தான் | வெண்கலம் |
| 9 | சர்வதேச பிரதம மந்திரி குத்துச்சண்டை தொடர் | 2010 ஏப்ரல் 7–11 | துருக்கி | வெண்கலம் |
| 10 | சர்வதேச பிரதம மந்திரி குத்துச்சண்டை தொடர் | 2009 | துருக்கி | காலிறுதி |
| 11 | 4-வது ஆசிய மகளிர் குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2008 | குவஹாத்தி | வெள்ளி |
| 12 | இரட்டைப் பயிற்சி மற்றும் போட்டித் தொடர் | 2008 | கனடா | வெள்ளி |
சர்வதேச சாதனைகள்
[தொகு]- உலக வாகையர் தொடர்: 2010 (பார்படோஸ்) மற்றும் 2012 (சீனா) ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகப் பெண் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
- ஆசிய போட்டிகள்: ஆசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிகளிலும் இவர் பல பதக்கங்களை வென்றுள்ளார்.
தேசிய அளவிலான சாதனைகள்
[தொகு]| வ. எண் | போட்டி | ஆண்டு / காலம் | இடம் | முடிவு / பதக்கம் |
|---|---|---|---|---|
| 1 | அகில இந்திய காவல் துறை விளையாட்டுப் போட்டிகள் | 2015 மார்ச் 1–5 | புது தில்லி | தங்கம் |
| 2 | 1-வது மோனட் எலைட் மகளிர் தேசிய குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2014 அக்டோபர் 11–16 | ராய்ப்பூர், சத்தீசுகர் | தங்கம் |
| 3 | 14-வது மூத்தோர் மகளிர் தேசிய குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2013 மே 18–23 | உத்தராகண்டம் | தங்கம் |
| 4 | 13-வது மூத்தோர் மகளிர் தேசிய குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2012 நவம்பர் 25–29 | குவஹாத்தி, அசாம் | தங்கம் |
| 5 | 61-வது அகில இந்திய காவல் துறை விளையாட்டுப் போட்டிகள் | 2012 நவம்பர் | தில்லி | தங்கம் |
| 6 | 60-வது அகில இந்திய காவல் துறை விளையாட்டுப் போட்டிகள் | 2012 மார்ச் | தில்லி | தங்கம் |
| 7 | 4-வது மண்டலங்களுக்கு இடையிலான மகளிர் தேசிய குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2012 சூலை 12–15 | ஆந்திரப் பிரதேசம் | தங்கம் |
| 8 | அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகள் | 2011 சனவரி | உதய்ப்பூர் | தங்கம் |
| 9 | 3-வது மண்டலங்களுக்கு இடையிலான மகளிர் தேசிய குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2011 | புதுச்சேரி | தங்கம் |
| 10 | 12-வது மூத்தோர் மகளிர் குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2011 | போபால் | தங்கம் |
| 11 | 34-வது கூட்டமைப்புக் கோப்பை (Federation Cup) மகளிர் குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2011 | நைனிடால் | தங்கம் |
| 12 | 1-வது மண்டலங்களுக்கு இடையிலான மகளிர் தேசிய குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2010 | திருப்பூர், தமிழ்நாடு | தங்கம் |
| 13 | 33-வது கூட்டமைப்புக் கோப்பை குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2010 நவம்பர் 18–21 | நைனிடால் | தங்கம் |
| 14 | 10-வது மூத்தோர் மகளிர் தேசிய குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2009 | ஜாம்ஷெட்பூர் | தங்கம் |
| 15 | என். சி. சர்மா நினைவு கூட்டமைப்புக் கோப்பை மகளிர் குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2009 | — | தங்கம் |
| 16 | கூட்டமைப்புக் கோப்பை மகளிர் குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2009 | தமிழ்நாடு | தங்கம் |
| 17 | 9-வது மூத்தோர் மகளிர் தேசிய குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2008 நவம்பர் | ஆக்ரா | தங்கம் |
| 18 | வைசாக் ஸ்டீல் மூத்தோர் மகளிர் தேசிய குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2008 சூன் | விசாகப்பட்டினம் | தங்கம் |
| 19 | எஸ். ஆர். எம். கூட்டமைப்புக் கோப்பை 2007 | 2007 | காட்டாங்குளத்தூர், காஞ்சிபுரம் | தங்கம் |
| 20 | 1-வது அகில இந்திய மகளிர் மூத்தோர் குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2006 | நைனிடால் | தங்கம் |
| 21 | 11-வது மூத்தோர் மகளிர் தேசிய குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2010 திசம்பர் 5–10 | திருச்சூர் | வெள்ளி |
| 22 | 7-வது மூத்தோர் மகளிர் தேசிய குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2006 திசம்பர் | விசாகப்பட்டினம் | வெள்ளி |
| 23 | 34-வது சார்க்கண்ட் தேசிய விளையாட்டுப் போட்டிகள் | 2011 பிப்ரவரி 17–24 | சார்க்கண்டு | வெண்கலம் |
| 24 | 8-வது மூத்தோர் மகளிர் தேசிய குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2007 | ருத்ராபூர் | வெண்கலம் |
| 25 | 33-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் | 2007 | குவஹாத்தி | வெண்கலம் |
தேசிய அளவிலான சாதனைக் குறிப்புகள்
[தொகு]| வ. எண் | போட்டி | ஆண்டு / காலம் | இடம் | முடிவு / பதக்கம் |
|---|---|---|---|---|
| 1 | 1-வது மோனட் எலைட் மகளிர் தேசிய குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2014 அக்டோபர் 11–16 | ராய்ப்பூர், சத்தீசுகர் | தங்கம் |
| 2 | 14-வது மூத்தோர் மகளிர் தேசிய குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2013 மே 18–23 | உத்தராகண்டம் | தங்கம் |
| 3 | 13-வது மூத்தோர் மகளிர் தேசிய குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2012 நவம்பர் 25–29 | குவஹாத்தி, அசாம் | தங்கம் |
| 4 | 12-வது மூத்தோர் மகளிர் குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2011 | போபால் | தங்கம் |
| 5 | 10-வது மூத்தோர் மகளிர் தேசிய குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2009 | ஜாம்ஷெட்பூர் | தங்கம் |
| 6 | 9-வது மூத்தோர் மகளிர் தேசிய குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2008 நவம்பர் | ஆக்ரா | தங்கம் |
| 7 | வைசாக் ஸ்டீல் மூத்தோர் மகளிர் தேசிய குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2008 சூன் | விசாகப்பட்டினம் | தங்கம் |
| 8 | 1-வது அகில இந்திய மகளிர் மூத்தோர் குத்துச்சண்டை வாகையர் தொடர் | 2006 | நைனிடால் | தங்கம் |
விருதுகளும் அங்கீகாரங்களும்
[தொகு]- 2013-ஆம் ஆண்டில் இந்திய அரசின் அர்ஜுனா விருது [4]
- 2014-ஆம் ஆண்டில் அரியானா அரசின் உயரிய விளையாட்டு விருதான பீம் விருது [5]
சிறந்த உலகத் தரவரிசைகள்
[தொகு]சர்வதேசக் குத்துச்சண்டை சங்கத்தின் (AIBA) தரவரிசைப்படி, 81 கிலோவிற்கும் மேற்பட்ட எடைப்பிரிவில் (81+ KG) கவிதா அவர்கள் பெற்றுள்ள தரவரிசை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
நடைமுறைக்கு வந்த நாள்: 2012 சூலை 1
| உலகத் தரவரிசை | பெயர் | நாடு | புள்ளிகள் | முந்தைய தரவரிசை |
|---|---|---|---|---|
| 1 | லி,யுன்பீ | சீனா | 2700 | 1 |
| 2 | கவிதா | இந்தியா | 1700 | 3 |
| 3 | செம்சி,யாராலி | துருக்கி | 1550 | 2 |
| 4 | லசாட்,குங்கேபாயேவா | கசக்கஸ்தான் | 1400 | 8 |
| 5 | இரினா,சினெட்ஸ்காய் | உருசியா | 1300 | 7 |
| 6 | டேனிஜெல, வெர்னிக் | குரோவாசியா | 950 | 14 |
| 7 | கேடரினா,ஷாம்பிர் | உக்ரைன் | 950 | 11 |
| 8 | கேடரினா,குஷெல் | உக்ரைன் | 800 | 4 |
| 9 | எரிகா, கப்ரேரா | பிரேசில் | 800 | 5 |
| 10 | விக்டோரியா, கிரைலோவா | உருசியா | 800 | 6 |
| 11 | விக்டோரியா, பெரெஸ் | அமெரிக்கா | 600 | 9 |
| 12 | சோனா,ஹக்வெர்டியன் | சுவீடன் | 600 | 10 |
| 13 | பதம் காந்த் | மங்கோலியா | 500 | 12 |
| 14 | புர்கு, கிலிக் | துருக்கி | 500 | 13 |
| 15 | ஒக்சானா, உகாரியோவா | கசக்கஸ்தான் | 450 | 15 |
| 16 | பெட்ரா, சாட்மாரி | அங்கேரி | 400 | — |
| 17 | டெனிஸ், ரிகோ | அமெரிக்கா | 400 | 16 |
| 18 | அன்னா, ஸ்லோவிக் | போலந்து | 390 | 17 |
| 19 | அட்ரியானா, ஹோசு | உருமேனியா | 350 | 18 |
| 20 | இசபெல்லா, பாவ்லோவ்ஸ்கா | போலந்து | 300 | 19 |
| 21 | டயானா, கெர்கெல் | உருமேனியா | 250 | — |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சாகல், கவிதா (2013). Unbreakable.
- ↑ "கவிதா சாகல்: இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனையின் சுயவிவரம் மற்றும் சாதனைகள்". Sportsmatik (in ஆங்கிலம்). 2024-02-16. Retrieved 2026-05-14.
- ↑ "Indian Boxing Federation Boxer Details". Indiaboxing.in. Archived from the original on 2017-08-13. Retrieved 2017-01-12.
- 1 2 "Sodhi conferred Khel Ratna; Arjuna awards for 14 others". Timesofindia.indiatimes.com. 2013-08-31. Retrieved 2017-01-12.
- ↑ "Haryana to honour 17 sportsperson with 'Bhim' award". Timesofindia.indiatimes.com (in ஆங்கிலம்). 2014-01-18. Retrieved 2017-01-12.