உள்ளடக்கத்துக்குச் செல்

கவிசா தில்கரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவிசா தில்கரி
2020 ஐசிசி மகளிர் இருபது20 உலகக் கிண்ணத்தின் போது இலங்கைக்காக தில்கரி துடுப்பாட்டம் செய்கிறார்.
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்வெலிகோன்தகே கவிசா தில்கரி
பிறப்பு24 சனவரி 2001 (2001-01-24) (அகவை 25)
ரத்கம, இலங்கை
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை வலத்திருப்பு வீச்சு
பங்குஅனைத்து நிலையிலும்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 70)20 மாா்ச்சு 2018 எ. பாக்கித்தான்
கடைசி ஒநாப18 சூன் 2024 எ. மேற்கிந்தியத் தீவுகள்
இ20ப அறிமுகம் (தொப்பி 45)19 செப்டம்பா் 2018 எ. இந்தியா
கடைசி இ20ப13 ஆகத்து 2024 எ. அயர்லாந்து
இ20ப சட்டை எண்6
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெஒநா பெஇ20
ஆட்டங்கள் 23 62
ஓட்டங்கள் 403 483
மட்டையாட்ட சராசரி 25.18 14.63
100கள்/50கள் 0/1 0/1
அதியுயர் ஓட்டம் 84 51 ஆட்டம் இழக்காமல்
வீசிய பந்துகள் 677 1114
வீழ்த்தல்கள் 22 50
பந்துவீச்சு சராசரி 30.77 22.28
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 4/20 4/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 28/–
பதக்கத் தகவல்கள்
நாடு  இலங்கை
மகளிர் துடுப்பாட்டம்
ஆசிய விளையாட்டு
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்2022 காங்சோகுழு
தெற்காசிய விளையாட்டு
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்2019 காத்மண்டு/பொக்காராகுழு
மகளிர் ஆசிய கோப்பை
இறுதிப் போட்டியாளர்2022 வங்காளதேசம்
வெற்றியாளர்2024 இலங்கை
மூலம்: Cricinfo, 14 ஆகத்து 2024

கவிசா தில்கரி (Kavisha Dilhari) (பிறப்பு 24 சனவரி 2001) என்பவர்இலங்கைத் துடுப்பாட்ட வீராங்கனை ஆவார். இவர் மகளிர் தேசியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடுகிறார். இவர் தனது பதினைந்தாவது வயதிலிருந்தே உள்ளூர் துடுப்பாட்டத்தில் விளையாடி வருகிறார்.[1][2][3] இவர் 20 மார்ச்சு 2018 அன்று பாக்கித்தான் மகளிர் அணிக்கு எதிராக இலங்கை மகளிர் அணிக்காக தனது மகளிர் ஒருநாள் சர்வதேச துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[4]

செப்டம்பர் 2018இல், இந்தியாவிற்கு எதிரான தொடருக்கான இலங்கையின் மகளிர் இருபது20 சர்வதேச அணியில் இவர் இடம்பெற்றார்.[5] இவர் 19 செப்டம்பர் 2018 அன்று இந்திய மகளிர் அணிக்கு எதிராக இலங்கைக்காக தனது இருபது20 போட்டியில் அறிமுகமானார்.[6]

அக்டோபர் 2018இல், மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற 2018 ஐசிசி மகளிர் உலக இருபது20 போட்டிக்கான இலங்கை அணியில் இவர் இடம்பெற்றார்.[7] நவம்பர் 2019இல், 2019 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் துடுப்பாட்டப் போட்டிக்கான இலங்கை அணியின் துணைத் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார்.[8] இறுதிப் போட்டியில் வங்கதேசத்திடம் இரண்டு ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்ற பிறகு, இலங்கை அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.[9] சனவரி 2020இல், ஆத்திரேலியாவில் நடைபெற்ற 2020 ஐசிசி மகளிர் இருபது20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியில் இவர் இடம்பெற்றார்.[10] அக்டோபர் 2021இல், சிம்பாப்வேயில் நடைபெற்ற 2021 மகளிர் துடுப்பாட்ட உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டிக்கான இலங்கை அணியில் இவர் இடம்பெற்றார்.[11] சனவரி 2022இல், மலேசியாவில் நடைபெற்ற 2022 நாடுகளின் பொதுநலவாயம் விளையாட்டுப் போட்டிகளுக்கான துடுப்பாட்டத் தகுதிச் சுற்றுப் போட்டிக்கான இலங்கை அணியில் இவர் இடம்பெற்றார்.[12] இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்ற 2022 நாடுகளின் பொதுநலவாயம் விளையாட்டுப் போட்டிகளுக்கான இலங்கைத் துடுப்பாட்ட அணியிலும்,[13] 2024 ஐசிசி மகளிர் இருபது20 உலகக் கிண்ணத்திலும் [14] இவர் இடம்பெற்றிருந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Kavisha Dilhari". ESPN Cricinfo. Retrieved 20 March 2018.
  2. ↑ "20 women cricketers for the 2020s". The Cricket Monthly. Retrieved 24 November 2020.
  3. ↑ "SL pick teenager Dilhari for ODIs; Atapattu returns as captain". ESPN Cricinfo. Retrieved 20 March 2018.
  4. ↑ "1st ODI, ICC Women's Championship at Dambulla, Mar 20 2018". ESPN Cricinfo. Retrieved 20 March 2018.
  5. ↑ "Teenager Dilhari gets maiden T20I call-up after stunning India in ODI series ender". ESPN Cricinfo. Retrieved 18 September 2018.
  6. ↑ "1st T20I, India Women tour of Sri Lanka at Katunayake, Sep 19 2018". ESPN Cricinfo. Retrieved 19 September 2018.
  7. ↑ "Squads confirmed for ICC Women's World T20 2018". International Cricket Council. Retrieved 10 October 2018.
  8. ↑ "Sri Lanka pick cricket squads for South Asian Games". Sunday Observer. Retrieved 30 November 2019.
  9. ↑ "Bangladesh women's cricket team clinch gold in SA games". The Daily Star. Retrieved 8 December 2019.
  10. ↑ "Sri Lanka squad for ICC Women's T20I World Cup 2020". Sri Lanka Cricket. Retrieved 27 January 2020.
  11. ↑ "Chamari Atapattu to lead 17-member Sri Lankan squad in ICC World Cup Qualifiers". Women's CricZone. Archived from the original on 21 September 2024. Retrieved 6 October 2021.
  12. ↑ "Sri Lanka Women's Squad for Commonwealth Games Qualifier 2022". Sri Lanka Cricket. Retrieved 6 January 2022.
  13. ↑ "Sri Lanka finalise squad for upcoming Commonwealth Games". International Cricket Council. Retrieved 19 July 2022.
  14. ↑ "Sri Lanka squad for the ICC Women's T20 World Cup 2024". Sri Lanka Cricket. Retrieved 3 October 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிசா_தில்கரி&oldid=4553829" இலிருந்து மீள்விக்கப்பட்டது