கவார் ரிஸ்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவார் ரிஸ்வி (ஆங்கிலம் : Khawar Rizvi) ( பிறப்பு:1938 ஜூன் 1 & இறப்பு:1981 நவம்பர் 15) இவர் ஒரு உருது மற்றும் பாரசீக மொழியின் முக்கிய கவிஞராவார். இவர் ஒரு அறிவார்ந்தவராகவும் கல்விமானாகவும் மதிக்கப்பட்டார். முக்கியமாக இவரது புகழுக்கு காரணம் இவரது கவிதையே ஆகும். இவரது இயற்பெயர் சையத் சிப்டே ஹசன் ரிஸ்வி என்பதாகும். இவர் கவிதை மற்றும் கட்டுரைகளை எழுதுவதற்கு "கவார்" என்றப் புனைப்பெயரை பயன்படுத்தினார். கவார் என்றால் பாரசீக மொழியில் "கிழக்கு" என்று பொருள்படும். கவார் கிழகை விரும்பவராகவும், கிழக்கின் வாழ்க்கை முறை மற்றும் கிழக்கு விழுமியங்களை ரசிப்பவராகவும் இருந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

கவார் ரிஸ்வி ஒரு மேன்மையான சையத் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் 1938 ஜூன் 1 அன்று பிறந்தார். இவரது உண்மையான பிறந்த ஆண்டு 1936 என்று சில ஆதாரங்கள் கூறுகின்றன. ஆனால் இவர் 1938 இல் பிறந்தார் என்று அதிகாரப்பூர்வ ஆவணங்கள் காட்டுகின்றன. இவர் தனது தாயார் அபிதா பேகமிடமிருந்து கவிதைகளை கற்றுள்ளார். அபிதா பேகத்தின் கவிதைகள் பெரும்பாலானவற்றைப் பாதுகாக்க முடியவில்லை என்றாலும், அவர் ஒரு திறமையான கவிஞராக இருந்துள்ளார். இவரது தாய்மாமன் மருத்துவர் அபுல் அசன் ஒரு பிரபலமான கவிஞரும் அறிஞருமாவார். இவரது அத்தை பானோ சைத்புரியும் ஒரு சிறந்த கவிஞராவார். கவார் ரிஸ்வியின் தந்தை சையத் நஜ்ம் உல் ஹசன் ரிஸ்வி பாக்கித்தானின் ஆயுதப்படைகளில் பணியாற்றிவர்.

கவார் ரிஸ்வி தனது சிறுவயதிலிருந்தே அறிவு மற்றும் கற்றலை விரும்பினார். இப்போது அட்டோக் என்று அழைக்கப்படும் காம்ப்பெல்பூர் என்ற ஊரில் அரசு பள்ளியில் கல்வி கற்றார். பின்னர், அட்டோக்கிலுள்ள அரசு கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர் பின்னர் வங்கித் துறையில் சேர்ந்து திறமையான வங்கியாளரானார். ஏழைகளை அவர்களின் உரிமைகளிலிருந்து பறித்ததற்காக இவர் அதிருப்தியடைந்து வங்கித் தொழிலை விட்டு வெளியேறினார்.

பின்னர் மக்களுக்கு சிறப்பாக சேவைகளை செய்ய, கவார் பாக்கித்தானில் சமூக பாதுகாப்புத் துறையில் சேர்ந்தார். 1981 நவம்பர் 15, அன்று தனது சொந்த ஊரிலிருந்து தனது பணியிடத்திற்குச் செல்லும்போது திடீர் மாரடைப்பால் இறக்கும் வரை அதே துறையில் இயக்குநராக பணியாற்றி வந்தார். இவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இவர் பாகிஸ்தானின் ஜாங் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறிய நகரமான அஹ்மத் புர் சியாலின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். 43 வயதில் இவரது மரணம் கண்டம் முழுவதும், குறிப்பாக தெற்காசியாவின் பிராந்தியம் பரவலாக துக்கப்பட்டது.

கருத்தியல் மற்றும் செயல்பாடுகள்[தொகு]

கவார் ரிஸ்வி ஒரு நாற்காலிச் சிந்தனையாளராகவோ அல்லது ஒரு தனி அறை புரட்சியாளராகவோ இருக்கவில்லை. இவர் தனது காலத்தின் அரசியல் மற்றும் அறிவுசார் இயக்கங்களில் தீவிரமாக பங்கேற்றார். இவர் இந்தியா மற்றும் பாக்கித்தானின் துணைக் கண்டத்தில் உள்ள பிரபலமான முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர். கவார் அனைத்து வகையான மற்றும் கொடுங்கோன்மை, சர்வாதிகாரம், அடிபணிதல் மற்றும் சுரண்டலுக்கு எதிரானவர். இவரது சித்தாந்தம் மற்றும் அரசியல் நம்பிக்கைகள் காரணமாக இவர் பாக்கித்தானின் அப்போதைய சர்வாதிகார ஆட்சியாளரான ஜெனரல் ஜியா-உல்-ஹக்கின் கொள்கைகளுக்கு பலியானார். கருத்துச் சுதந்திரம், சிவில் உரிமைகள், மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் வறுமையை ஒழிப்பதற்காக இவர் போராடினார்.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவார்_ரிஸ்வி&oldid=2888498" இலிருந்து மீள்விக்கப்பட்டது