கவாஜா சம்சுதீன் கவாபி
கவாஜா சம்சுதீன் கவாபி (Khawaja Shamsuddin Khawafi) இவர் பேரரசர் அக்பரின் அமைச்சராகவும் கட்டுமான கண்காணிப்பாளராகவும் இருந்தார். இவர் ஜெய்ன் கான் கோகா என்பவருக்குப் பின்னர் பதவிக்கு வந்தார். ஹசன் அப்தால் நகரில் ஹக்கீம்களின் கல்லறை என்ற இவரது கல்லறை அட்டோக் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
பணிகள்
[தொகு]இவர் அக்பரின் உத்தரவின் பேரில் கி.பி.1581 மற்றும் 1583 க்கு கட்டப்பட்ட ஹக்கீம்களின் கல்லறையில் மீன்களுக்கான ஒரு குளத்தையும், குருத்வாரா ஒன்றையும் கட்டினார்.
சிந்து ஆற்றை கடந்து செல்லும் முகலாயப் படைகளைப் பாதுகாப்பதற்காக இவரது மேற்பார்வையின் கீழ் 1581 மற்றும் 1583 க்கு இடையில் அட்டோக் கோட்டையும் கட்டப்பட்டது.
1598 இல் அக்பர் தக்காணத்தின் மீது படையெடுக்கப் புறப்பட்டபோது பஞ்சாபின் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இறப்பு
[தொகு]இவர் 1600 இல் லாகூரில் இறந்தார். இவர் "எளிமையான நடத்தை, நேர்மையான மற்றும் உண்மையுள்ள, வியாபாரத்தை பரிவர்த்தனை செய்வதில் நடைமுறைக்குரியவர்" என்று கூறப்படுகிறது. கம்ராவுக்கு எதிரே உள்ள புகழ்பெற்ற கிராமமான ஷம்சாபாத் 1580 களில் இவரால் உருவாக்கப்பட்டது.
குறிப்புகள்
[தொகு]- Du Jarric, P. (1996). Akbar and the Jesuits: An Account of the Jesuit Missions to the Court of Akbar. Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120610699. பார்க்கப்பட்ட நாள் 2015-11-09.
- "Shrines Tombs & Mosques in Pakistan". cybercity-online.net. பார்க்கப்பட்ட நாள் 2015-11-09.